இத்தாலியக் கட்டிடக்கலைஞர் திரு.ஸ்டெபானோ போரி (Mr.Stefano Boeri) இத்தாலியின் மிலன் நகரில் 26 அடுக்கு 111 மீட்டர் உயரத்தில் மற்றும் 18 அடுத்து 76 மீட்டர் உயரம் கொண்ட "போஸ்கோ வெர்டிகேல்" (Bosco Vertical) என்ற இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை 2014 ஆண்டில் கட்டி முடித்தார். இந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் 900 மரங்கள், 5000 புதர்கள் (Shrubs) 11,000 வற்றாத் தாவரங்கள் (Perrenial Plants) உள்ளன இத்தகைய "உயிரியல் அடுக்குமாடி கட்டிடங்கள் "(Blophilic MultiStorised Buildings), நான்ஜிங் (சீனா), எகிப்து, உக்ரெக்ட் (நெதர்லாந்து), சிங்கப்பூர், கோலாலம்பூர் (மலேசியா), செபு (பிலிப்பைன்ஸ்) மற்றும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்தியாவில் முதன்முதலாக பெங்களூருவில் உள்ள சார்ஜாபூரில் உள்ள "மனா ஃபாரஸ்டா" (Mama Foresta) அடுக்குமாடி குடியிருப்புகளில் 900 மரங்கள் மற்றும் 90 தாவர வகைகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 14 மாடிகளும் 56 வீடுகளும் கொண்டது "மனப்பராஜெக்டஸ் பிரைவேட் லிமிட்டெடின்" (Mana Projects Private Limited) தலைமை இயக்குனர் திரு.கிஷோர் ரெட்டி (Mr. kishore Reddy) கூறுகையில் கட்டடக் கலைஞர்கள் பெங்களூரு நகரத்தில் தட்பவெப்ப நிலைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வடிவமைப்பில் தாவரவியலாளர்கள் (Botanists) மற்றும் இயற்கை கலைஞர்களுடன் (Landscape Artists) கலந்தாலோசித்து கட்டப்பட்டுள்ளது என்கிறார்.
இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பு காடுகள் வருவதற்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த இயற்கை கட்டிடக் கலைஞரும் சுற்றுச்சூழல் வடிவமைப்பாளரான திரு. மோகன்ராவ் மற்றும் அவரது குழுவினர் புது டெல்லிக்கு அருகில் உள்ள மானேசரில் உள்ள "அஜிலென்ட் டெக்னாலஜிஸ்" வளாகத்தில் இத்தகைய இயற்கை காடுகளை அமைத்துள்ளனர்.
இதில் பலவகை மரங்கள், புதர்கள் (Shrubs), மூலிகைகள், சிறிய பூச்செடிகள், எலுமிச்சை, பைகஸ், (Ficus), பிக்னோனிய (Bignonia), மெக்னோனியா (Magnonia), ஃபிராங்கிபனி
(Frangipani) ஆகியவை அடங்கும்.
அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களின் கவலைகளில் பிரதானமாக இருப்பது எவ்வாறு பராமரிப்பு என்பதாகும். இந்த கட்டிடங்களில் பெரும்பான்மையானவை தானியங்கி மத்திய சொட்டுநீர் பாசன வசதியை கொண்டிருக்கிறது. எனவே குடியிருப்பாளர்கள் அலுவலகங்கள், அல்லது மருத்துவமனை ஊழியர்கள் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை மேலும் வளரும் செடிகளை கவாத்து (Pruning) செய்ய கட்டிட நிர்வாகமே மேற்கொள்வதால் பயனாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
காற்று மாசு அளவு அதிகரித்து வருவதாலும் பசுமை சூழல் குறைந்து வருவதாலும் இத்தகைய உயிரியல் கட்டிடங்கள் பெருமளவு வரவேற்பு பெறுகிறது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.