September 04, 2021

முட்டை வடிவ சிறிய தன்னிறைவு வீடு "Egg Shaped Tiny Home"

முட்டை வடிவ சிறிய வீடு காற்று (Wind) மற்றும் சூரிய ஆற்றலால் (Solar Power) இயக்கப்படுகிறது மற்றும் தேவைக்கான சொந்த நீரை சேகரித்து சுத்திகரித்து விநியோகத்தை உறுதி செய்கிறது.

"எக்கோ கேப்ஸ்யூல்" (Eco Capsule) என்று பெயரிடப்பட்ட வீடுகள் ஸ்லோவோக்கியாவில் (Slovakia) "நைஸ் ஆர்க்கி டெக்ட்ஸ்" (Nice Architects) நிறுவனத்தால் கட்டப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பயன்பாட்டில் இருக்கும் போது கார்பன் தடம் (Carbon Foot Print) விடாது.



2008 - ம் ஆண்டில் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு (Architecture and design Competition) போடிக்காக "நைஸ் கட்டிடக் கலைஞர்கள்" (Nice Architects) வடிவமைத்தனர். பரிசுகளை வெல்லவில்லை என்றாலும் போட்டியில் மிகவும் சுவாரசியமான வடிவமைப்புகளில் ஒன்றாக கருதப்பட்டது. மேலும் தயாரிப்பாளர்களுக்கு ஊக்குவிக்க போதுமான நேர்மறையான பாராட்டுகளும் கருத்துக்களும் உலகளவில் அளித்தனர்.



பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் "எக்கேகேப்சூல் திட்டம் (Eco Capsule Projects) அதிகாரப்பூர்வமாக 2014 - ல் முடிக்கப்பட்டது.

வீட்டின் அமைப்பு மற்றும் சிறப்புகள்:

- வீடு 88.3 சதுர அடி அளவில் அமைந்துள்ளது

- இந்த வீடு சுமார் 14.6 அடி நீளமும் 7.4 அடி அகலமும் 8.4 அடி உயரமும் கொண்டது.

- சிறிய வீடு நடுத்தர கால 2 பேர் வரை வாழ வடிவமைக்கப்பட்டுள்ளது.

- வீட்டு வடிவத்தின் காரணமாக அதை ஒரு டிரைலரில் இழுத்துச்செல்ல முடியும்.

- வீட்டின் கூரை மீது இரண்டு கொக்கிகள் உள்ளன இது கிரேன் அல்லது ஹெலிகாப்டர் மூலமாகவும் எடுத்துச் செல்ல இயலும்.

- சமயலறை மற்றும் குளியலறை நுழைவாயிலின் இடதுபுறம் டைனிங் டேபிள் உள்ளது படுக்கை அறை வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளது.

- சமயலறையில் குடிநீருடன் ஒரு மடு (Sink) விடுப்பு மினி குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பு உள்ளது.

- குளியலறையில் ஒரு மடு (Hub) மற்றும் உரம் தயாரிக்கும்
(Composting) கழிப்பறை உள்ளது.

- வீடு 9.7 கிலோவாட் பேட்டரி 7.5 வாட் மின்சக்தி வெளியீட்டை கொண்டு 13.5 அடி காற்றாலை
மற்றும் 880 வாட் சோலார் பேனல் களிலிருந்து அதன் சக்தியை பெறுகிறது.

- வீடு நுறை  காப்பு (Foam Installation),  கண்ணாடி இழை (Fibre Glass) மற்றும் எஃகு (Steel) ஆகியவற்றால் ஆனது.

- வீட்டின் தனித்துவமான முட்டை வடிவ வடிவமைப்பு வெப்பத்தை சிறப்பாக தக்கவைத்து மழைநீரை சேகரிக்க உதவுகிறது.

- நீர் அமைப்புக்கு அதன் சொந்த வடிகட்டுதல் அமைப்பு உள்ளது. இது மழை நீர் அல்லது ஏரிகள் மற்றும் நீரோடைகள் இருந்து தண்ணீர் நிரப்ப அனுமதிக்கிறது.

- பேட்டரிகள் குறைந்தபட்சம் நான்கு நாட்களுக்கு வீட்டுக்கு போதுமான ஆற்றல் உள்ளது. பேட்டரியின் ஆயுள் சூரிய மற்றும் காற்றாலை மூலம் நீட்டிக்கப்படுகிறது.

- வீட்டின் உள் எல்.யி.டி (LED) விளக்குகளும் மற்றும் இரண்டு பவர் சாக்கெட்டுகள் போன்ற உட்புற வசதிகளை கொண்டுள்ளது.



தன்னிறைவான சிறிய முட்டை வீடுகள் தற்போது 90,000 டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எளிதாக எங்கும் எடுத்து செல்ல முடியும் என்பதால் உலகளாவிய, முக்கியமாக அதிக வருமானம் கொண்ட வாடிக்கையாளர்கள், இடப்பற்றாக்குறை யான நகரங்கள் மற்றும் இயற்கையான சூழ்நிலையில் வாழ விரும்பும் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் விரும்புகின்றனர். 

Contact
Ecocapsule headquarters
Moyzesova 4, 811 05 Bratislava, Slovakia, European Union

General information: info@ecocapsule.sk
Press, cooperation: press@ecocapsule.sk
Sales: sales@ecocapsule.sk
Customers service/technical support: support@ecocapsule.sk

Ecocapsule distributors
colorado@ecocapsuleworld.com
japan@ecocapsuleworld.com
australia@ecocapsuleworld.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories