September 06, 2020

எறால் வளர்ப்பில் "பயோ ஃபிளாக்" தொழில்நுட்பம் (Bio - Floc Technology) சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுசுழற்சி முறை

திரு. சூரியகுமார் போரய்யா (Suryakumar Boraih) 66 வயதான, ஐ.ஐ.டி (IIT) தொழில்நுட்ப வல்லுநர். அமெரிக்காவில் பல்லாண்டு காலம் பொறியாளராக பணியாற்றியவர். விவசாய குடும்ப பின்னணியில் கடந்த 30 வருடங்களாக தன்னுடைய 100 ஏக்கர் நிலப்பரப்பில் மகேந்திரப்பள்ளி (Mahendrapalli) என்ற கிராமத்தில் இறால் பண்ணை நடத்தி வருகிறார்.

பயோ ஃபிளாக் டெக்னாலஜி ஏறால் வளர்ப்பு பயிற்சியினை முன்னதாக பேராசிரியர் தி.ரு.யோரம் அவ்னிமெல்ச் (Yoram Avnimelech) டம் பெற்றார். பேராசிரியர் ஹாலிஃபாவின் இஸ்ரேல் பல்கலைக் கழகத்தில் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.



பொதுவாக ஏறால் பண்ணை விவசாயிகள் பண்ணை நோய்கள் முக்கியமாக "வெள்ளைப் புள்ளி" வைரஸ் நோய் (White Spot Virus) தாக்காமல் இருக்க பலவகையான ரசாயன மருந்துகளை பயன்படுத்துவர். அதனால் பின் விளைவுகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. "பயோ ஃபிளாக் தொழில்நுட்பத்தில் பிரத்தியேகமான தடுப்பு முறைகளையும் சரியான உணவளித்தல் முறையிலும் பெருமளவு நோய்கள் தவிர்க்கப்பட்டு நான்கு மடங்கு அதிகமான அளவில் வருமானம் ஈட்ட முடிகிறது என்று திரு.சூரியகுமார் போரய்யா கூறுகிறார்.

திரு. சூரியகுமார் போரை யாவின் ஹைடைட் சீ பார்ம்ஸ் (Hitide Seafarms) -ன் "பயோ ஃபிளாக் தொழில் நுட்பம் (Bio-Floc Technology) செயல்படும் முறை:

- மாதத்திற்கு ஒரு முறை இறால் வளர்க்கும் பண்ணை நீரை வெளியேற்றிவிட்டு நதியின் முகத்திவாரத்திலிருந்து (Estuary) நல்ல நீரை பண்ணைக் குட்டையில் நிரப்பவேண்டும். இது மிகவும் முக்கியம்.

- பண்ணைக் குட்டையில் உள்ள மீதமான தீவனம் மற்றும் இறால்களின் கழிவுகள் அனைத்தும் இடப்படும் ஹெட்டரோடிரோபிக் (Hetero Trophic Bacteria) பாக்டீரியாக்கள் உண்டு போட்டோ சிந்தசிஸ் (Photo synthesis) முறையில் கழிவுகள் அனைத்தும் சத்தான உணவாக மாற்றப் படுவதோடு அம்மோனியா உற்பத்தியும் தடுக்கிறது என்பது சிறப்பு. மேலும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு வெல்லமும் (Molasses) இடப்படுகிறது.

மேலும் இறால்களை நோயிலிருந்து பாதுகாக்க குளத்தில் (HDPE) அதிக அடர்த்தி பாலி எத்திலீன் தாள் இடப்படுகிறது.

"பயோ ஃபிளாக் டெக்னாலஜி" ன் மிக முக்கியமான அங்கமான பிராணவாயு, பிரத்தியேகமான இயந்திரங்கள் (Aerator) மூலம் தொடர்ந்து நீரில் சுழற்சி செய்யப்படுகிறது.

மற்றும் 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் வகையில் பண்ணையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான எறால் பண்ணையில் ஒரு ஹெக்டேருக்கு 5 டன்கள் எறால் பெரும் நிலையில் திரு. சூரியகுமார் போராவின் ஹைடைட் சீ பார்ம்ஸ் (Hitide Seafarms) பயோ ஃபிளாக் டெக்னாலஜி (Bio Floc Technology) பண்ணை ஹொக்டேருக்கு 20 டன் எறால் உற்பத்தி பெறுகிறது என்பது பாராட்டத்தக்கது.

Hitide Sea farms வெற்றிக்கு காரணம் ஆக்சிஜன் செலுத்தும் இயந்திரங்கள், பாக்டீரியா ஃப்லாக்குகள் மற்றும் நம்பகத்துக்கு உகந்த 75 பணியாளர்கள் தான் என்று பெருமையுடன் தெரிவிக்கிறார் திரு. சூரியகுமார் போரா

" கடற்கரையோரங்கள், கடலும் நதியும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது".

வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால் நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல வருமானம் கிடைக்கவே பலரும் இதில் ஈடுபட்டு வருகின்றனர்"

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories