August 18, 2020

தென்னை இலை உறிஞ்சு குழல் (Straw)

சாஜி வர்கிஸ், 51 வயது, இணைப்பேராசிரியர், பெங்களூரு கிரிஸ்த்து பல்கலை கழகத்தில், ஆங்கிலத் துறையில் பணியாற்றுபவர். சாலை ஓரங்களிலும், குப்பை களிலும் பெருமளவில் காணப்படும் தென்னை ஓலைகளை ஏன் இயற்கை முறையில் பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் தென்னை இலை உறிஞ்சு குழல் (Coconut Leaf Straw).

தென்னை இலை கூரை தட்டிகளாகவும், பின்னிய கூடைகளாகவும், தென்னை துடைப்பமாகவும், பல்குத்தும் குச்சிகளாகவும் பயன்பாட்டில் இருந்தாலும் தென்னை இலை உறிஞ் குழல் (straw) ஆகவும் மற்றுமொரு பயன்பாடாக இருக்கமுடியும் என்று சாஜி வர்கீஸ் கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளார்.


இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 28,000 டன்கள் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகிறது என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இப்போது வரையில் பெரும்பாலும் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் பயன்பாட்டினை முழுமையாக தென்னை உறிஞ்சு குழல்கள் மாற்ற இயலும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த தென்னை இலை உறிஞ்சு குழல் கண்டுபிடிப்பிற்கு பெருமளவில் கிருஸ்து பல்கலைக்கழக மாணவர்களும் வடிவமைப்பு பொறியாளர்களும் (Design Engineers) பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. தயாரிப்பில் இயற்கை பசைககளே பயன்படுத்தப்பட்டுள்ளது ரசாயனங்கள் ஏதுமில்லை. தென்னை இலைகள் முதலில் மூன்று அடுக்கு சுத்தப்படுத்தல் செய்த பிறகு உணவு தர பசைகள் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழகத்தின் மாணவர்களே மிகக் குறைந்த செலவில் இயந்திரத்தை உருவாக்கி உள்ளனர். வணிகரீதியில் தயாரிக்கப்படும் இந்த வகை உறிஞ்சி குழல்களுக்கு "சன் பேர்டு ஸ்டிராஸ்" (Sun Bird Straws) என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

சிறப்புகள் :

- பசுமை சூழலுக்கு உகந்த இயற்கை கண்டுபிடிப்பு.

- உபயோகத்திற்கு பின் அழியக்கூடியது (Bio Degradable).

- இயற்கையாகவே பூஞ்சாணத்திற்கு எதிர்ப்பானது.(Antifungal)

- எந்தவகை திரவத்திலும் வளைந்து நசியாமல் நீண்ட நேரம் இருக்கும்.

- 6 மாதங்கள் வரையில் உபயோகிக்கலாம்

- தேவையான அளவுகளில் பெறமுடியும்.

- தயாரிப்பு முறைகள் முற்றிலும் சுலபமானது

- எந்தவிதமான ரசாயனமும் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதில்லை.

- கிராமிய பெண்கள் வருமானம் ஈட்டி பொருளாதார சுதந்திரம் பெற உதவுகிறது.

தற்சமயம் "சன்பேர்டு ஸ்டிரா " ஒன்றின் விலை ரூ.3 -/- ஆக உள்ளதால் இந்தியாவில் பெரிய நட்சத்திர ஓட்டல்களிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொருட்களின் 45 நாடுகள் பங்கேற்ற கண்காட்சியில் நெதர்லாந்தின் "கிளைமேட் லாஞ்ச் பேட்" (Climate Launch Pad) விருதினை "சன் பேர்ட் ஸ்டிரா" பெற்றுள்ளது.

மேலும் EDII (Entrepreneurship Development Institute of India) "ஸ் ரேஷ்ட்டா உத்யாமிகுருபுரஸ்கார் (Sreshta Udyami Guru Puraskar)" சன் பேர்ட் ஸ்டிரா விற்கு சிறந்த சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இயற்கை பயன்பாடு பொருளுக்கான விருதினை அளித்து கௌரவ படுத்திஉள்ளது. இந்தியாவில் இதுவரை வணிகரீதியாக பெரிய அளவு சாதனை படைக்காவிட்டாலும் வெளிநாடுகளில், குறிப்பாக மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து 2 கோடிக்கு மேல் கோரி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories