December 08, 2020

பலமுறை உபயோகிக்கக்கூடிய குழந்தைகள் பருத்தி கழிப்பாடை (Reusable Children Cotton Diaper)

குழந்தைகள் நலனை முன்னெடுத்து சுகாதாரமான ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய கழிப்படைகள் (Disposable Diapers) உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளன. இதில் பலவகையான உள்நாட்டு, வெளிநாட்டு கழிப்படைகள் பல விலைகளில் பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இவை அனைத்துமே செயற்கை நூல் இழைகள் மற்றும் பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் சொறி, கரப்பான், சினைப்பு மற்றும் ஒவ்வாமை (Allergy) உள்ளிட்ட சரும நோய்கள் (Skin Rashes) பாதிக்கின்றன, இத்தகைய பிரச்சனைகளுக்கு முடிவாக மும்பையைச் சேர்ந்த திருமதி பல்லவி உதாகி (Mrs. Pallavi Utagi) முற்றிலும் பருத்தி இழைகளலான பலமுறை துவைக்து உபயோகிக்கக் கூடிய பருத்தியினாலான கழிப்பாடைகள் (Diapers) குழந்தைகளுக்காக வடிவமைத்து தயாரித்துள்ளார்.

1. குழந்தைகள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது

2. சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடிகிறது

3. கழிவு செய்யப்பட்ட கழிப்படைகள் எளிதாக மட்கி சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது கூடுதல் நன்மை.



வணிக மேலாண்மை (MBA) பட்டதாரியான திருமதி. பல்லவி  அவர்கள் அவருடைய புதிய கண்டுபிடிப்பினை "சூப்பர் பாட்டம்ஸ்" (Super Bottoms) என்ற அடையாளப் (Brand) பெயரில் சந்தைப்படுத்தியுள்ளார். "சூப்பர் பாட்டம்ஸ்" குழந்தைகள் கழிப்பாடை பலவிதமான நிறங்கள், அளவுகள், மற்றும் வடிவமைப்புகளில் (Design) விற்பனை செய்து வருகிறார்.



தற்சமயம் ரூ 600 / - முதல் ரூ 1000 /- வரையில் விற்பனை செய்யப்படும் பல முறை பயன்படுத்தப்படும் பருத்தி கழிப்பாடைகள் "சூப்பர் பாட்டம்ஸ்" மாதம் ஒன்றுக்கு மும்பையில் மட்டும் 1000 யூனிட்டுகள் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் பல வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக திருமதி பல்லவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories