August 17, 2022

மிதக்கும் வீடு (Floating Amphibious House)

ஆண்டுதோறும் உலகளாவிய இயற்கை பேரிடர்கள் நடைபெறுகின்றன. இவை நெருப்பு, காற்று மற்றும் நீரால் நிகழ்கின்றன. இவற்றில் உலகம் முழுவதும் வெள்ள நீரினால் பெருமளவு உயிரிழப்புகள் மற்றும் வீடுகள் சேதமடைகின்றனர், இதனால் வெள்ளம் மற்றும் இயற்கைப் பேரிடர்களை தாங்கக்கூடிய தொழில்நுட்பங்கள் அல்லது வடிவமைப்புகளைக் கொண்டு வருவது குறித்து பரவலாக முயற்சிகள் தொடர்கின்றன.இயற்கை பேரிடர் வெள்ளத்தினை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக தண்ணீருடன் தழுவி வாழ்வதற்கான ஒரு துவக்கப் பணியாக கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் இளைஞர்கள் திரு. நன்மா கிரிஷ் மற்றும் பென் கே ஜார்ஜ் ஆகியோர் வெள்ள நீரில் மிதக்கும் இந்தியாவின் முதல் ஆம்பிபியஸ் வீடுகளை உருவாக்கி உள்ளனர்.2018 - ல் நெஸ்ட் அபைட் (Nest Abide) என்ற துவக்க நிறுவனத்தின் மூலம் வெள்ளத்தைத் தாங்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுமானங்கள் ஆகியவற்றை செயலாற்றி வருகிறது. மேலும் 2021 - இல் கான்கிரிட் மிதவை அடித்தளம் கொண்ட ஆம்பிபியல்ப கட்டிடத் தொழில் நுட்பத்தின் இந்தியாவின் முதல் முன்மாதிரி நிறுவனமாக உள்ளது.மிதவை வீடுகள் :-

மிதவை வீடுகள் வலுவான கான்கிரீட் மற்றும் இலகு ரக மிதவை அடித்தளங்களால் ஆனவை. அவை வெள்ளத்தின் போது மட்டும் தற்காலிகமாக மிதக்கும் திறன் கொண்டவை இவை வழிகாட்டுதல் இடுக்கைகள் (Guidance Posts) மற்றும் தூண்கூறுகள் மூலம் (Pillars) உயருகின்றன. மிதந்தாலும் வீடு நகராமல் அதே நிலையில் இருக்க உதவுகின்றன பின்னர் தண்ணீர் வடிந்தவுடன் கட்டிடம் தரைக்கு திரும்பும்.

வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நிலையான உயரமான கட்டிடங்களை விட இந்த தொழில்நுட்பம் சிறந்தது.கட்டிடத்தின் மிதக்கும் அடித்தளம் வீட்டை மிதக்க அனுமதிக்கிறது அவை கான்கிரீட் வெற்றுப் பெட்டியாகவோ (Hollow Blocks) அல்லது ஈ.பி.எஸ் விரிவாக்கக்கூடிய பாலிஸ்டைரீன் (Expandable Poly Styrene) தொகுதியுடன் கூடிய கான்கிரீட் கலவையாகவோ தயாரிக்கப்படுகின்றன.

சாதாரண கான்கிரீட் வீடுகளுடன் ஒப்பிடும்போது இத்தகைய வீடுகள் மலிவு விலையில் உள்ளன. வழக்கமான முறையைப் போலல்லாமல் வீட்டைக் கட்டுவதற்கு முன் தயாரிக்கப்பட்ட பேனல்களை பயன்படுத்துவதால் சிமெண்டின் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது.

Working of amphibious buildings at Maasbommel in the Netherlands. (Credit: Nanma Gireesh)
600 சதுர அடியில் பேனல்கள் மற்றும் ஆயத்த கட்டமைப்பு மற்றும் கான்கிரீட் உள்ளே கூடுதலாக 600 சதுர அடியில் ஹலோ பாக்ஸ் அடித்தளம் அமைக்க சுமார் 15 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் தல நிலைமைகள் மற்றும் வாழ்க்கையாளரின் குறிப்பிட்ட தேவைகளைப் பொறுத்து 1500 சதுர அடி முதல் 2700 சதுர அடி வரை விலை மாறுபடும்.

"ஆம்பிபியஸ் ஹவுசிங்" தவிர நெஸ்ட் அபைட் என்பது ஒரு கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு ஆலோசனை நிறுவனமாகும். திரு. நன்மா மற்றும் திரு. பென் இவர்களின் முன்முயற்சிக்காக ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியா லிஸ்ட் 2022 - இல் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது கேரளாவின் குட்டநாடு மற்றும் மன்றோ தீவின் வெள்ளப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக KDISC (கேரள டெவலப்மெண்ட் இன்னோவேஷன் மற்றும் ஸ்ட்ரா டஜிக் கவுன்சில்) செயல்படுகிறது.

வீடுகளுக்கு KDISC மூலம் அரசாங்கத்தால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிதியுதவி செய்யப்படுகிறது.

பொதுவாக நெஸ்ட் அபைட் (Nest Abide) நிறுவனம் பயனாளர்களின் சுயமதிப்பை அதிகரிப்பதன் மூலமும் கடினமான காலங்களில் ஆதரவளிப்பதன் மூலமும் பொதுவான நலன்களைப் பின் தொடர்வதன் மூலமும் ஒரு நட்பு வளையத்தை உருவாக்குகிறது. 

Our Website:

https://nestabide.com/

NESTABIDE TC 6/1572, SN Nagar, Ulloor-Akkulam, Thiruvananthapuram, Kerala, India NestAbide - +91 6282 670 511 Nanma Gireesh - +91 7902276418 Ben K George - +91 8848876877

Stories