திருவண்ணாமலை S.K.P வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி செல்வி. வினிஷா உமா சங்கர் (Miss.Vinisha Umasankar) தள்ளுவண்டி சலவை தொழிலாளிகளுக்கு உதவும் வகையிலும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையிலும் சூரிய ஒளியைக் கொண்டு இயங்கும் மின்சார சலவை இயந்திரத்தைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலான சலவை யகங்கள் கரி (Char Coal) மட்டுமே பயன்படுத்துவதால் ஒரு கிலோ கரி தயாரிக்க சுமார் 12 மரங்கள் எரிக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏரத்தாழ 10 மில்லியன் கரி பயன்படுத்தும் தள்ளு வண்டி சலவை செயலகங்கள் ஒரு நாளைக்கு 5 கிலோ கரியை பயன்படுத்துவதன் மூலம் 50 மில்லியன் கரியும் (Char Coal) அதற்காக மரங்களும் எரிக்கப்படுவதுடன் காற்று மாசு ஏற்ப்படுத்துவதிலும் (Air Pollution) பெரும் பங்குவகிக்கின்றது.
இதற்கெல்லாம் விடிவாக 2018 - ஆம் ஆண்டில் செல்வி, வினிஷா உமாசங்கர் சூரிய ஒளி மின்சார சலவை இயந்திரத்திற்கான செயல் முறையை கண்டுபிடித்துள்ளார். இவருடைய கண்டுபிடிப்பினை அகமதா பாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு முகமை (National Innovation Foundation Ahmedabad) பொறியாளர்கள் சிலர் ஒன்றிணைந்து சூரிய ஒளி மின்சார சலவை இயந்திர தள்ளுவண்டியினை (Solar Electric Ironing Cart) வடிவமைத்து, தயாரித்து உதவி உள்ளனர்.
செல்வி.வினிஷா அவர்களின் கண்டுபிடிப்பிற்காக டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் (A.P.J Abdul Kalam Ignite Award) விருதும், உலக "குழந்தைகள் சூழ்நிலை பரிசு" (Childrens Climate Prize) விருதும் அதற்கான 8 லட்ச ரூபாய் அன்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சார தள்ளுவண்டி :
1. வண்டியின் கூறைமீது ஒளி சென்சார் பலகைகள் (Panels) வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது.
2. சூரிய ஒளியின் மூலமாக சென்சார் பலகைகள் (Panels) 1 மணிக்கு 250 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வண்டியில் கீழ் அறையில் அடுக்கப்பட்டுள்ள மின்கலங்களில் (Battery) சேமிக்கப்படுகிறது.
3. 6 மணி நேரத்தில் பேட்டரிகள் முழுவதுமாக மின் னேற்றம் (Charge) ஆகின்றது.
4. சேமிக்கப்பட்ட மின்சாரம் மாற்றிகள் (Inverter) மூலமாக சலவை இயந்திரத்தை (Iron Box) 6 மணி நேரம் வரையில் சூடாக வைத்திருக்க வல்லது.
5. இந்த மின்சாரம் மூலமாக செல்போன்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று கூடுதல் அனுகூலம்.
இதற்கான செலவுகள் இன்னமும் நிர்ணயிக்கப்படாத நிலையில் செல்வி.வினிஷா, தான் பெற்ற 8 லட்ச, ரூபாய் பரிசுத்தொகையை சில ஏழை சலவைத் தொழிலாளிகளுக்கும் உதவும் வகையில் சூரிய ஒளி மின்சார தள்ளுவண்டிகள் தயார் செய்து பரிசளிக்கப் போவதாக கூறி அனைவரையும், வியப்பில் ஆழ்த்துகிரார்.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.