March 15, 2021

“பெட்ரோல் கார்களை மின்சார கார்களாக மாற்றும் நிறுவனங்கள்” ( “Petrol cars to Electric Cars”)

பூமியின் இயற்கை எரிபொருள் வளம் படிப்படியாக குறைந்து வருவதாலும் அவைகளின் தேவை அதிகரித்து வருவதாலும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயுவின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது கண்கூடு. இதன் அடிப்படையில் பல விதமான மாற்று எரிபொருள் தொடர்பான தேடல்கள் அதிகரித்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தேவைகளின் அதிகரிப்பால் பலரும் மின்சார வாகனங்களை பயன்படுத்த ஒரு அவசிய வாய்ப்பினை வழங்குகிறது என்பது யதார்த்தம்.

உலகெங்கும் உள்ள வாகனச் சந்தையில் ஏராளமான வாகன கொள்முதல் விருப்பங்கள்  உள்ளன. பகுதி அல்லது முழுமையான மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாகனங்கள் விற்பனைக்கு உள்ளன. இதனால் எரிபொருள் செலவில் நீண்டகால சேமிப்பு உறுதி செயப்படுகின்றது என்பது திண்ணம். அந்த வகையில் வாகன உரிமையாளர்களுக்கு மின்சாரத்திற்கு மாறுவதற்கான விருப்பத்தை நிரைவு செய்து வழங்கும் பல நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றில் நான்கு தொடக்க முயற்சிகள் இங்கே.

1. ஈ டிரையோ (E Trio):ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 2017 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரு தனித்துவமான முயற்சியாக ஏற்கனவே இருக்கக்கூடிய பெட்ரோல் டீசல் அகதகன எஞ்சின்கள் கொண்ட (Internal Combustion Engine) வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றித் தருகிறது. குறிப்பாக அனைத்துவகை மாருதி ஆல்ட்டோ, டிசையர் வாகனங்களைத் தொடர்ந்து 150 கீ.மீ. வரை செல்லக்கூடிய மின்னியக்கி காரர்களாக ரூ 4 லட்சம் செலவில் மாற்றித்தரும் தொழில்நுட்பத்தினை வணிக ரீதியாக செயல்படுத்தி வருகிறது. மேலும் அத்தகைய புதிய மின் வாகனங்களை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளவும் முடியும். ஆரம்ப விலையாக சற்று விலை கூடுதலாக தெரிந்தாலும் நீண்டகால பயன்பாட்டில் மிகப்பெரிய அளவில் சேமிப்பினை பயன்பாட்டாளர்கள் பெறுகிறார்கள் என்பது உண்மை.

Address2-1813/3/5/A Road No: 1, opp. SBI Bank, Czech Colony, Sanath Nagar, Hyderabad, Telangana 500018

Phone074280 91566

2. ரேஸ் எனர்ஜி (Race Energy) :-இதுவும் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு துவக்க நிறுவனம். நகரத்தில் பெருமளவில் இயங்கும் மூன்று சக்கர (Auto) இரண்டு சக்கர பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் பேட்டரியால் இயங்கும் வாகனமாக ரூ. 50,000 /- ல் மாற்றித் தருகிறது. ஆங்காங்கே உள்ள நிறுவனத்தின் பாட்டரி (Battery Bunks) பங்குகளில் மிகக் குறைந்த கட்டணம் செலுத்தி பேட்டரிகளை உடனே மாற்றிக் கொள்ளலாம். (Battery Swapping Model) வாகன உரிமையாளர்கள் பேட்டரிகளை மின்னேற்றம் (Battery Charge) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முழுதாக மின்னேற்றம் செய்யப்பட்ட வாகனம் தொடர்ந்து 100 கி.மி. வரையில் இயங்கும் வகையில் உள்ளது. செலவிடப்படும் ரூ.50,000 ஓராண்டு காலத்திற்குள் வாகன உரிமையாளர்களால்  மீட்டெடுக்கப்படுகிறது என்பது சிறப்பு.

E-Mail- hello@racenergy.in3. ஆல்டிகிரீன் (Altigreen):

 2012 - ஆம் ஆண்டு பெங்களூருவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிறுவனம் பகுதியாகவோ, முழுவதுமாகவோ (Partially or Fully Electric) மின் வாகனங்களாக மாற்றித் தருகிறது. இந்த பாட்டரிகள் மின் பகிர்மானம் (GRID) மூலமாக மின்னேற்றம் (Charge) செய்ய வேண்டியதில்லை. மின் உருவாக்கம் (Regenerative) முறையில் 48v மின்னேற்று மூலம் சார்ஜிங் செய்யப்படுகிறது. அல்டிகிரீன் நிறுவனத்தின் இந்த செருகி நிரல் அமைப்பு (Plug - In - System) சுமார் ரூ. 60,000 முதல் ரூ 80,000 செலவில் அமைத்துத் தரப்படுகிறது.

Altigreen Propulsion Labs Pvt Ltd
B-74 5th Cross, Dyavasandra Industrial Estate
Whitefield Road, Mahadevpura
Bangalore 560048, India

info@altigreen.com

4. ஃபோக்ஸ் மோட்டார் (Folks Motor)டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்ட இந்தியாவின் முதல் கலப்பின மின்சார ரெட்ரோபிட் கார் நிறுவனம். (Indias First Hybrid - Electric Retrofit Car Company) சுமார் 1 லட்சம் செலவில் கை இயக்க உள்எரிப்பு இயந்திர
காரினை (Manual Gear Box IC - Engine Car) மின் இயக்க காராக மாற்றித் தருகிறது.

இந்த வணிகத்தில் சம்பந்தப்பட்ட பல முயற்சிகள் உள்ளன கொடுக்கப்பட்டிருப்பேதே உறுதியான இறுதியான பட்டியல் அல்ல. இருப்பினும் இந்தக் கட்டுரையின் மூலம் பயணிகளுக்கு சில வாய்ப்புகளை முன்வைக்க முயற்சித்துள்ளோம். 

E: info@folksmotor.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Stories