கோவையைச் சேர்ந்த பொறியாளர் திரு. குகன் (Guhan) மற்றும் தொழிலதிபர் திரு. A. கண்ணன் இருவரும் இணைந்து "குகு எனர்ஜி (Gugu Energy) என்ற நிறுவனத்தை துவங்கி சுற்றுச்சூழலை பாதிக்காத பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளனர்.
வாகனத்தின் சிறப்புகள்:
- சிறந்த அழகான வடிவமைப்பு
- பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 180 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.
- வீட்டு மின்சாரத்திலேயே அரை மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும்.
- 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வல்லது
- பாட்டரியின் வாழ்நாள் 5 ஆண்டுகள், அல்லது 80,000 கிலோ மீட்டர் பயணம் வரை.
- சக்திவாய்ந்த லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது
- பேட்டரியில் கோபால்ட் குறைப்பு செய்து நிக்கல் அதிகம் பயன் படுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
- வாகனம்- கைபேசி இணைப்பு செய்யப்பட்டுள்ளது
- குறைந்த எடை கொண்டது
- நீர் மற்றும் நெருப்பு பாதிப்பை தாங்கக்கூடியது.
விற்பனை முறை:
1. மொத்தமாக விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்
2. சப்ஸ்கிரிப்ஷன் முறையில் ரூ 20,000/- செலுத்தி வாகனத்தை வாங்கி மாதம் 2000 /- செலுத்தி 15 மாதங்கள் வரை பயன் படுத்தலாம். திருப்தி இல்லை என்றால் வாகனத்தை திருப்பி கொடுத்து டெபாசிட் தொகை ரூ 20,000/- திரும்பப் பெறலாம்.
வாகனம் (ARAI) ஆட்டோ மோட்டிவ் ரீசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா (Automotive Research Association of India) வின் அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குகு எனர்ஜி வாகனம் சொந்த பயணத்துக்காக மட்டுமல்லாமல் கூரியர் கம்பெனிகள், உணவு டெலிவரி நிறுவனங்கள், மற்றும் பார்சல் நிறுவனங்கள் அனைத்திலும் வெகுவாக பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. மேலும் புகையினால் காற்று மாசு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
இத்தகைய பேட்டரி வாகன பயன்பாட்டின் மூலம் இயற்கை எரிபொருள் தேவையை வெகுவாக குறைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
Contact:
080721 82795
guhan344@gmail.com
No : 16 , oor vellappa gounder street,Rathinapuri,Sanganoor Coimbatore, Tamil Nadu, India 641027
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.