August 21, 2020

"பயோ-டி-எனர்ஜி" (Bio-D-Energy) சமையல் எண்ணெய் கழிவிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம்.

"பயோ-டி-எனர்ஜி" (Bio-D-Energy) சமையல் எண்ணெய் கழிவிலிருந்து   எரிபொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம்.

ஹரியானாவைச் சேர்ந்த புதிய தொழில் முனைவர் (Entrepreneur) திரு.சிவா விக் (Siva Vig) அவர்கள், பயன்படுத்தியபின் கழிவு செய்யப்படும் சமையல் எண்ணெயில் இருந்து மோட்டார் வாகனம் இயக்கும் பயோ டீசல் எண்ணெய் தயார் செய்யும் பயோ-டி-எனர்ஜி (Bio- D-Energy) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நிலத்தடி எண்ணெய் வளம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் சமையல் எண்ணெயிலிருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் முறையில் வெற்றிகண்டுள்ளார்.


இத்தகைய பயன்பாட்டில் நான்கு வகையான அனுகூலங்களைப் பெற முடிகிறது.

1. பயன்படுத்திய சமையல் எண்ணையை பயன்படுத்தி எண்ணெய் கலப்படம் செய்வது தவிர்க்கப்படுகிறது.

2. பயன்படாத கழிவு எண்ணெய் நீர்நிலைகளில் ஊற்றுவதால் ஏற்படும் தண்ணீர் மாசடைவது தவிர்க்கப்படுகிறது.

3. நிலத்தடி எண்ணை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது பெருமளவில் தவிர்க்கப்பட்டு அன்னிய செலாவணி மிச்சமாகிறது.

4. வழக்கமாக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் புகையினால் ஏற்படும் காற்று மாசு பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.பரம்பரையான வணிக குடும்பத்தில் பிறந்த திரு. சிவா விக் 2015-ல் "பயோ எனர்ஜி" என்ற நிறுவனத்தை துவங்கி வளர்ந்து வருகிறார். பயன்படுத்தப்பட்ட கழிவு சமையல் எண்ணெய் கே.எஃப்சி (KFC), பர்கர்கிங் (Burger King), ரேடிசன் (Raddison), டேகோபெல் (Taco Bell), ஹால் திராம்ஸ் (Haldirams) மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இந்தக் கழிவு எண்ணெய் சராசரியாக கிலோ ரூ 25 /- ரூபாய்க்கு பெறமுடிகிறது. இதற்காக பல எண்ணெய் டேங்கர்கள் 24 மணி நேரமும் இயங்குகிறது.

தயாரிப்பு முறை:

1. பிரத்தியேகமான இயந்திரங்கள் கொண்டு "டிரான்ஸ் எஸ்டரிபிகேஷன்" (Trans Esterification) செய்து பயோ எரிபொருள் தயாரிப்பு செய்யப்படுகிறது. இந்த முறையில் கழிவு சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. 100 கிலோ எண்ணெயிலிருந்து சற்றேக்குறைய 90 கிலோ பயோ எரிபொருளும் 10 கிலோ கிளிசரினும் கிடைக்கிறது.

தயாரிப்பதற்கான இயந்திரம் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிறு மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்படுகிறது. தற்சமயம் உற்பத்தி செய்யப்படும் பயோ எரிபொருள் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், மற்றும் தனிப்பட்ட கிராமிய பெட்ரோல் பங்குகள் வாங்கிக் கொள்கின்றன.

உப பொருளாளன "கிளிசரின்" (Glyceria) மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், அழகு சாதனம் தயாரிக்கும் நிறுவனங்கள் (Cosmetics Companies) மற்றும் அனுமதி பெற்ற வெடி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன.

சிறப்புகள்:

(1) நிலம்,நீர்,காற்று மாசுபடுவதை வெகுவாக குறைகிறது.

(2) பயோ எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்கள் புகையில் கந்தகம், கார்பன் மோனாக்சைடு, மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளிப்பாடு 78% வரையில் குறைகிறது.

(3) நாட்டின் அன்னிய செலவாணி மிச்சப்படுத்தப் படுகிறது

(4) நிலத்தடி எரிபொருள்களின் விலையைவிட பயோ எரிபொருள் மிகவும் விலை குறைவு.

(5) சமையல் எண்ணெய் கலப்படம் முழுவதுமாக தடுக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

(6) இந்திய பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது

(7) வேலைவாய்ப்பினை விரிவடையச் செய்கிறது.

(8) தயாரிப்பு முறை சிக்கலற்ற எளிமையானதாக உள்ளது.

Food safety & Standards Authority of India (FSSAI) "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா.  பயோ எரிபொருள் செயலாக்கத்திற்காக பயோ D-எனர்ஜி நிறுவனத்திற்கு சிறந்த கழிவு எண்ணை பயன்பாட்டு.
நிறுவனம்" என்று தரச்சான்றிதழ் அளித்து கவுரவப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் நாளொன்றுக்கு 1000 லிட்டர் பயோ எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் பெருமளவில் வளர்ச்சி பெற்று சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகத்தை நல்லதொரு வாழ்விடமாக அமைய பெரும் பங்கு வகிக்கும் என்பது திண்ணம்!

" பூமி மனிதனுடையது அல்ல. மனிதன் பூமியினுடையவன்
ஒரு குடும்பத்தை ஒன்றாகும் ரத்தத்தைபோல எல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்படுகிறது. பூமிக்கு நடப்பது எல்லாம் பூமியின் பிள்ளைகளுக்கும் நடக்கும். உயிரின் வலையை நெய்தது மனிதன் அல்ல. அவன் அதில் ஒரு இழை மட்டும்தான். அந்த வேலைக்கு அவன் செய்வதெல்லாம் அவன் தனக்குத் தானே செய்து கொள்வதுதான்."

இயற்கை வளம் காப்போம்!

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories