February 03, 2022

முருங்கையில் 15 வகை அழகு சாதன பொருட்கள் மதிப்புக்கூட்டி விற்பனை (15 types of moringa value addition)

இந்திய விவசாயிகளின் சோதனைகள் மற்றும் இன்னல்கள் பல வகைப்பட்டது. இவற்றில் இயற்கை இடர்களாக வறட்சி மற்றும் அபரிமிதமான மழை பாதிப்புகளுடன் விளைவித்த விளை பொருட்களை விற்க போதுமான சந்தை வாய்ப்புகளும் சமச்சீரற்ற விலையும் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.இயற்கை அழிவுகளை பெரிய அளவில் சரிசெய்ய முடியாவிட்டாலும் சந்தை வாய்ப்பு மற்றும் சரியான சீரான விலை ஓரளவு விவசாயிகளின் வேதனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

அந்தவகையில் விவசாயிகளுக்கும் ஊட்டச்சத்துகள் இல்லாத மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும் நல்ல வாழ்க்கை முறையை உருவாக்கவும் தமிழ்நாட்டின் கரூரில் பிறந்து வளர்ந்த 26 வயது நிரம்பிய செல்வி. தீபிகா ரவி அப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படும் முருங்கை போன்ற விளைபொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து பலவகையான பொருட்களை "குட் லீஃப்" (Good Leaf) என்ற துவக்க நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்த பல கோடிகளில் விற்பனை செய்து வருகிறார்."உண்மையான அறிவியல்" (Acturial Science) துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள செல்வி. தீபிகா ரவி அவரது நிறுவனமான "தி குட் லீஃப்" மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு உதவும் போது கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டுகிறது கரூர், திண்டுக்கல் பகுதிகளில் அபரிமிதமாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் முருங்கையின் அனைத்து பகுதிகளையும் மதிப்புக்கூட்டல் செய்து சந்தைப்படுத்தி உள்ளார்.

முருங்கை அல்லது முருங்கை மரம் ஊட்டச் சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. இது உலகெங்கிலும் மிகவும் விருப்பப்படும் "சூப்பர்ஃபுட்" மற்றும் இந்திய முக்கிய உணவுகளில் பெரும் பகுதியாகும் முருங்கையைப் பொறுத்தவரை இலைகள், பூக்கள், முருங்கைக்காய் மற்றும் வேர்கள் கூட உண்ணக்கூடியவை. அவற்றில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கையில் ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள் உள்ளன மற்றும் அழற்சி நோய் எதிர்ப்பு, முதுமைத் தோற்ற தவிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, இரத்த சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகின்றன என்று அனுபவ மருத்துவர்கள் கூறுகின்றனர். மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல வகையான அழகு சாதன பொருட்கள் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. "திகுட் லீஃப்" நிறுவனம் விவசாயிகள் முருங்கையை இயற்கை முறையில் வளர்க்கவும் ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வழங்குவதன் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான ஒரே விலையை பெற்று பலனடைகின்றனர்.

முருங்கை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்:

முருங்கை உலர் இலை தூள்

முருங்கை அரிசி கலவை

சட்னி பவுடர்

மோரிங்கா டீ

முருங்கை கேப்ஸ்யூல் கள்

முடி பராமரிப்பு எண்ணெய்

தோல் பராமரிப்பு களிம்புகள்

மொரிங்கா சோப்

மொரிங்கா ஃபேஸ்  ஸ்க்ரப்

மொரிங்கா ஹேர் சீரம்

மொரிங்கா ப்ரைட்டனிங் கீரம்

மொரிங்கா ஹேர் ஆயில்

மொரிங்கா ஃபேஸ் வாஷ்

மொரிங்கா துளசி, மற்றும் இஞ்சி கலவையுடன் மூலிகை தேநீர் ஆகியவை வேகமாக விற்கப்படுகின்றன.

"திகுட் லிஃப் நிறுவன நிறுவனர் தீபிகாவுடன் தந்தை ரவி மற்றும் தாய் குடும்பத்துடன் 10 பணியாளர்களை கொண்டு சிறிய அளவு செயல்பாட்டாளர்கள் உள்ளனர் தயாரிப்புகள் அனைத்தும் வலைதளத்தின் மூலம் சந்தைப்படுத்தப் படுகிறது.

"தி குட்லிஃப்" நிறுவனம் விவசாயிகளுக்கும், நுகர்வேர்களுக்கும் ஒரு நலமான பாலமாக அமைந்துள்ளது என்பது பாராட்டத்தக்கது.

Website:https://thegoodleaf.in/

Address403/2C, Kuppagoundanvalasu, K. Paramathi, Tamil Nadu 639111

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories