November 16, 2021

சோலார் பேனல்கள் மூலம் குடிநீர் உற்பத்தி ("Solar Drinking water Production")

பூமி மூன்றில் இரண்டு பங்கு நீரைக் கொண்டிருந்தாலும் உலகின் சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையாகவே உள்ளது. உதாரணமாக வளர்ந்த நாடாக இருந்தபோதும் மத்திய அமெரிக்கா (Central America) இந்த நிலையில் உள்ளது.



இதற்கான ஒரு தீர்வாக திரு.கோடி ஃப்ரீசன் (Mr. Cody Friesen) என்ற பொருள் அறிவியல் துறையின் (Material Science) பேராசிரியர் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து ஒரு நீண்டகால செயல் பாட்டில் பயன்படுத்தத்தக்க ஒரு "சூரிய சக்தி குடிநீர் உற்பத்தி" (Solar Drinking Water Production) செய்யும் (Hydropanel) உபகரணத்தை கண்டுபிடித்து "சோர்ஸ் ஹைட் ரோ பேனல்" (Source Hydropanel) என்ற தனியுரிமை பெற்ற பல காப்புரிமைகள் கொண்ட நிறுவனத்தின் மூலம் சந்தைப் படுத்தியுள்ளார்.



இது ஒரு வகையான புதுப்பிக்கத்தக்க நீர் தொழில் நுட்பமாகும் (Renewable Water Technology) இது சூரியனின் சக்தியை பயன்படுத்தி சுத்தமான, குடிநீரை காற்றில் இருந்து பிரித்தெடுத்து சேகரிக்கப்பட்ட நீர் தேவையான கனிமங்களுடன் (Minerals) உயர்தர  மாசற்ற குடிநீராக கிடைக்கிறது.



"ஹைட்ரோ பேனல்" (Hydro Panel) வேலை செய்யும் முறை:

1. சோலார் P.V ஐப் பயன்படுத்தி "சோர்ஸ்" (Source) மின் விசிரிகள் வழியாக சுற்றுப்புற காற்றை எடுத்து அதிலிருந்து ஒரு ஹைக்ரோஸ் கோப்பிக் (Hygroscopic) பொருள் மூலம் நீராவி உற்பத்தியாகிறது.

2. சூரியனிலிருந்து வரும் வெப்பத்துடன் "சோர்ஸ்" சேகரிக்கப்பட்ட நீராவியை திரவமாக மாற்றுகிறது.

3. உற்பத்தியாகும் இந்த தூய நீர் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இதர கனிமங்கள் ஹைட்ரோ பேனலில் உள்ள 4 உணர்விகள்  (4 Sensors) தண்ணீரை கண்காணித்து தேவையான அளவு சோமானமாகி  சுவையான, சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.



"ஹைட்ரோ பேனல்களின்" (Hydropanels) சிறப்புகள்:-

1. சூரிய ஆற்றல் பேனலை முற்றிலும் அஃப கிரிட் (Off - Grid) மூலம் இயக்குகிறது.

2. காற்றிலிருக்கும் தண்ணீரை மட்டுமே பிரித்தெடுக்கிறது.

3. உபகரண நிறுவல்தவிர எந்த செலவுகளும் இல்லை.

4. மிகக்குறைந்த பரிமாணங்கள் 4*8*3*8  அடிகள் கொண்ட "ஹைட்ரோ பேனல்கள்" எடை 154 கிலோ மட்டுமே.

5. ஆயுட்காலம் 15 ஆண்டுகள்.

6. காற்றில் உள்ள எந்த மாசுபாட்டையும் தண்ணீருக்குள் கொண்டு வருவதில்லை.

7. எந்தவிதமான தட்ப வெட்ப நிலையிலும் இயங்கக்கூடியது.

8. பராமரிப்புக்காக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை "மினரல் கார்ட்ரிட்ஜ்ம்” ஆண்டுக்கு ஒரு முறை "ஏர்பில்டர்" மற்றும் பாலிஷ் கார்ட்ரிட்ஜ்" மட்டும் மாற்றினால் போதுமானது. இதையும் பயன் பாட்டாளர்கள் செய்து கொள்ளமுடியும்.

9. உலகளவிலான அனைத்து குடி நீர் ஒழுங்குமுறை தரநிலைகளை அளிக்கிறது.

10. வறண்ட பகுதிகளிலும் வேலை செய்கிறது.

11. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களில் அமைக்க முடியும்.

12. தனியான கட்டமைப்புகள் தேவையில்லை, மின்சாரமோ தண்ணீரோ குழாய்களோ தேவையில்லை.

13. சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

14. "சோர்ஸ்" (Source) நிறுவனம் உலகெங்கிலும் கிளைகள் கொண்டுள்ளது சென்னையிலும் ஒரு கிளை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் "Source" ன் ஹைட்ரோ பேனலை தேர்ந்தெடுக்கும்போது எந்த சமரசமும் இல்லாமல் சுத்தமான நிலையான குடிநீரை தேர்வு செய்கிறீர்கள் என்று கொள்ளலாம்.

SWELECT Energy Systems Limited
SWELECT House, No. 5, Sir P. S. Sivasamy Salai,
Mylapore, Chennai – 600 004, India
+91 44 2499 3266
+91 44 2499 5179
info@swelectes.com

Source:

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories