December 31, 2021

பழைய பைக் - E பைக் (Zuink Retrofit)

 

 

பூமியின் இயற்கை படிம எரிபொருள் (Natural Fossil Fuel) வளம் படிப்படியாக குறைந்து வருவதாலும் அதன் பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது யதார்த்த உண்மை இதன் காரணமாக பல விதமான மாற்று சக்திகள் தொடர்பான தேடல்களும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறை, பொருளாதார சிக்கனம் மற்றும் கரிம உமிழவினால் ஏற்படும் காற்று மாசு குறைப்பு விழிப்புணர்வு ஆகிய காரணங்களால் பலர் மின்சார வாகனங்களை பயன்படுத்த ஈடுபட்டுள்ளனர் என்பது நிதர்சனம்.

உலக வாகனச் சந்தையில் ஏராளமான மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன அந்த வகையில் வாகன உரிமையாளர்களுக்கு மின்சார வாகனத்திற்கு மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்கும் பல நிறுவனங்கள் இருந்தாலும் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட
"ஜீயிங்க் ரெட்ரோஃபிட்" (Zuink RetroFit) என்ற துவக்க நிறுவனம் தனித்துவமான முறையில் பெட்ரோலில் இயங்கும் பழைய இருசக்கர வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக 4 மணி நேரத்தில் மாற்றி கொடுக்கின்றது.



சாதாரணமாக ஒரு புதிய மின்சார இருசக்கர வாகனம் வாங்கினால் அதற்கு 70,000 முதல் ரூ 1 லட்சத்திற்கு மேல் செலவாகும். ஆனால் "ஜுயிங்க் ரெட்ரோஃபிட் (Zuink Retrofit) நிறுவனம் உங்களுடைய பழைய பெட்ரோல் இருசக்கர வாகனத்தை ரூ 26,999 /- செலவில் மின்சார வாகனமாக 4 மணி நேரத்தில் மாற்றித் தருகிறது. இந்தத் தொகையையும் உடனே மொத்தமாக செலுத்த வேண்டியதில்லை மாதாமாதம்
ரூ.899/- EMI செலுத்தும் வசதியான திட்டத்தில் செயல்படுகிறது.



தற்சமயம் இந்நிறுவனம் பெங்களூருவில் உள்ள நுகர்வோர் தங்களின் மாற்று கிட்களில் ஒன்றை ரூ 499/- செலுத்தி முன்பதிவு செய்வதுடன் டிசம்பர் மாதத்தில் குறிப்பிட்ட தேதியில் அவர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்று நிறுவனர் திரு.சச்சின் உறுதி அளிக்கிறார்.

பெட்ரோல் இருசக்கர வாகனத்தை ஏன் மின்சாரத்திற்கு மாற்ற வேண்டும்:

1. நீங்கள் உங்கள் பெட்ரோல் ஸ்கூட்டரை மின்சாரமாக மாற்றும் போது உங்கள் மாதாந்திர எரிபொருள் செலவுகள் 60% வரை சேமிக்கிறது. சாதாரணமாக நுகர்வோர் ஒரு பெட்ரோல் ஸ்கூட்டருக்கு கி.மி க்கு சுமார் ரூ. 3.50 செலவிடுகிறார்கள். எலக்ட்ரிக் வாகனமாக மாற்றினால் அது ஒரு கிமி.க்கு ரூ 1.50 ரூபாயாக குறையும்.

2. பழைய பெட்ரோல் ஸ்கூட்டர் அதிக கரிம உமிழ்வுகள் தன்மையைக் கொடுக்கும். நீங்கள் ஒரு ஹோண்டா ஆக்டிவா, அல்லது டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வைத்திருந்தால் அதை மின்சார வாகனமாக மாற்றுவது அர்த்தமுள்ளதாக இருக்கும் கரிம உமிழ்வுகள் பூஜ்யத்தின்கு வரும். எரிபொருள் சேமிப்பு தவிர பூமியை காற்றுமாசு பாட்டிலிருந்து பாதுகாக்கிரீர்கள். .

3. பெட்ரோல் வாகனத்தை மின் வாகனமாக மாற்ற உடனடியாக பெருந் தொகையை செலவு செய்ய வேண்டியதில்லை. நுகர்வோரின் வசதிக்காக இந்நிறுவனம் மாதாந்திர சந்தாவாக  (EMI) ஆகு ரூ 899 /- என்று நிர்ணயித்து இருப்பது மிகச் சிறப்பு.

4. பெட்ரோல் வாகனம் மின்சார வாகனமாக மாற்றும் செயல்பாட்டின் போது பெட்ரோல் ஸ்கூட்டரின் இயந்திரம், எரிபொருள் தொட்டி (Petrol Tank) மற்றும் சைலன்சர் ஆகியவை அகற்றப்பட்டு பின்புற சக்கரத்தில் பொருத்தப்பட்ட ஹப் (Hub) மோட்டாருடன் மின்சார பவர் டிரையன் (Power Train) நிறுவப்படுகிறது. மாற்றப்பட்ட மின்சார ஸ்கூட்டரில் 2KWH லித்தியம் அயான் (Lithium Ion) பாட்டரியை நிறுவுதல் உட்பட ஒரு ஒயரிங் அமைப்பும் உள்ளது.

5. ஒரு நுகர்வோர் பார்வையில் உங்கள் ஸ்கூட்டரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் சர்வீஸ்கிற்கு விடுவது போன்றது. நீங்கள் பெட்ரோல் வாகனத்தை காலையில விட்டுட்டு பிற்பகலுக்குள் மின்சார வாகனமாக பெற்றுச் செல்லலாம்.

6. வாடிக்கையாளர்களுக்கு முதல் தொகுதியில் சில அற்புதமான வெளியிட்டு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் உள்ளன என்பது கூடுதல் தகவல்.

7. வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது நிறுவனத்தின் நிலையத்தில் 3 நிமிடங்களில் பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம். ஒரு இடமாற்றத்துக்கு ரூபாய் 80 செலுத்தினால் போதுமானது.

8. தற்சமயம் பெங்களூருவில் நிறுவனத்தின் பாட்டரி மாற்று நிலையங்கள் 200 க்கும் மேல் உள்ளது. ஆனால் இன்னும் சில மாதங்களில் நகரத்தின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு இடமாற்று நிலையம் என்ற நோக்கத்தில் செயலாற்றுகின்றனர்.

இதுவரையில் டி.வி.எஸ்.ஸ் கூட்டி (TVS Scooty) ஹோண்டா ஆக்டிவா 3ஜி, 4ஜி மற்றும் 5 ஜி ஆகிய நான்கு மாடல்களை மின் ஸ்கூட்டர்களாக "ஜுயிக் ரெட்ரோ ஃபிட் " (Zuink Retrofit) நிறுவனம் மாற்றுகிறது விரைவில் சுசுகி அக்ஸஸ், ஹீரோ பிளஷர் மற்றும் பல ஸ்கூட்டர்களை மின்சார மாற்றீடுகளை செயல்படுத்த விருக்கிறது.


தற்சமயம் பெங்களூருவில் மட்டும் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் விரைவில் டெல்லி, அகமதாபாத், புனே மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விரிவு படுத்த விருக்கிறது என்று ஸ்தாபகர் திரு. சச்சின் கூறுகிறார். 

OUR OFFICE

 Bangalore(Head office)

Mohan Chambers, #33, 1st Main Rd

3rd Phase, J. P. Nagar,

Karnataka 560078

SUPPORT

Bangalore

+91 80619 30007

Working hours from 09:00am to 10:00pm

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Stories