September 09, 2020

கடலில் ஒரு வேளாண்மை

திரு.அபிராம் சேத்தி (Mr.Abiram Sethi), தலைநகர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். ஹிந்து கல்லூரியில் பொருளாதாரத் துறையில் பட்டப் படிப்பினை பெற்று மும்பையில் உள்ள ஜம்னாலால் பஜாஜ் கல்லூரியில் வணிக மேலாண்மையில் பட்டமேற்படிப்பை (MBA) முடித்தவர்.  முதலில் ஹிந்துஸ்தான் யூனிலிவர் (Hindustan Unilever) நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர் பன்னாட்டு அசுரன் எனப்படும் பெப்ஸி நிறுவனத்தில் 14 ஆண்டுகள் விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி பிரிவில் இயக்குனராக பணியாற்றி பின்னர் தமிழ்நாடு கடற்கரை ஓரங்களில் கடல் சார்ந்த கடல்பாசி வளர்க்கும் விவசாய பண்ணை முறையினை நிர்மாணித்து நடத்திவருகிறார்.

" அக்வா அக்ரி ப்ராசஸ்ஸிங் பிரைவேட் லிட் (Aqua Agri processing private Limited Company) என்ற பெயர் கொண்ட திரு. அபிராம் சேத்தியின் நிறுவனம் தற்போது பெரிய அளவில் "கடல் பாசி" யினை உற்பத்தி செய்து வணிகம் செய்கிறது பொதுவாக நிலமும், நீரும் விவசாயம் செய்ய பற்றாக்குறையாக இருக்கும் இக்காலத்தில் பரந்து விரிந்துள்ள கடலில் கடல் பாசி வளர்ப்பு என்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. கடல்பாசி வளர்க்கும் விவசாய முறையில் திரு. அபிராம் சேத்தி ஒரு முன்னோடியாக உள்ளார்.


கடல் பாசி வேளாண்மை என்றால் என்ன?

எளிமையாக கூறவேண்டும் என்றால் கடல் பாசி கடலில் பயிர்செய்து வளர்த்து அறுவடை செய்வது என்று பொருள் கடலில் எவ்வாறு கடல் பாசி செய்வது?

சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்பாசி வேளாண்மையில் உலகெங்கும் பல வகைகள் உள்ளன. இந்தியாவை பொருத்தவரை "சிங்கிள் ரோப்
ஃப்லோட்டிங் ராப்ட்" (Single Rope Floating Raft (SRFR) முறையே பயன்படுத்தப்படுகிறது.

மீனவ விவசாயிகள் 3x3 மீட்டர் நீளமுள்ள நான்கு மூங்கில்களை கட்டமாக கட்டியபின் இடையில் பல கட்டங்கள் ஏற்படும் வகையில் நார் கயிறுகளை கொண்டோ நைலான் கயிறு களைக் கொண்டே இணைத்து அதன் மீது பரவலாக சிறிது உணவுவகை சிவப்பு  கடல் பாசிகளை வைத்து அந்த மூங்கில் பதாகைகளை (Bamboo raft) கடலில் அமிழ்த்தி வைத்தல் போதுமானது. 45 நாட்களுக்குப்பிறகு மூங்கில் பதாகைகளை கடலியிருந்து எடுத்து பெருமளவு படர்ந்துள்ள கடல்பாசியினை  அறுவடை செய்யப்படுகிறது. இதற்காக எந்தவிதமான பராமரிப்பு மெனக்கடல்கள் கிடையாது என்பதுதான் இதன் சிறப்பு.



கடல் பாசியிலிருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் பயன்பாடுகள்:

பிரத்தியேகமான இயந்திரங்கள் மூலம் கடல் பாசியில் இருந்து பெருமளவில்

1. கார்ராஜீனன் (Carrageenan)

2. பயோ ஸ்டிமுலன்ட்ஸ் (Bio Stimulants)

உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை இரண்டும் பல துறைகளில் பயன் படுத்தப்படுகின்றன

1. உணவு மற்றும் உணவு பதப்படுத்துதல்

2. ஐஸ் தயாரிப்பு

3. ஊறுகாய் தயாரிப்பு

4. பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு

5. மாமிசம் மற்றும் மாமிசப் பொருட்கள் பதப்படுத்தல்

6. ஜெல்லிகள் தயாரிப்பு

7. கால்நடை உணவுகள் தயாரிப்பு

8. கோழி உணவுகள் தயாரிப்பு

9. செடிகளின் வளர்ச்சி ஊக்கிகள் தயாரிப்பு

10. செல்லப்பிராணிகள் உணவு தயாரிப்பு

11. பானங்கள் தயாரிப்புகள் (Beverages)

12. பற்பசை தயாரிப்புகள்

13. நறுமணத் தயாரிப்புகள்

போன்றவை இதில் அடங்கும்.

தயாரிப் பின் போது வெளியேற்றப் படும் நச்சுகள் இல்லா கழிவுநீர் நேரடியாக விவசாயத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரையில் விவசாய உற்பத்தி அதிகரிக்கிறது காற்றோ, நிலமோ, நீரோ எதுவும் மாசுபடுவது இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

" அக்வா அக்ரி ப்ராசஸ்ஸிங் பிரைவேட் லிட் (Aqua Agri processing Pvt Ltd) நிறுவனம்தான் இந்தியாவிலேயே முதன் முதலாக கடல் பாசியை வளர்த்து மனிதன், விலங்குகள், மற்றும் தாவரங்கள் பயன்பெறும் வகையில் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது"

இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 600 மீனவ குடும்பங்கள் வேலைவாய்ப்பினை ஆண்டு முழுவதும் பெற்று வருகிறது. 800 டன்கள் கடல் பாசியை உற்பத்தி செய்து பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளனர்.

" திறைகடலோடியும் திரவியம் தேடு" என்று இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்களோ?!

Our Office Locations
Delhi Office

AQUAGRI PROCESSING PRIVATE LIMITED
284, Sultan Sadan, L-3, West End Marg
Saidulajaib, New Delhi-110030
 011-29 53 64 06, 011-29 53 64 07
Manamadurai Office

AQUAGRI PROCESSING PRIVATE LIMITED
Plot No. F 1 Sipcot Industrial Complex
Manamadurai-630606 (District Sivaganga)
Tamilnadu
 04574 25 82 52
Partner Office in USA

Marketing and Distribution by
GloBridge Ventures LLC
 +1 855 333 3432 Ext 701
 ganesh@globridgeventures.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories