January 01, 2021

கொரியாவின் இயற்கை முறை கோழி வளர்ப்பு (Korean Natural Poultry Farming)

நவீனகால கோழிவளர்ப்பில் உற்பத்தி, அதிகபட்சபலன், மற்றும் அபரிமிதமான லாபம் ஆகியவை மட்டுமே நோக்கமாக உள்ளது. கோழிகளின் வாழ்க்கைத்தரம் (Chickens quality of life) புறம் தள்ளப்படுகிறது. குறுகிய கூண்டு பெட்டிகள், செயற்கை ஒளி, மற்றும் செயற்கை வெப்பம், ரசாயனம் கலந்த உணவுகள், கட்டுப் பாடற்ற மருந்துகள் ஆகியவற்றின் மூலமாக கோழிகள் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகிறது. இதனால் வளர்க்கப்படும் கோழிகளின் வாழ்க்கைத்தரம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அதை உண்ணும் மனித இனத்துக்கும் அவர்களே அறியாமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பது கண்கூடு.



இயற்கை கோழி வளர்ப்பு உற்பத்தி, அதிகபட்ச பலன் மற்றும் லாபம் ஆகியவை நோக்கமானாலும் கோழிகளின் வாழ்க்கைத்தரம், உடல்நலம் மற்றும் கோழி முட்டை, கோழி இறைச்சி உண்பவர்களின் நலனும் கருத்தில் கொள்ளப்படுகிறது என்பது தான் முக்கியம்.

இயற்கை முறை கோழி வரப்பின் மூன்று முக்கிய நோக்கங்கள்:

(Three Purposes of Natural Poultry Farming)

1. கோழிகள் மனித இனத்திற்கு குறைகளற்ற உணவையும் மண்ணை வளப்படுத்த உறத்தையும் தாவரங்களுக்கு சத்துக்களையும் கொடுத்து மனிதன் விலங்குகளுக்கு விவசாய உணவுகளையும் கொடுப்பதன் மூலம் மனிதன்- விலங்கு-தாவரம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்து இருக்க (Inter Dependent) காரணமாகிறது.

2. குடும்பமே ஒன்றிணைந்து பண்ணைகளை பராமரிப்பதன்
மூலம் குடும்பத்திற்குள் ஒரு ஒன்றிணைப்பை (Harmony) ஏற்படுத்துகிறது.

3. சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன்  சமூகத்தில் பொருளாதாரம் உயர்த்தப்படுகிறது (Boost the local economy).

இயற்கை முறை கோழி வளர்ப்பின் அடிப்படை கொள்கைகள்:

Principles Observed in Natural Poultry Farming:

1. கோழி வளர்க்கும் கொட்கைகள் இயற்கையான மண்தரைளாக இருக்க வேண்டும் கான்கிரீட்/ சிமெண்ட் தரைகள் கூடாது.

2. உபகரணங்கள் மூலமாக செயற்கை வெப்பம் கொடுக்க கூடாது.

3. கோழி உணவுகளில் எந்தவிதமான ரசாயனம், மருந்துகள் இல்லாமல் கைக்குத்தல் அரிசி (Brown Rice) மற்றும் மூங்கில் இலைகள் இருப்பது அவசியம்.

4. கூரைகள் துத்தநாக தகடுகள் (Galvanized Zic) வேயப்பட்டு இருக்க வேண்டும்.  மேலும் சூரிய ஒளி உள்ளே படும் படி அமைக்க வேண்டும்.

5. சுற்றுச் சுவர்கள் கம்பி வலைகளால் மட்டும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மழை குளிர் காலங்களில் நிழல் துணிகள் (Shadow Net) கட்டலாம். முழுவதுமாக காற்றோட்டம் இருப்பது அவசியம்.

6. நாள் முழுவதும் சொட்டு நீர் கொடுக்கும் வகையில் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படவேண்டும். தண்ணீர் மாசுபடுவது இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.

7. சரியான அளவில் முட்டையிடும் பெட்டிகள் மற்றும் அடைகாக்கும் பெட்டிகள் அமைக்க வேண்டும்.

8. நீளமான உணவுத் தொட்டி (Feeding Tray) தேவையான அளவிற்கு பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

9. கோழிகள் வளர புரூடிங் (Brooding Boxes) பெட்டிகள் தேவையான அளவுக்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழிகள் நலமுடன் இருப்பது மட்டுமல்லாமல் மனித இனத்திற்கு தரமான உணவினை அளிக்கிறது என்பது நிதர்சனம்.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories