January 24, 2021

உலகின் 10 முன்னிலை சூரியத் தகடு உற்பத்தியாளர்கள் (TOP 10 Solar Panel Manufacturers in the world)

சூரிய தொழில்நுட்பம் (Solar Technology) படிப்படியாக முதிர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் மேலும் கூடுதல் நம்பிக்கைக்கு உரியதாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் இத்துறையில் ஏதாவது பங்கைப் பெற வேண்டும் என்ற முனைப்பு காட்டுகிறது. அந்த வகையில் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறையில் (Renewable Energy - R.E Sector) அடுத்த 10 ஆண்டுகளில் 5லிருந்து 6 மடங்கு வரையில் இந்தியாவில் வளர்ந்து முன்னிலை நாடுகளில் ஒன்றாக திகழவிருக்கிறது. இந்தியா தற்போது சுமார் 16 GW மின்சாரம் சூரிய தொகுதியின் (Solar Module) மூலமாக பெற்று வருகிறது. 2022-ன் லட்சிய இலக்காக சூரிய உற்பத்தியை 100 G.W- ஆக கொண்டு செயலாற்றி வருகிறது. இதன் காரணமாக பல இந்திய மற்றும் பன்னாட்டு முதலீட்டர்கள் மூலமாக இத்துறையில் பெருமளவு பணம் கொட்டுகிறது. மலேசியாவின் ராட்சத எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் (PETRONAS) இந்திய நிறுவனமான டாடா வில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து நிறுவனமான அயானா (Ayana) 300 MW சூரிய சக்தி உற்பத்தி நிலையத்தை "அசூர் பவர்ஸ்" (Azure Powers) இடமிருந்து வாங்குகிறது. இந்தியாவில் சூரிய தொழில்கள் இந்தியாவில் செய்யுங்கள் (Make in India) என்ற இந்திய அரசின் உதவியின் மூலமாக தூண்டுதல் பெற்று புதிய உத்வேகத்துடன் முன்னேறுகிறது.

இந்தியா முழுவதும் சூரிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு உள்ளது. பல்வேறு ஊக்கத்திட்டங்கள் (Incentives Schemes), சூரிய பூங்காக்கள், ஆக்கிரமிப்பு ஏலப்பாதை (Aggressive Bidding Trajectory), மொட்டை மாடி சூரிய மின் உற்பத்தித் திட்டம் (Roof Top Scheme), சூரிய பாதுகாப்பு திட்டம் (Solar Defence Scheme) மற்றும் பல திட்டங்கள் இதில் அடங்கும்.

கடந்த காலம் (2016-2020) Past:

உலகம் முழுவதும் சூரிய தொழில்நுட்பம் இந்த காலகட்டத்தில் வீழும் விலையும், மேம்படுத்திய செயல்திறனும் குறிப்பிடும் படி இருந்தது. கடந்த தசாப்தத்தில் (Decade) சூரிய உபகரணங்கள் 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரையில் விலை குறைந்தது. சூரிய மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. 2015-2016 ஆண்டில் மொத்த சூரிய வாகன தொகுப்பு INR 6 கோடி/MW நிலையாக இருந்தது. ஒரு ஆண்டுக்கு பிறகு INR 4.5 - 5.5/KWH அளவுக்குக் குறைந்தது. இந்தியாவில் நிதிச் செலவுகளும் (Financing Cost) குறைக்கப்பட்டன. உலகமெங்கும் சூரிய தொழில்நுட்பம் செயல்திறன் பல அளவு மேம்பாடு செய்யப்பட்டது. பெரிய சூரிய நிறுவனம் டிரினா (Trina) சூரிய தகடுகளை செயல்திறனை 21.1% சதவீதமும் அமெரிக்காவின் பெரிய நிறுவனம் சன் பவர் (Sun Power) 24% சதவீதமும் உயர்த்தியது.

கடந்த தசாப்தத்தில் (Decade) உலகின் அனைத்து சூரிய நிறுவனங்களும் போட்டியிடும் வகையில் ஏராளமான தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றில் சிலிகான் தொழில்நுட்பம் (Silicon Technology) முன்னிலை வகிதத்து.

மொத்த நிறுவல்கள் (Total Installation) இந்தியாவில் தற்போது 35 GW சூரிய நிறுவல்களாக உள்ளன. இந்தியாவின் லட்சிய இலக்கு 2022 ல் 100 G.W நிறுவனங்களாகும்.

இந்தியாவின் பெரிய அளவிலான சூரியத்தகடுகள் (Solar Panel Manufacturers) குழு உற்பத்தியாளர்கள்.

1. "விக்ரம் சோலார்" (Vikram Solar):



இந்தியாவில் PV சோலார் தொகுதிகள் (PV Solar Modules) உற்பத்தி செய்வதில் விக்ரம் சோலார் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கொல்கத்தாவைத் தலைமை இடமாக கொண்ட "விக்ரம் சோலார்" நிறுவனம் 1 GW உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஒரு முகத் தொகுதி(Monofacial) மற்றும் இருமுக தொகுதிகளும். (Bifacial Module) உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இவ்விரண்டு வகை சூரியத் தொகுதிகளும் தற்போது சொமேரா (Somera), எல்டோரோ  (Eltoro) மற்றும் சொலிவா (Soliva) என்ற பெயர்களில் உள்ளன.
 "விக்ரம் சோலார்" நிறுவனம் முழுமையான ஒருங்கிணைந்த சூரிய EPC தீர்வு வழங்குனராக (Fully Forward Integrated Solar EPC Solution Provider) உள்ளனர். மேலும் உலக அளவில் அறியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. "வாரீ சோலார்" (Waaree Solar):



சூரத் நகரில் உள்ள இந்த நிறுவனம் 2GW தொகுப்பு (Module) தயாரிக்கும் வசதி கொண்டது. சூரியசக்தி உபகரணங்கள் தயாரிப்பு சங்கிலித் தொடரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. "மோனோ கிரிஸ்டலைன்" மற்றும் "மல்டி கிரிஸ்டலைன்" சூரியத் தகடுகள் தயாரிப்பில் தனக்கென ஒரு இடத்தைக் கொண்டு சுதந்திர சக்தி உற்பத்தியாளர் (Independent Power Producer) "வாரீ சோலார்".

3. "அதானி சோலார்" (Adani Solar):-



இந்திய முன்னணி தொழில் துறை கூட்டு குழுமம் (Leading Industrial Conglomerate) அதானி என்டர்பிரைஸஸ் லிமிட்டெட்" துணை நிறுவனம் "அதானி சோலார்" இந்தியாவில் ஒரு மிகப்பெரிய 1.2 G.W பசுமை சூரிய தயாரிப்பு தொழிற்சாலையை ஒரே இடத்தில் நிர்மாணிக்கும் செயல்பாட்டை நடத்தி வருகிறது. மேலும் உலகின் முதல் நிலை 15 மிகப்பெரிய சூரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றாக "அதானி சோலார்" உள்ளது.

4. "கோல்டி சோலார்" (Goldi Solar):-



இந்திய முன்னணி சோலார் நிறுவனங்களில் ஒன்றான “கோல்டி சோலார்” தற்சமயம் 500 MW Solar மின்சாரம் உற்பத்தி செய்கிறது விரைவில் அதன் திறனை அதிகரித்து 1.5 G.W உற்பத்தி செய்து சர்வதேச இருப்பினை (International Presence) உறுதி செய்ய உள்ளது.

5. "ரின்யூ சிஸ் சோலார்" (Renew Sys Solar)



"ரின்யூசிஸ் சோலார்" ஒரு சோலார் தொகுப்பு மற்றும் என்கேப்கலன்ட்ஸ் (Encapsulants) முக்கிய கூறுகள் அனைத்தும் ஒருங்கிணைத்து உற்பத்தி செய்யும் நிறுவனம். இந்நிறுவனம் சமீபத்தில் 505W உற்பத்தி தரும் "டிசர்வ்" (DESERV) என்ற "கேலக்டிக் அல்ட்ரா" (Galactic Ultra) என்ற "போனோ பேசியல் தொகுப்பினை" (Monofacial Module) உற்பத்தி செய்து சந்தைப்படுத்தியுள்ளதன் மூலம் இந்தவகையில் முதல் நிறுவனம் என்ற இடத்தை வகிக்கிறது.


இந்தியாவின் மொட்டைமாடி சூரிய தகடுகள் உற்பத்தியாளர்கள்:

(Rooftop Solar Panel Manufacturers in India)

1. "லூமினஸ் பவர்" (Luminous Power)



இந்தியாவின் முன்னணி சோலார் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. முக்கியமாக குடியிருப்புகளின் "பேக் அப்" (Back Up) 100W முதல் 300 W வரையில் சந்தைபடுத்துகிறது. இதற்கான சோலார் தகடுகள் வானிலை மாற்றங்களை தாங்கக் கூடியது என்பது இதன் சிறப்பு.

2. "மைக்ரோடெக்" (Microtek Solar):



இந்தியா முன்னணி சோலார் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளன இந்தநிறுவனமும் வீடுகளுக்கான சக்தி காப்பு தேவைகளை (Power Back Up Supplier) கொடுப்பவர்.

3. "லூம் சோலார்" (Loom Solar):



"லூம் சோலார்" ஒரு முழுமையான ஒருங்கிணைந்த சோலார் தொகுப்புகளை தயாரிக்கும் நிறுவனம் மோனோ கிரிஸ்டலைன் மற்றும் பாலி கிரிஸ்டலைன் சோலார் தோப்புகளை 10W முதல் 315W திறன் வரை தயாரிக்கிறது. கூடுதலாக 25 ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்ததுடன் (Limited Warranty) வழங்குகிறது. மேலும் லூம் சோலார் தயாரிப்புகள் நேர்மறை சக்தி தாங்கலும் (Positive Power Tolerance) தேவைக்கேற்ப குறைந்த அளவு ஒளியும் தரவல்லது.

4. "லிவ்கார்ட்" (Live Guard):



"லிவ்கார்ட்" மற்றுமொரு முன்னணி வாகன பேட்டரிகள், (Automative Batteries) மின் மாற்றிகள் (Inverters) மற்றும் வீடுகளுக்கான சோலார் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனம் 12V முதல் 24V வரையிலான சூரியத் தகடுகளை தயார் செய்கிறது.

அமெரிக்காவின் விரிவான தயாரிப்பாளர்கள்:

(Large Scale Manufacturers in the USA):-

1. "சன் பவர்" (SUN POWER):-



"சன் பவர்" அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய குடியிருப்பு நிறுவி. (Largest Residential Installer). உயர்திறன் பேனல்கள் இந்த நிறுவனத்தின் சிறப்பாகக் கருதப்படுகிறது. "சன்பவர்" நிறுவனத்தின் வணிக மற்றும் குடியிருப்பு தீர்வுகள் (Commercial and residential solutions) பெரிய அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

2. "டெஸ்லா" (Tesla):



“டெஸ்லா” அமெரிக்காவின் ஒரு முன்னிலை சுத்தமான ஆற்றல் நிறுவனம் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புப் பொருள் வரிசையில் மின்சார கார்கள், பேட்டரி ஆற்றல் சேமிப்பக தயாரிப்புகள் மற்றும் அது தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உள்ளடக்கம். "டெஸ்லாவின்" தயாரிப்புகளுக்கு எல்லையற்ற உத்தரவாதம் ஒரு வெல்லமுடியாத பலமாக கருதப்படுகிறது.

ஜெர்மெனியின் மொட்டை மாடி சூரிய தகடு தயாரிப்பாளர்கள்:

1. பானசோனிக் (Panasonic):-



பானாசோனிக் நிறுவனம் சூரிய ஒளி மின்னமுத்தகுழு தொழில்நுட்பத்தின் ஒரு முன்னோடி. உற்பத்தி உபகரணங்களின் நேர்த்தியான வடிவமைப்பு, சத்தி மாற்றம், அனைத்து வானிலை எதிர்ப்பு மற்றும் பெரிய ஆற்றல் சேமிப்பு ஆகியவை பானாசோனிக் நிறுவனத்தின் பலம்.

சீனாவின் பெரிய அளவு தயாரிப்பாளர்கள்:-

1. "ட்ரினா சோலார்" (Trina Solar):-



"ட்ரினா சேலார்" நிறுவனம் உலகில் ஒரு உயரவாக்கில் (Vertically) ஒருங்கிணைந்த சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் இந்த நிறுவனம் உள்நாட்டு விநியோகத்திற்கும் கையகப்படுத்திய நிறுவனங்களில் நுகர்வுக் காகவும் உலகமெங்கும் தேவைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் உற்பத்தி செய்கிறது அமெரிக்கா, ஐரோப்பியா இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது மேலும் கீழ்நிலை வணிகத்திலும் ஒரு இருப்பை (Presence Down Stream Project Business) காட்டுகிறது. "ட்ரினா சோலார்" நிறுவனம் உயர் நிலை (High Quality) மற்றும் செயல்திறன் (Efficiency) இரண்டிற்கும் பெயர் பெற்றது.

2. "ஜிங்கோ சோலார்" (Jinko Solar):-



"ஜிங்கோ சோலார்" என்பது மற்றுமொருபெரிய சீன சூரிய நிறுவனமாகும். இது முழு சூரிய விநியோக சங்கிலியில் உலகளாவிய பங்கு வகிக்கிறது. நிறுவன செயல் திறன் மோனோ வேஃபர்ஸ் (Mono Wafers) - 11.5 GW சோலார் செல்ஸ் (Solar Cells) - 10.6 G.W சோலார் மோடியூல்ஸ் (Solar Modules) - 6 G.W கொண்டது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஐரோப்பா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

3. "ஜே.ஏ சோலார்" ( J.A. Solar) :-


இந்த நிறுவனம் சீனாவில் உள்ள 2005 - ல் ஸ்தாபிக்கப்பட்ட உயர வாக்கில் ஒருங்கிணைந்த ஒரு சோலார் பேனல் உற்பத்தியாளர்கள். உலகமெங்கும் 8 இடங்களில் உற்பத்தி நிலையங்களை நிர்மாணித்து உள்ளது. நிறுவனத்தின் உற்பத்தி அளவு 2020-ல் 104 G.W என்று எதிர்பார்க்கப்படுகிறது உலகச் சந்தையில் சுமார் 135 முக்கிய நாடுகளில் வணிகம் செய்கிறது உயர்நிலை மற்றும் செயல்திறன் இரண்டிற்கும் புகழ் பெற்றது.

4. "லோங்கி சோலார்" (Longi Solar):-



உலகிலேயே மோனோ சூரிய தகடுகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனம். சீனாவின் இந்த நிறுவனம் உலக அளவில் மோனோ சூரிய தகடுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. எதிர்வரும் சில வருடங்களில் 50 G.W உற்பத்தித் திறனை அடைய விருக்கிறது.

:கெனடியன் சோலார்:-


1. "கெனடியன் சோலார்" (Canadian Solar) நிறுவனம் உலகளவில் ஒரு சிறந்த சோலார் பேனல் உற்பத்தியாளர்கள். நிறுவனத்தின் தலைமை இடம்
கனடா-வாக இருந்தாலும் பெருமளவு உற்பத்தி நிலையங்கள் சீனாவிலேயே உள்ளது. மேலும் இந்த நிறுவனம் புவியியல் ரீதியாக  (Geographically) பன்முகப்படுத்தப்பட்ட குழாய் இணைப்பு பயன்பாட்டு திட்டங்களை செயல் படுத்துகின்றன.

நார்வே தயாரிப்பாளர்கள்:-

1. "REC சோலார் ( REC Solar):-



"நார்வே" - வை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் 1996- ஆண்டு நிறுவப்பட்டது. துவங்கப் பட்டதில்இருந்து இன்று வரையில் 38 மில்லியன் சூரிய தகடுகளை (Solar Panels) தயாரித்து விற்பனை செய்துள்ளது. வழக்கமான சோலார் பேனல்களை விட 20% அதிக உற்பத்தித் திறனை அளிக்கிறது.

கொரியா தயாரிப்பாளர்கள்:-

1. "எல். ஜீ சோலார்" (L.G Solar):-



கொரியாவின் "எல்.ஜி சோலார் "உலக" சோலார் பேனல்" சந்தையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இதனுடன் பல வீட்டு உபயோக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் பெரிய அளவில் தயாரித்து விற்பனை யில் ஒரு சாதனை படைத்துள்ளது.

முடிவாக:-

இன்றைய காலகட்டத்தில் சூரிய ஆற்றல் உலகின் மிக முக்கிய நீரோட்டமாக மாறி உள்ளதால் பல நிறுவனங்கள் சூரிய வணிகத்தில் இறங்கியுள்ளன. இந்த வரிசையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பயன்பாட்டாளர்கள் (Consumers) தெரிவு செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. எந்த நிறுவனம் அவர்களின் உறுதிப்பாட்டை மதிக்கின்ற தோ. அவற்றையே தெரிவு செய்ய வேண்டும் அதற்காக நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை அளித்திருக்கிறோம் பயன்பாட்டாளர்கள் சரியான நிறுவனத்தை தெரிவு செய்வது அவசியம்.

Stories