கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.நிர்மல். (Mr.Nirmal) 26 வயதான இளைஞர் தனது பட்டமேற்படிப்புக்குப்பின் சுமார் 5 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றிய பின் அரியவகை மாமிசத்தாவரங்கள் வணிகத்தின் மூலம் ஒரு கண்ணியமான வாழ்க்கையை (Decent living by selling Carnivorous Plants) நடத்தி வருகிறார்.
அவரிடம் ஆரம்பத்தில் "வீனஸ் ஃபிளை டிராப் (Venus Fly Trap) என்ற ஒரே வகை மாமிச தாவரம் மட்டுமே வளர்த்து வந்துள்ளார். இதன் கவர்ச்சியான சிவப்பு இலைகள், பூச்சிகள் மற்றும் சிலந்திகளுக்கு அழைக்கும் தளமாகும், பூச்சிகள், ஈக்கள், குளவிகள், எறும்புகள் முதல் கொசு லார்வாக்கள் வரையில் அனைத்தும் உண்டு ஜீரணிக்கப்படுகிறது.
தற்போது திரு.நிர்மல் அவர்களின் நர்சரியில் பிட்சர் செடிகள் (Pitcher Plants), சன் டியூஸ் (Sun Dews) சர்ரசீனியா (Sarracenia), மற்றும் பட்டர்வோர்ட்ஸ் (Butter Worts) போன்ற மாமிச தாவரங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் ஜெர்மெனி, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து விதையாக வாங்கி வளர்த்து வருகிறார்.
மாமிச தாவரங்களை நடவு செய்வதற்கான உதவிக்குறிப்புகள்:
மாமிச தாவரங்களே வீட்டில் நடவு செய்வதற்கு மூன்று விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்
1. முதலாவதாக ஒவ்வொரு மாமிச தாவரங்களுக்கும் சூரிய ஒளி தேவை அதற்கான சிரியான இடத்தினை தெரிவு செய்ய வேண்டும்.
2. இரண்டாவதாக தாவரங்கள் வளர "ஊட்டச்சத்து இல்லாத சூழல்" (Nutrient Free Environment) தேவை. எனவே தாவரத்தை வளர்ப்பதற்கு ஒரு நல்ல வழி இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கழுவிய கோகோ பீட் போதுமானது.
3. மூன்றாவதாக ஒவ்வொரு மாமிச தாவரத்திற்கும் நிறைய தண்ணீர் தேவை. தண்ணீர் கொடுக்க தவறினால் அத தாவரத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.
தினசரி 5 முதல் 6 வரை திரு. நிர்மல் தனது மாமிச தாவரங்களை விற்பனை செய்வதில் இருந்து மாதம் தோறும் ரூ 30,000க்கும் மேல் சம்பாதிக்கிறார். டெல்லி, பெங்களூரு, கொச்சி போன்ற பெருநகரங்களிலி ருந்து ஆர்டர்களை பெறுகிறார்.
தாவரங்களில் ஆர்வமுள்ளவர்கள் இதை ஒரு தொழிலாகவும் எடுத்துக்கொள்ளலாம். மாமிச தாவரங்கள் விற்பதன் மூலம் கிட்டத்தட்ட ரூ 40,000 முதல் ரூ 50,000 வரையில் எளிதாக சம்பாதிக்க முடியும் என்று திரு.நிர்மல் கூறுகிறார்.
"நந்தனம் எக்ஸாடிக்ஸ்" (Nandhanam Exotics) என்ற யூடியூப் சேனலும் உள்ளது. அங்கு அவர் தனது மாமிச செடிகள் பற்றிய வீடியோக்களையும், தாவரங்களையும் எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பதற்கான உதவிக் குறிப்புகளையும் இடுகிறார். ஒரு செடி முளைத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குப் பிறகும் விற்க முடியும் என்று கூறுகிறார். தற்போது அவரது சொந்த தோட்டத்தில் ரூ. 300 முதல் ரூ.5000 வரையிலான விலையுள்ள தாவரங்கள் உள்ளன.
பொதுவாக ஆர்டர்களைப் பெற்றவுடன் கூரியர் மூலம் 15 நாட்களுக்குள் பெறும் வகையில் அனுப்பப்படுகிறது. ஆர்டர்கள் அவரது முகப்புத்தகம் (Face Book) வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Nandhanam Exotics:
Contact Number: 8113934755
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.