மே. 2020ல் மகாராஷ்டிராவின் நாசிக் நகரைச் சேர்ந்த 28 வயதான விவசாயி திரு.நிதின் குலே (Mr. Nitin Ghule) கழிவு பொருட்களை ( Scrap) பயன்படுத்தி ஒரு தழைக்கூளம் இயந்திரத்தை (Mulching Machine) உருவாக்கி உள்ளார், இது நேரம் பணம் மற்றும் உழைப்பைக் கூட (Labour) மிச்சப் படுத்துகிறது.
வழக்கமான தழைக்கூள செயல்முறைக்கு சுமார் 12 தொழிலாளர்கள் மற்றும் தழைக்கூளம் காகிதங்கள் தேவை. ஒரு ஏக்கர் நிலத்தில் அமைக்க சுமார் இரண்டு நாட்கள் ஆகும். Covid - 19 ஊரடங்கில் குறைந்த எண்ணிக்கை வேலையாட்களை மட்டும் ஆதாரமாக கொண்டு இருக்க இயலாது.
குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே மட்டுமே உள்ளதால் நிலம் சரியான நேரத்தில் தயார்படுத்த முடியாமல் விதைப்பதை பாதிக்கிறது. மேலும் தாமதமான அறுவடைக்கு வழிவகுக்கிறது. இது பண்ணை விளை பொருட்களை சந்தைப்படுத்த தாமதமாகிறது மேலும் இந்த நேரத்தில் தேவை குறைந்து விட்டதால் விவசாயிகளின் வருமானத்தையும் குறைக்கிறது.
இந்த சிக்கலை சமாளிக்க விவசாயி திரு. நிதின்குலே பழைய கழிவு செய்யப்பட்ட (Scrap) பொருட்களை கொண்டு தழைக்கூள காகித பரவல் இயந்திரத்தை வடிவமைத்து தயாரித்து நடைமுறைப் படுத்தியுள்ளார். உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் தற்போது சிறப்பான ஒரு இயந்திரத்தை இரண்டு நபர்கள் செயல்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளார். இயந்திரத்தை திரு.நிதின் குலேவே தயார் செய்தால் ரூ.7000/- மட்டுமே செலவானது.
வழக்கமாக ஒரு ஏக்கர் நிலத்தில் தழைக்கூளம் பரப்ப 12 தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் உணவு செலவினங்கள் உடன் ரூ 8000/- வரை ஆகிறது. இருப்பினும் திரு.நிதின் குலே அவர்களின் தனித்துவமான இயந்திரம் ஒரு முறை முதலீடாக ரூ. 10,000/- க்கு வழங்குகிறார் பயன்பாட்டுக்கு பின் சாதனத்தை மடித்து ஒரு கொட்டகையில் வைத்துக் கொள்ளலாம் மற்றும் சாதனத்தின் சக்கரடயரின் காற்றழுத்தத்தை பராமரிப்பதைத் தவிர வேறு எந்த பராமரிப்பு செலவும் இல்லை. ஒரு ஏக்கரில் தழைக்கூளம் அமைக்க 8 மணி நேரம் போதுமான என்பது சிறப்பம்சம்.
திரு.நிதின் குலே - அவரது கண்டுபிடிப்பான இயந்திரத்திற்கு ஏற்கனவே 100 ஆர்டர்களைப் பெற்றுள்ளார். விவசாயிகளுக்கு வேலை செய்வதை எளிதாக்குவதற்கு மேலும் புதுமையான யோசனைகளை கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
Mr. Nitin Ghule:
9890981532
இதில் மக்கும் தன்மை கொண்ட மல்ச்சிங் சீட் உள்ளது. அதைப் பற்றிக் கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
https://www.shivampolymers.co.in/mulching-films.html#pop
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.