September 11, 2020

சூரிய ஒளி உலர்விப்பான்கள் (Solar Dryer)

திரு. வைபவ் டிட்கே (Mr. Vaibhav Tidke) மகாராஷ்டிரா மாநிலத்தின் குக் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே
கிராம விவசாயிகள் சரியான சேமிப்பு நிலையங்கள் இல்லாமல் விவசாய விளை பொருட்கள் வீணாவதை கண்டவர். அதனால் பெருமளவில் விவசாயிகள் பொருளாதார இழப்பை தொடர்ந்து சந்தித்து வந்ததை கண்டறிந்த திரு. வைபவ் இழப்பினை தவிர்க்க தீர்க்கமான எண்ணம் கொண்டிருந்தார்.

மும்பையின் ரசாயன தொழில்நுட்ப கல்லூரியில் (Institute of chemical Technology) பட்டப்படிப்பை முடித்த பின்னர் கல்லூரி பேராசிரிய பேராசிரியர் மற்றும் நண்பர்கள் துணையுடன் சயின்ஸ் 4 சொஸைட்டி டெக்னாலஜி (Science 4 Society Technologies) (S4S) என்ற நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் சோலார் கண்டக்டர் டிரையர் (Solar Conductor Dryer) என்ற உலர வைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த உலர்விப்பான்கள் மூலமாக விவசாய விளைபொருட்களின் சேமிப்பு வாழ்நாளை (Shelf Life) நீட்சி செய்ய முடியும். ரசாயனங்களோ, செயற்கை சேர்பான்களோ  (Artificial Additives) எதுவும் தேவையில்லை மேலும் காய்கறிகள், பழங்கள் மட்டுமல்லாமல் இறைச்சி, கடல் உணவுகள், இயற்கை நறுமணப் பொருட்களின் (Spices) வாழ்நாளை நீட்சி செய்யவும் இயலும் என்பது சிறப்பு.


S4S நிறுவனம் தற்போது ஃபூடர் (FooDER) என்ற சிறிய அளவு வீட்டு சூரிய ஒளி உலர்விப்பான்களும் இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் வெளியிட்டு சிறப்பு சேர்த்துள்ளது. மேலும் B2B என்ற புதிய நிறுவனத்தின் மூலம் உலர் உணவுகள் (Dehydrated உணவு வகைகள்) உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்சமயம் S4S, FooDER, B2B சோலார் உலர்விப்பான்கள், பிரான்ஸ், ஜமைக்கா, நேபாளம், வியட்நாம், இலங்கை, கென்யா, இந்தியா மற்றும் வங்காளம் ஆகிய நாடுகளில் சுமார் 1200 இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மக்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்ய இத்தகைய கண்டுபிடிப்புகள் பெருமளவில் உதவியாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Contact Us:

Email
sales@s4stechnologies.com

Phone
+91-7738193313

Office
Plot no 43, Sector 6, Sanpada East, Navi Mumbai 400-705

Stories