October 21, 2021

மாதம் 22 டன் மண்புழு உரம் உற்பத்தி

 நல்ல வாழ்வுக்காக விவசாயம் என்று இருந்தபோது மண்ணுக்கும் மனிதனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. வணிகத்திற்காக விவசாயம் என்ற நிலை ஏற்பட்ட திலிருந்து நல்வாழ்வு தொலைந்தது. பசுமைப்புறட்சி என்ற பெயரில் மண்ணில் யூரியா, பொட்டாஷ், பாஸ்பேட், சல்பேட் என்று கொட்டியும் மருந்து என்ற பெயரில் விஷத்தை அபரிமிதமாக தெளித்தும் மண்ணை விஷமாக்கியபோதே பூமித்தாயின் உடலுக்கு நோய் வந்துவிட்டது இதுதான்
உண்மை.வளர்ந்த நாடுகளில் எல்லாம் இயற்கை வேளாண்மை மேம்பட்டு வரும் சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து ரசாயன உரத் தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதன் நோக்கம் வேறு. இந்திய விவசாயிகள் பொறுத்தவரை எளிமையான இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களே உகந்தது. இதற்கு விவசாயிகளே இயற்கை உரத் தொழிற்சாலை தொடங்கி பயன்படுத்துவதுதான் ஒரே வழி.வேலூரை சேர்ந்த வேளாண் அதிகாரி திரு. ராமமூர்த்தி கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பு பெறவும் தொடர்ந்து ரசாயன உரத்தின் பயன்பாட்டினால் மலடாகிப் போன விவசாய நிலத்தின் வளத்தை மீட்டெடுக்கவும் மண்புழு உரம் உற்பத்தி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இயற்கை விவசாயத்திற்கான புரட்சியை தமிழக மண்ணில் ஏற்படுத்திய நம்மாழ்வாருடன் விவசாயம் காக்கும் நடைப்பயணத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களில் திரு. ராமமூர்த்தியும் ஒருவராக இருந்ததினால் இயற்கை விவசாயத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதாலேயே மண்புழு உரம் தயாரிப்பை கையில் எடுத்ததாகக் கூறுகிறார்.

விவசாயக் கல்வியை படித்தோம் அரசு பணியில் சேர்ந்தோம் என்று வாழ்க்கையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிறுத்திக்கொள்ளாமல் தனது விவசாய படிப்பு பறிவையும், அனுபவத்தையும் வைத்து இயற்கை விவசாயத்திற்கு வலுவூட்டும் விதமாக மண்புழு உரம் தயாரிப்பை "வெர்மிரிச்" (Vermirich) என்ற நிறுவனத்தின் பெயரில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறார்.

 2006 - ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சிறியதொரு மண்புழு உரம் தயாரிப்பு நிலையத்தை துவங்கியுள்ளார் பசு, ஆட்டுச் சாணம், எருக்கன் இலை ஆவாரை இலை, மற்றும் பசுமை கழிவுகளை சேர்த்து பதப்படுத்தி அவற்றில் மண் புழுக்களை உருவாக்கி அந்த உரத்தை 30 நாளுக்கு ஒரு முறை அறுவடை செய்து விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கிறார். ஆரம்பத்தில் மாதத்திற்கு 5 டன் மண்புழு எரு உற்பத்தியில்லிருந்து தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு 4 உற்பத்தி நிலையங்கள் மூலம் மாதத்திற்கு 22 டன் மண்புழு உரம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளித்து மண்வளத்தை முன்னேற்றி
வருகிறார் திரு.ராமமூர்த்தி.

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மண்புழு உரம் தயாரிக்கும் நிலையத்தை அமைத்த திரு. ராமமூர்த்தி இதனை ஒரு பயிற்சி மையமாகவும் நடத்தி வருகிறார். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள், விவசாய மாணவர்கள் குறிப்பாக பெண்களுக்கு மண்புழுஉரம் தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்குகிறார். இதனை கட்டணமின்றி சேவையாக செய்து வரும் திரு. ராமமூர்த்தி மையத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசின் பயிற்சி மையமாக மாற்றப்பட்டிருக்கிறது.

இயற்கை என்றுமே வஞ்சிக்காது அதனை அதன் போக்கிலேயே விட்டால் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

இயற்கை வழியில் மண்ணை வளப்படுத்தி நஞ்சை விரட்டும் நல்ல விவசாயமே ஆரோக்கியமான உணவின் திறவுகோலாக இருக்க முடியும்.

"சுழன்றும் ஏற்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே வேதலை" என்பதை மறவாமல் இயற்கை விவசாயம் காப்போம் நம் தலைமுறையை காப்போம்.

Ramamoorthy - 9487408129

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Stories