உலகில் சமீபகாலமாக பல விதமான மாற்று சக்திகள் பயன்பாடு தொடர்பான தேடல்களும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறை பொருளாதார காரணங்கள் மற்றும் கரிம உமிழ்வினால் ஏற்படும் காற்று மாசு குறைப்பு விழிப்புணர்வு, இன்னபிற காரணங்களால் பல விதமான கண்டுபிடிப்புகள் உபயோகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மாற்று சக்தி என்றால் சூரிய ஒளி, காற்று மற்றும் நீரியக்க ஆற்றல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. இவற்றில் நீரியக்க ஆற்றல்கள், சூரிய ஒளி ஆகியவை பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன. ஒரு சில இடங்களில் இந்தியாவில் காற்றியக்க சக்தி மின்சார உற்பத்திக்கான பிரம்மாண்டமான காற்றாலைகள் மிக அதிகமான பொருட்செலவில் இயங்கி வருகின்றன.
பல ஐரோப்பிய நாடுகளில் நெடுங்காலமாக விவசாய நிலங்களில் தானியங்கி காற்றாலைகள் தண்ணீர் இறைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் அத்தகைய தண்ணீர் இறைக்கும் காற்றாலைகள் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.
மின்சார உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான காற்றாலைகளானாலும் நீர் இறைக்கும் காற்றாலைகளினாலும் கிடைமட்ட அச்சு (Horizontal Axis) காற்றாலைகளே உள்ளன. இதற்கு மாற்றாக செங்குத்து அச்சு (Vertical Axis) காற்றாலைகளை வடிவமைத்து விவசாய நிலங்களில் நிறுவி மிகக் குறைந்த செலவில் நீர் இறைக்க பயன்படும் வகையில் திரு. நாராயணன் ஆழ்வார் லாப நோக்கம் இல்லாமல் செயலாற்றி வருகிறார்.
திரு நாராயணர் ஆழ்வார் பற்றி:
1. ஊட்டியில் பிறந்தவர்
2. மனதிற்கு பிடித்தமான தொழில் - விவசாயம்
3. வேலை நிமித்தமாக பணியில் மும்பையில் 1 BHK வீட்டில் வாழ்ந்தவர்.
4. பின்னர் ஹைதராபாத்தில் பணிபுரிந்தவர்.
5. தொடர்ந்து விவசாயம் தொடர்பான பல அறிஞர்களின் புத்தகங்களை படித்து வந்தவர்.
6. 2010 - ஆண்டிலிருந்து இந்தியாவின் தென் முனைக்கு அருகிலுள்ள நாங்குநேரி கிராமத்தில் வீட்டுடன் கூடிய "ராதா முரளி பண்ணை" (RMF) நிறுவி விவசாயம் செய்து வருகிறார்.
7. பண்ணையில் சில பகுதிகள் மிகக்குறைவானலாப நோக்குடனும் பல பகுதிகள் இலாப நோக்கு இல்லாமலும் செயல்படுகின்றன.
செங்குத்து அச்சு தண்ணீர் இறைக்கும் தானியங்கி காற்றாலை:
Vertical Axis Water Pumping Automatic Wind Mill
1. காற்றுப்பம்பின் விசிறிகள் 12 மீட்டர் கோபுரத்தின் மேல் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உயரத்தினை அவரவர் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
2. விசிறி ரோட்டர்கள் 3.5 மீட்டர் விட்டம் கொண்டது தேவையான எண்ணிக்கையில் அமைத்துக்கொள்ளலாம்.
3. ABS காற்றுப் பாம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கியர்பாக்ஸ் மூலம் இயங்கும் பாம்புகளுக்கு மாற்றாக போல்டோவ் எரசிபுரோ கேட்டிங் காற்று பாம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சிறப்பு.
4. இதில் இந்தியாவில் சுலபமாக கிடைக்கும் SKF பால் பேரிங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
5. தண்ணீரை 150 அடி ஆழத்திலிருந்து 6 இஞ்ச் விட்டம் கொண்ட குழாய் மூலம் தண்ணீர் எடுக்க வல்லது.
6. தரை மட்டத்திளருந்து 5 மீட்டர் உயரத்தில் தண்ணீர் பம்ப் செய்ய முடியும்.
7. காற்றாடியின் சூழலியை உதைக்கத் தேவையான 3 மீ/வி குறைந்தபட்ச காற்றின் வேகம் சாதாரணமாக இரவும் பகலும் கிடைப்பது போதுமானது
திரு.நாராயணன் ஆழ்வாரின் செங்குத்து அச்சு தண்ணீர் இறைக்கும் தானியங்கி காற்றாலையின் சிறப்புகள்/ அனுகூலங்கள்:-
1. வலுவானது மற்றும் நீண்ட ஆயுள் கொண்டது சுமார் 20 ஆண்டுகள் வரையில் இயங்கும்.
2. குறைந்த உயரத்தைக் கொண்டுள்ளதால் பண்ணையாளரே சிறிய குறைகளை சரி செய்து கொள்ளலாம்.
3. வெட்டுவது, துளையிடுவது மற்றும் வெல்டிங் வேலைகள் சுலபமாக இருப்பதால் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் செய்து கொள்ளலாம்.
4. எத்தகைய மாடல்களும் செய்துகொள்ளலாம்.
5. குறைந்த அளவு காற்றின் வேகத்திலேயே 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்க கூடியது.
6. இயந்திரத்தின் விலை சுமார் ரூ 2.5 லட்சம் மட்டுமே
7. மிகச் சாதாரண பராமரிப்பு முறை
8. சுய சார்பு உடையது (Self Dependent)
9. மிகச் சுலபமாக நிர்மாணிக்காலாம்
(Easy Installation)
10. சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லலாம்.
11. மனிதர்கள், பறவைகள் மூலம் பாதிப்பில்லாதது.
12. அனைத்து காற்றுதிசை மாற்றங்களிலும் செயல்பட வல்லது (Omni Directional Rotor).
13. சமதளத்திலேயே இயங்கும் நீர் இறைப்பான் கொண்டது. (Water Pump).
14. சாலையோர
கைபம்புகளிலும் (Hand Pumps)
இணைத்துக்கொள்ளலாம்.
15. இதற்காக பிரத்தியேகமான கட்டுமானங்கள் தேவையில்லை.
16. முக்கியமாக சுற்றுசூழலுக்கு எவ்வகையான பாதிப்பும் ஏற்ப்படுத்துவதில்லை.
மேலும் தகவல்களுக்கு கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம் நன்றி
https://radhamuralifarms.blogspot.com/
நிறைவாக....
எளிமையான யூகிக்கக்கூடிய வாழ்க்கை வாழ பெரும்பாலானவர்கள் விரும்புவது இயற்கையானது. நமது அறிவுசால் முறையை பயன்படுத்தி இந்த தலைமுறைக்கு, அடுத்த தலைமுறைக்கு, பூமிக்கு ஒரு நல்ல காரியத்தை செய்து விட்டோம் என்ற திருப்தியுடன் தினமும் தூங்குங்கள். இந்த எண்ணங்களின் பின்னணியில் விவசாயம் செய்யுங்கள்.
இயற்கையைக் காப்பது நமது தர்மம்
தர்மோ ரக் ஷதி - தர்மோ ரக் ஷ தஹா.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.