கேரளாவின் 33 வயதான சன்னி நெல்சன் (Sunny Nelson) என்ற முன்னாள் சரக்குக் கப்பல் அதிகாரி (Merchant Navy Officer) அவருடைய சொந்த ஊரான கோட்டியூர் (Kottiyoor) நகரில் மிகக் குறைந்த விலையில் குளிர்ந்த மண் வீடு கட்டியுள்ளார்.
அவருடைய இந்த கனவு வீடு அரை ஏக்கர் நிலத்தில் 1250 சதுர அடியில் மூன்று அறைகளைக் கொண்டது. வீடு கட்டும் செலவாக 20 லட்சமும் வீட்டுத் தேவைக்கான (Furnishing) அனைத்து மரச்சாமான்கள் இதர பொருட்களுக்காக 3 லட்சம் ரூபாய் செலவு செய்து தன்னிறைவு பெற்ற வீடாக அமைத்துள்ளார்.
வீடுகட்ட சிவப்பு கப்பி மண் (Laterite soil) - மணல், மற்றும் குறைந்த அளவு சிமெண்ட் டையும் பயன்படுத்தி உள்ளார். வீட்டுச் சுவர்கள், தூண்கள் அனைத்தும் சிவப்பு கப்பி மண் கொண்டு தயாரிக்கப்பட்ட கற்களை கொண்டு வடிவமைத்துள்ளார். இத்தகைய கற்கள் ரூ 60 /- க்குள் அடக்கமாகிறது. இக் கற்களால் கட்டப்பட்ட சுவர்கள். இயற்கையாகவே ஆரஞ்சு நிறத்தில் பரிணமிப்பதால் மேல்பூச்சு எதுவும் அவசியமில்லை. சிமெண்டு பூச்சு செலவுகள் அனைத்தும் மிச்சமாகிறது என்று கூறுகிறார் திரு.சன்னி நெல்சன்.
கூரைகள் வேய் வதற்கான ஓடுகளை புதிதாக வாங்கினால் ரூ 45/- ஆகிறது எனவும் அழிக்கப்பட்ட வீடுகளின் பழைய ஓடுகளை ரூ 5/- க்கு மட்டுமே வாங்கி அதனை நன்றாக கழுவி பயன்படுத்தி மேலும் செலவுகளை குறைத்துள்ளார்.
"வாஸ்துகம் ஆர்கிடெக்ட்ஸ்" (Vasthukam Architects) என்ற நிறுவனம் திரிச்சூரில் தலைமையிடமாகக் கொண்டது. வீட்டின் பெரும்பாலான உள் கட்டமைப்புகளை வடிவமைத்து கொடுத்துள்ளது. தரை அமைப்புகள் அனைத்தும் ரெட் ஆக்ஸைட் ஒடுகளும் (Red Oxide tiles) ஃபெர்ரோ சிமெண்ட் (Ferro Cement) ஸ்லாப்புகள் கொண்டு அமைக்கப்பட்டு மிகக் குறைந்த அளவிலேயே மரச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டின் உள்ளே இரண்டு மின் விசிரிகள் பொருத்தப்பட்டிருந்தாலும் அவைகள் பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதில்லை என்றும், இயற்கையாகவே வீடு குளுமையாக இருக்கிறது என்றும் திரு.சன்னி நெல்சன் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில் அனைத்து கட்டுமானமும் ஜீன் 2019 ல் துவங்கி பிப்ரவரி 2020-ல் முடிந்ததன் மூலம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பிரச்சனைகள் தவிர்த்திருப்பதாக சந்தோஷப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.