அஸ்ஸாம் மாநிலத்தின் பழங்குடிகள் உணவுக்காக விளைவிக்கும் "போக்கா சால்" என்று அழைக்கப்படும் "மந்திர அரிசி (Magic Rice) யை ஆந்திராவின் தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி திரு. சிரிகாந்த் கரம்பள்ளி (Mr.Srikanth Garampally) அவரது பகுதியில் பிரபலப் படுத்தி வருகிறார்.
"மந்திர அரிசியை" சாதாரண தண்ணீரிலோ, வெந்நீரிலோ அரை மணி நேரம் ஊற வைத்தால் (Soak) உண்ணத் தகுந்த சோறு தயார். நெருப்போ, கொதிக்கவைக்கவோ, வடிக்கவோ தேவையில்லை. பொதுவாக அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் "ஸ்டார்ச்" (Starch) மட்டுமே அதிக அளவில் இருக்கும். மந்திர அரிசியில் கார்போஹைட்ரேட்டுகனுடன் 10.73 சதவீதம் நார்சத்தும் (Fibre), 6.8 சதவீதம் புரதச்சத்தும் உள்ளது சிறப்பு.
தெலுங்கானாவில் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி 38 வயதான கரம்பள்ளி (Mr.Garampally) கடந்த பல ஆண்டுகளாக 120 அரிசி வகைகளில் நவாரா (Navara) மாப்பிள்ளை சம்பா (Mapiilai Samba) மற்றும் குஸ்கா (Kushka) வகைகளும் அடங்கும். மேலும் பல வகையான ஆர்கானிக் காய்கறிகளும் (Organic Vegetables) அவருடைய 12 ஏக்கர் குத்தகை விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகிறார் அந்த வரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக "போக்காசால் அரிசி" (Boka Rice) எனப்படும் "மந்திரஅரிசி" (Magic Rice) பயிர் வளர்ப்பு சேர்ந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரிஸ்ஸா மாநிலத்துக்கு ஒரு கோயிலில் சந்தித்த நண்பரின் மூலமாக "மந்திர அரிசியை" பற்றி அறிந்து அஸ்ஸாமில் உள்ள குவஹாட்டி பல்கலைக்கழக அதிகாரிகள் (Gawhathi University Authorities) சந்தித்து அவர்களின் உதவியை நாடிய பின் அவர்களது வழிகாட்டுதலின்படி அஸ்ஸாமின் பழங்குடிகள் வசிக்கும் மலைப்பிரதேசங்கள் "நல்பாரி" (Nalbari), டர்ராங் (Darrang) மற்றும் துப்ரி (Dhubri) ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று போகாசால் விவசாய அரிசியின் நடவு முறையைக் கற்றுக் கொண்டார். திரு. சிரிகாந்த், அவர்களின் விவசாய ஈடுபாட்டை பாராட்டி பழங்குடி மக்கள் 100 கிராம் "மந்திர அரிசி" விதையை பரிசாக அளித்து அனுப்பினர். 145 நாள் பயிரான "மந்திர அரிசி" முதன் முதலில் 15 கிலோ அறுவடை செய்த திரு.சிரிகாந்த் தற்போது பல ஏக்கர் பயிர் செய்து ஆர்வமுள்ள மற்ற விவசாயிகளுக்கு இலவசமாகவும் விலைக்கும் வழங்கி வருவதுடன் விவசாய பல்கலைக் கழகத்துக்கும் அளித்து வருகிறார்.
வேகமாக இயங்கும் இன்றைய உலகில் சமயல் செய்வது என்பது ஒரு சிக்கலான Cumbersom செயலாக கருதப்படும் சூழலில் "மந்திர அரிசி" ஒரு வரப்பிரசாதமாக வருகிறது.
மேலும் "மந்திர அரிசி" தற்சமயம் இந்தியாவின் அறிவுசார் சொத்தாக (Intellectual Property of India) கருதப்பட்டு (IPI) அமைப்பு ஒரு (G.I Tag) வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.