January 26, 2022

"Borwell Recharge Technology" போர்வெல் ரீசார்ஜ் தொழில் நுட்பம்

2013 - ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சியை சந்தித்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பகுதியில் உள்ள ஷெட்கே வாடி, ரந்துலாபாத், சதிச்சி வாடி, முதலானே, பலகேவாடி மற்றும் தாபேவாடி போன்ற கிராமங்கள் கடும் தண்ணீர் நெருக்கடியை எதிர் கொண்டன இந்திய கிராமங்கள் மலைகளுக்கு பின்னால் அமைந்திருந்ததால் மேகங்கள் குறைந்து சொற்பமான மழையே பெய்தது.



ஆனால் இன்று இந்த கிராமங்கள் இத்தகைய முரண்பாடுகளை மாற்றியமைத்து தண்ணீர் போதுமானதாக மாற்றி நீர் மேலாண்மை கொள்கைகளை உருவாக்கி நீர் பற்றாக்குறை நிலையை தவிர்த்துள்ளனர்.

இவை அனைத்தும் புனே வைச் சேர்ந்த மென் பொறியாளர் திரு.ராகுல் பகரே, நிலத்தடி நீர் நிலைகளில் சேரும் மழை நீரை அதிகரிக்கும் ஓர் சார்ஜர் என்ற புதுமையான இயந்திரத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தியதால் சாத்தியமானது. இதனை "உர்த்வம் சுற்றுச்சூழல் தொழில்துட்பம்" (Urdhvam Environmental Technologies Pvt.Ltd)  என்ற நிறுவனத்தின் மூலம் பங்கேற்பு நிலத்தடி நீர் மேலாண்மை வலையப்பை (Participation Ground Water Management Network) செயல் படுத்தி உள்ளார்.



போர்வெல் ரீசார்ஜ் தொழில்நுட்ப செயல்பாடு:

போர்வெல் ரீசார்ஜ் தொழில்நுட்பமானது நீருக்கு அடியில் கேமரா அமைப்பைப் பயன்படுத்தி போர் வெல்களின்" ஆஞ்சியோ கிராஃபியை" (Bore Well Angiography) மேற்கொள்கிறது. மற்றும் நிலத்தடியில் உள்ள பல்வேறு நீர் நிலைகளை ஆய்வு செய்து அடையாளம் கண்டு ரோபோடிக் கையைப் பயன்படுத்தி "ஹைட்ரோ - புவியிலல்" ரீதியாக பொருத்தமான ஆழத்தில் உரை குழாயில் துளைகளை சாதனம் உருவாக்குகிறது. இது மேல் நீர்நிலையில் இருந்து தண்ணீர் ஆழமாக நுழைந்து சேமிக்க முடிகிறது.



கூடுதல் நன்மை என்னவென்றால் மேல் அடுக்கலிருந்து வரும் தண்ணீரின் தரம் அடிப் பகுதிக்குள் வரும் போது தரம் மேம்படுகிறது. இக்கருவி போர்வெல்களின் நீர் சேமிப்பை அதிகரித்து மூன்று மாதங்களுக்கு மேல் அதிகப்படியான காலத்திற்கு விவசாயத்திற்கு பயன்படுகிறது.

இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் 1500க்கும் மேற்பட்ட போர் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது சுமார் 165 கோடி லிட்டர் தண்ணீரை ரீச்சார்ஜ் செய்ய உதவுகிறது.

போர்வெல் ரீசார்ஜ்ர்கள் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து ஒரு முறை முதலீடாக ரூ 20, 000 முதல் ரூ 35,000 வரை செலவாகும். கட்டுமான அல்லது பராமரிப்பு செலவுகள் ஏதுமில்லை. உயிர் பயிற்சி பெற்ற நீர் புவியியலாளர்கள் (Hydro Geologist) அடங்கிய குழு இந்த நிறுவல் வேலைகளை செய்து தருகிறது. இதற்கு சுமார் 3 மணி நேரம் மட்டுமே ஆகிறது என்பது கூடுதல் சிறப்பு.

இந்த புதுமையான மற்றும் மலிவு விலை போர்வெல் ரீசார்ஜாகள் விவசாயிகளுக்கு நேரடியாக பலனளிப்பதன் மூலம் இந்தியாவில் நிலத்தடி நீர் பிரச்சனைகளை பெருமளவில் தீர்க்கும் திறனை கொண்டுள்ளது என்பது நிதர்சனம்.

Address

Row House 7, Shroff Soleno, Baner - Mahalunge Rd, opposite Orchid Hotel, Mahalunge, Pune, Maharashtra 411045

Phone077740 34634

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories