August 20, 2020

"சிட்டிரீன்" (CITYRENE) இயற்கை சார்ந்த ஒரு கட்டுமான நிறுவணம்

சென்னையை தலைமை இடமாகக் கொண்டது "சிட்டிரீன்" கட்டுமான நிறுவனம். 2016 ல் திலிபன் போஸ் மற்றும் நிவேதிதா இருவரால் துவங்கப்பட்டது. திலீபன் ஒரு கட்டிட பொறியாளர் (Civil Engineer) நிவேதிதா அவர்கள் ஒரு கட்டிட  வடிவமைப்பு பொறியாளர். (Design Engineer).

2015 - ல் சென்னையில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட  சொல்லொணாத   துயரங்களை நேரில் கண்டு உணவு, தண்ணீர், துணிகள் மற்றும் போர்வைகள் கொடுத்து உதவினர் திலீபன் மற்றும் நிவேதிதா இருவரும். வெள்ள காலத்தில் பல நாட்கள் மின்தடையும் மற்ற நாட்களில் தண்ணீர் பற்றாக்குறையும் கண்டு இவர்கள் சட்டபூர்வமாக செல்லத்தக்க தன்னிரைவு  (Self sustainable) கொண்ட வீடுகளை கட்ட முடிவு செய்ததன் விளைவுதான் "சிட்டிரீன்" இயற்கை சார்ந்த, சட்டபூர்வமான, கட்டிட கட்டுமான நிறுவனம்.

 

சிறப்புகள்:

- குடியிருப்பவர்கள் நீண்ட காலத்திற்கு பயன்பெறும் வகையில் கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வடிவமைக்கப்படுகிறது.

- வழக்கமான செங்கற்களுக்கு பதிலாக அதிகமான ஸ்திரத்தன்மை கொண்ட சுட்ட கான்கிரீட் கற்கள் (Autocleved Aerated Concrete Blocks) AAC பயன்படுத்தப்படுகின்றன.

- கண்ணாடி  இழை  கொண்டு வலுவூட்டப்பட்ட ஜிப்சம் GFRG பேனல்கள் (Glass Fibre Reinforced Gypsum) கொண்டு கட்டப்படுகின்றது. இந்த பயன்பாட்டால் சிமெண்டு, மணல், இரும்பு மற்றும் தண்ணீர் மிகக் குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது.

- மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

- கழிவுநீர் தொட்டி அமைக்க பயோ டைஜஸ்டர் (Bio Digester) சுத்தப்படுத்தப்பட்டு மறுசுழற்சி அமைப்பு செய்து தரப்படுகிறது.

- சூரிய ஒளி தட்டுகள் ( Solar Panels) அமைத்து வீட்டு தேவைக்கேற்ப தற்சார்பு மின்சாரம் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

- "அடிப்படைச் சிக்கன வீடு"  (Basic Economical House) என்ற ஒரு கட்டுமான திட்டமும்.

"தன்னிறைவு பெற்ற வீடு" (Self Sustainable Home) என்ற ஒரு கட்டுமான திட்டமும் தற்போது செயல்படுத்தி வருகிறது.

- இது தவிர குடி தண்ணீர் தேவைக்கு காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் இயந்திரம்" (Airowater device) அமைத்து தரப்படுகிறது. இதனை Geok Energy நிறுவனம் நிர்மாணித்து கொடுக்கிறது.

- 2017 - ஆண்டு இந்தியாவின் சிறந்த துவக்க கட்டிட நிர்வாகத்திற்கான "Founder X award" சிட்டிரீன் கட்டுமான நிறுவனத்திற்கு அமெரிக்காவின் கலிபோர்னியா "Founder institute" வழங்கி கௌரவித்துள்ளது.

- மற்றும் இந்தியாவின் " Department of Industrial policy and promotion" அமைப்பு சிட்டிரீன் நிறுவனத்திற்கு அங்கீகாரத்திற்கான நற்சான்று வழங்கி சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திலீபன் மற்றும் நிவேதிதா பொறியாளர்களின் 100 வீடுகள் கொண்ட ஒரு நகரினை உருவாக்குவதை கொள்கையாகக் கொண்ட தன்னம்பிக்கையும் அதற்கான முயற்சியும் நிச்சயம் வெற்றி தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

"வெறுமனே மூச்சுவிடுவது வாழ்க்கை இல்லை முயற்சி செய்து பார் வானமே எல்லை!!

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories