June 13, 2021

100% மக்கும் காகிதபாட்டில்கள் (100 % Bio Degradable Paper Bottles)

2018 - 19 புள்ளிவிவர அறிக்கையின்படி இந்தியா ஆண்டுதோறும் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இவை பெருமளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்ப்பதற்கு உலகளவில் பலர் ஒரு நிலையான மாற்றீட்டை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.



இந்த வகையில் உத்திரபிரதேசத்தின் நோய்டாவைச் சேர்ந்த 38 வயதான பெண் திருமதி. சமிக்ஷாகனேரிவால் (Mrs. Samiksha Ganeriwal) பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக "காக்ஸி பாட்டில்கள்" (Kagzi Bottles) என்ற முற்றிலும் 100%மக்கக் கூடிய காகித பாட்டில்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருமதி. சமிக்ஷா 2006 - ஆம் ஆண்டில் விக்னான ஜோதி இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் (Vignana Jyothi Institute of Management) வணிக நிர்வாக துறையில் (MBA) பட்டம் பெற்றபின்னர் ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணி புறிந்த பின் 2016 - ஆம் ஆண்டில் அவர் சொந்த பேக்கேஜிங் நிறுவனத்தைத் துவங்கினார் அப்போது முதல் தொடர்ந்து சுற்றுச்சூழல் நட்பு பேக்கேஜிங் குறித்த முயற்சியில் ஈடுபட்டு டிசம்பர் 2020 - ல் காக்ஸி பாட்டில்களை (Kagri Bottles) தனித்துவமான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, வடிவமைத்து, சந்தை படுத்தியுள்ளார் “காக்ஸி” என்ற பெயர் இந்த வார்த்தையான காகஸ் (Kaagaz) என்றால் "காகிதம்" என்ற பொருள்பட அமைந்துள்ளது.



சமீபத்திய ஆண்டுகளில் திகோகோ கோலா, கம்பெனி, லோரியல் கம்பெனி போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் பேப்பர் பாட்டில்களை உருவாக்க வேலை செய்கின்றன. இந்த பாட்டில்கள் ஒரு மெல்லிய உள் அடுக்கை கொண்டிருக்கின்றன. ஆனால் "காக்ஸி" பாட்டில்கள் தனித்துவமானது காகிதக் கழிவுகளைப் பயன்படுத்தி பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது இமாச்சல பிரதேசத்தின் "பட்டி" (Baddi) என்ற ஒரு நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மாதத்திற்கு 2 லட்சம் காகித பாடல்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த கழிவுகாகிதம் தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் உடன் கலந்து கூழ் ஆக்கப்பட்டு பாட்டில்கள் இரண்டு பகுதியாக வடிவமைத்து தயாரிக்கப்பட்டு நீர் எதிர்ப்பு பூச்சு தெளிக்கப்பட்ட பின் பாட்டில்களாக உருப் பெருகின்றன.

“காக்ஸி” பாட்டில்கள் தற்போது ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் மற்றும் லோஷன்களுக்கு மட்டுமே பயன்படுத்த உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் பானங்கள் திரவங்கள் மற்றும் பொடிகள் போன்ற அனைத்து வகையான பேக்கஜ்களும் உற்பத்தி செய்யப்படும் என்கிறார் ஸ்தாபகர் திருமதி.சமிக்ஷா.

உணவு மற்றும் பானங்களுக்கான பாட்டில்களை உருவாக்குவதற்கு நாடு முழுவதும் நான்கு நகரங்களில் உற்பத்திப் பிரிவுகளை அமைத்து உற்பத்தி செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத இன்னும் நிலையான மாற்றங்களை நோக்கி நகர்வது காலத்தின் தேவையல்லவா?

Contact us
Our office
242, sector 15A, Noida, Uttar Pradesh, India
Samiksha Ganeriwal
+91-9999105362/ 9885400040
kagzibottles@gmail.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories