1960 களில் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and space Administration) (NASA) விண்வெளிப் பயணிகளை பலவீனப் படுத்தும் விண்வெளிப் பயணங்களிலிருந்து மீட்க உதவும் வகையில் துடிப்புள்ள மின் காந்தபுலம் (Pulsed Electro Magnetic Field - (PEMP) சிகிச்சை உருவாக்கியது. இது ஒரு ஆக்கிரமிப்பு இல்லாத (Non Invasive) மற்றும் வலியற்ற (Painless) சிகிச்சையாகும். இது தசை, எலும்புகள் மற்றும் உறுப்புகளை குணப்படுத்தி உடலுக்கு குறைந்த அளவிலான காந்த அதிர்வு வெண்களை (Magnetic Frequencies) அனுப்புகிறது. மற்றும் குணப்படுத்தும் செயல் முறையை (Healing Process) மேம்படுத்துகிறது.
இந்த சிகிச்சை பாரம்பரிய லேசர் சிகிச்சையிலிருந்து வேறுபட்டது. காயமடைந்த பகுதிகளை நோக்கி மின்காந்த புலன்களை (Electro Magnetic Fields) நேரடியாக செலுத்த முடியும் மேலும் இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
நாசா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குஜராத்தின் ஜா குடும்பம் (Jha Family) ஒரு புதுமையான பிசியோதெரபி சாதனத்தை உருவாகியுள்ளது. இந்த சாதனத்தை விலங்குகளின் காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் பக்கவாதத்தை (Paraplegia) குறைந்த செலவில், நேரத்தில் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சை மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் அதேவேளையில் குஜராத்தை தளமாகக் கொண்ட பார்த் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Parth Electronics Pvt.Ltd) விலங்குகளை குணப்படுத்த அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இயந்திரத்தை உருவாக்கி சந்தைப் படுத்தியுள்ளது.
1980- ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் புகை பிடிக்காத சமையல் அடுப்புகள், வீட்டு பாதுகாப்பு அமைப்புகள், காற்று மற்றும் சூரிய கலப்பின
(Wind and Solar Hybrid Systems) அமைப்புகள் மற்றும் பலவற்றில் செலவு குறைந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.
இந்த நிறுவனம் இரண்டு கருவிகளை உருவாக்கி உள்ளது நாய்கள், முயல்கள், பூனைகள் போன்ற 100 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள விலங்குகளுக்கு PEMF – PET, மற்றும் பசுக்கள், குதிரைகள் போன்ற பெரிய விலங்குகளுக்கு PEMF-TAME என்பவை சாதனங்களின் சராசரி விலை சர்வதேச சந்தைகளில் சுமார் 5 லட்சம் ரூபாய் ஆசின்றது. ஆனால் இந்நிறுவனம் இதை 1 லட்சம் ரூபாய் மற்றும் 28,000 ரூபாய்க்கும் விற்கிறது.
சாதனம் பிரிக்கக்கூடியக பாட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 - 11 மணி நேரம் இயங்க கூடியது. ஒற்றைத் தலைவலி, திறந்தகாயங்கள் போன்ற சிக்கல்களுக்கு இந்த சாதனம் எட்டு வெவ்வேறு நிரலாக்கங்களைக் (Eight Different Programming) கொண்டுள்ளது, மேலும் அதிர்வெண்ணை பொருத்து (Depending Upon Frequency) பயனர் தெரிவு செய்து பயன்படுத்தலாம். சாதனம் விரைவில் குணமடைய வைப்பதோடு மருத்துகளின் மீதான சார்பு (Dependency) நிலையை குறைக்கிறது.
Parth Electronics Pvt Ltd
Address: I/103, phase-4,Zone B-9, G.I.D.C. Estate, B/H Swiss Glasscoat, Vitthal Udyognagar INA, Gujarat 388121
Hours:
Open ⋅ Closes 6PM
Parsi New Years Day might affect these hours
Phone: 094081 25311
Our Website: https://pepl.ind.in/
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.