திரு.விஜய் ஜர்தாரி (Mr. Vijay Jardhari) உத்தர்காண்ட் மாநிலத்தின் கிராம விவசாயி 1980 களில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் திரு. விஜய் ஜர்தாரி தலைமையில் பான் - மாநில இயக்கம் ஒற்றை பயிர் சாகுபடிக்கு எதிராகவும் மற்றும் திணை போன்ற சத்தான பல பயிர் சாகுபடியை பணப் பயிர்களுக்கு மாற்றாகவும் பெருமளவில் பின்பற்றப்பட்டது.
திரு. விஜய் ஜர்தாரி தான் வீடு வீடாக சென்று சந்தித்த விவசாயிகளிடையே " பாராராஜ்" (பாரா - 12 அனாஜ் - பயிர்) என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால விவசாய நடைமுறையைப் பகிர்ந்து கொண்டார். இது பன்னிரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட பயிர்களின் இடைப்- பயிர் முறையாகும். இது பொதுவாக மழையால் பாதிக்கப்பட்ட தெஹ்ரி - கர்வால் பகுதிகளில் நடைமுறையில் உள்ளது அதில் பயறு, தானியங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் புல் வகைகள் அனைத்தும் பயிர் செய்யப்பட்டு ஒன்றுக்கொன்று இணக்கமாக வளர்கின்றன. மேலும் விவசாயிகளின் நிலங்கள் வளம் குன்றாமல் இருக்க உதவுகிறது. நமது முன்னோர்களின் வெற்றிக்கான திறவுகோலாய் இருந்த இம்முறை ஒவ்வொரு விவசாயிக்கும் உணவுப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
சுழற்சியில் உள்ள சில பயிர்கள் வறட்சி, பூச்சி தாக்குதல் மற்றும் வெள்ளத்தை எதிர்க்கின்றன எனவே இயற்கை பேரழிவின் போது சில பயிர்கள் சேதம் அடைந்தாலும் கூட சந்தையில் விற்கவோ அல்லது சுய நுகர்வுக்காகவோ ஒரு விவசாயிக்கு போதுமான உணவு கிடைக்கும். கூடுதலாக
"பாரானாஜ்" செயல்முறை காடுகளை போன்றது..எனவே இதற்கு எந்தவிதமான ரசாயன உள்ளீடுகளும் (Inputs) அல்லது அதிகப்படியான நீர் பாசனமும் தேவையில்லை. அவை அனைத்தும் பயிர்களின் பன்முகத் தன்மையை பராமரித்து மண்ணின் வளத்தை அதிகரிக்கும். மேலும் கால்நடைகளுக்கு பலவிதமான தீவனங்களையும் வழங்குகிறது.
இந்த முறையின் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால் ஒரு விவசாயி ஒரு போதும் பசியோடு இருப்பதையோ அல்லது அதிக கடன் பெறுவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, விவசாயிகள் தற்கொலைகள் தவிர்க்கப் படுகின்றன என்பது முக்கிய அம்ஸம்.
பலவகை பயிர்களின் விதைகளை சேமித்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக "பீஜ் பஜாவ் அந்தோலன்" (Beej Bachav Andolan) என்ற அமைப்பினை திரு.விஜய் ஜர்தாரி நிறுவி விவசாயிகளுக்கு சேவையாற்றி வருகிறார். அவருடைய சிறப்பான பணிக்காக 2009-ஆம் ஆண்டில் "இந்திரா காந்தி புரியவரன் புரஸ்கார்" (Indira Gandhi Paryavaran Puraskar) விருது வழங்கப்பட்டது.
தற்போது 68 வயதை தாண்டிய திரு. விஜய் ஜர்தாரி தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறார் என்பது பாராட்டத்தக்கது.
Facebook Page: https://www.facebook.com/beejbachaoandolan/
P.O. Nagni, Hemal Valley, Tehri Garhwal Tehri-Garhwal, Uttarakhand, India 249175
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.