May 30, 2021

பழைய பெட்ரோல் ஸ்கூட்டர் = புதிய மின்சார ஸ்கூட்டர் (Old Petrol Scooter = New Electric Scooter)

பயன்படுத்தப்பட்ட பழைய இருசக்கர வாகனத்திற்கு பதிலாக 10 நிமிடத்தில் புதிய மின்சார இருசக்கர வாகனத்தை மாற்றுவதற்கான வாய்ப்பினை பெங்களூரைச் சேர்ந்த ஒம்னிசேனல் நுகர்வோர் பிராண்டான கிரெட் ஆர் (Cred R) வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.



"கிரெட் ஆர்" என்ற இந்த நிறுவனம் டெல்லியைத் தலைமையிடமாக கொண்ட "க்ரையான் மோட்டார்ஸ்" (Crayon Motors) என்ற மின்சார வாகன தொடக்க நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யார் வேண்டுமானாலும் கிரையான் மோட்டார்ஸ் மின்சார பைக் குக்குக்கு எந்த பெட்ரோல் அடிப்படையிலான இரு சக்கர வாகனத்தையும் பரிமாறிக்கொள்ளலாம். தொந்தரவுகள் ஏதும் இல்லாத பரிமாற்றம் செய்து தரப்படுகிறது.

இந்த பரிமாற்றத்தை எளிதாக்குகிறது திரு.நிகில் ஜெயின் (Mr.Nikil jain) மற்றும் திரு.சசிதர் நந்திகம் (Mr.Sasidhar Nandhigam) ஆகியோரால் 2014 ஆண்டில் நிறுவப்பட்ட "கிரெட் ஆர்" என்ற இந்திய நிறுவனம்.

வாடிக்கையாளர்கள் புதிய மின்சார பைக்குகளை வாங்கவும் பழையவற்றை விற்கவும் உதவுவது அவர்கள் வணிகத்தில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக “கிரெட் ஆர்” நிறுவனம் இதைச் செய்கிறது.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் பயன்படுத்தப்பட்ட பழைய பைக் பிரிவில் புதிய பைக் வாங்கும் போது நீங்கள் பெறும் அதே வாடிக்கையாளர் அனுபவத்தை பிரதிபலிக்கிறது என்பது இதன் சிறப்பு.

கடந்த 12 மாதங்களில் “ஏதர் எனர்ஜி” (Ather Energy), “ஆம்பியர்” (Ampere), “ஹீரோ எலக்ட்ரிக்” (Hero Electric) “பிலைவ்” (Belive), “ஒக்கினாவா” (Okinava), “ஜெமோ பாய்” (Gemopai), “டெக் எலக்ட்ரா” (Tech Electra) “கிரேயான் மோட்டார்ஸ்” (Crayon Motors) மற்றும் பல மின்சார இருசக்கர வாகன பிராண்டுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளனர். ஏதர் எனர்ஜியில் துவங்கி அவர்கள் இந்தியாவில் பல முக்கிய (e-bike) இ-பைக் பிராண்டுகளுடன் பதிவு செய்துள்ளனர்.

“கிரெட் ஆர்” ஆவணப்படுத்துதல் செயல்முறையின் முழு பொறுப்பையும் மேற்கொள்கிறது அதனால் அனைத்து சட்டபூர்வ சிக்கல்களிலிருந்து முற்றிலும்  வாடிக்கையாளர்கள் விடுபடுகிறார்கள். இது ஒரு நுகர்வோர் என்ற முறையில் அவர்களுக்கு மன அமைதியை தருகிறது என்பது கூடுதல் சாதகம்.

தற்சமயம் மாதந்தோறும் “கிரெட் ஆர்” நிறுவனம் சில ஆயிரம் பரிவர்த்தனைகளை செய்து வருகிறது. கோவிட் - 19 பெருந்தொற்று நிலைமை பரிமாற்ற வணிகத்தை பாதித்திருந்தாலும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்பது வரவேற்கத்தக்கது.

Address:

2nd Floor, A, 212, 1st Main Rd, Stage 2, Domlur, Bengaluru, Karnataka 560071
CIN - U50404MH2015PTC261907
Call: +91 90755 55557
Email: cs@credr.com
888 488 5455

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories