November 01, 2021

இனி மாடுகளை கண்காணிக்க மனிதர்கள் தேவையில்லை ("Analytical Sensors for farmers")

விவசாயம் உலகளவில் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு உற்பத்தியை அளிக்கும் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். உலகத்தில் அனைத்து பொருட்கள் உற்பத்தியில் 4 சதவீதம் (Gross Domestic product GDP). அளவிற்கு உள்ளது. சில வளரும் நாடுகளில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 % க்கும் அதிகமாக உள்ளது.

விவசாய மேம்பாடு என்பது வறுமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் செழிப்பை அதிகரிப்பதற்கும் மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் 9.7 பில்லியன் மக்களுக்கு உணவளிப்பதற்கும் மிகவும் சக்தி வாய்ந்த செயல்பாடுகளில் ஒன்றாகும் மேலும் விவசாயத் துறையானது ஏழை விவசாய மக்களுடைய வருமானத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.



உலகம் முழுவதும் உள்ள விவசாயிகள் நலனுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட தளமாக"ஹனுமயம்மா இன்னோவேஷன் அண்ட டெக்காலஜிஸ்" (Hanumayaama Innovation and Technologies) என்ற அமெரிக்க நிறுவனம் 2010 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனம் மனிதகுலத்திற்கும் அதற்கு அப்பாலும் உதவும் தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கான விவசாய பகுப்பாய்வு (Agriculture Analytics), பால்பண்ணை பகுப்பாய்வு (Dairy Analytics)  பரிந்துரை அமைப்புகள் (Recommend Action Systems) இயந்திர கற்றல் வழிமுறைகள் (Machine Learning Algorithm), கால்நடைகள் பராமரிப்பிற்கான அணியக்கூடிய கால்நடை சென்சார் (வகுப்பு 10) (Wearable Veterinary Sensor (Class 10) for animal Husbandry) மற்றும் தரவு பகுப்பாய்வு ( Dn Analytics) ஆகியவற்றில் முன்னணி தயாரிப்புகளை வழங்குகிறது.



பசு கழுத்துப்பட்டை (Cow Necklace)

பசு கழுத்துப்பட்டை என்பது ஹனுமயம்மாவின் 10 ம் வகுப்பு அமெரிக்க காப்புரிமை வர்த்தகமுத்திரை அலுவலகத்திலிருந்து (USPTO) அங்கிகாரம் பெற்றுள்ள ஒரு உபகரணம். இது பால்பண்ணையில் பராமரிக்கப்படும் பசுக்களின் முக்கிய அறிகுறிகளை படம் பிடிப்பதற்கு, பசுவின் பால் உற்பத்தியை கண்காணிப்பதற்கு, அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மேலும் பசுக்களின் அனைத்து விதமான தரவுகளையும் வழங்குகிறது.



உதாரணமாக! பால் காய்ச்சல் (Milk Fever) என்பது கறவை மாடுகளை அடிக்கடி தாக்கும் ஒரு நோயாகும். இது குறைந்த ரத்த சுண்ணாம்புச் சத்து அளவு (HypoCalcemia) காரணமாக ஏற்படும் வளர்சிதை (Metabolic) மாற்ற நோயாகும். இதனால் ஏற்படும் நஷ்டம் மிக அதிகம். இதனை பசு கழுத்துப்பட்டை உணர்ந்து நோய் வருவதற்கு முன்பே அறிவிப்பதால் இதனை கால்நடை வளர்ப்போர் தவிர்க்க ஏதுவாகிறது.

கீட்டோசிஸ் (Ketosis) என்பது ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும். பால் உற்பத்தி அதிகரிக்கும்போது எதிர்மறை விளைவாக இந்நோய் ஏற்படுகிறது இதன் தொடக்கத்தின் போதே "பசு கழுத்து பட்டை உணர்விகள் அடையாளம் கண்டு எச்சரிக்கை செய்வதினால் "கீட்டோசிஸ்" தவிர்க்கப்படுகிறது.



3. "அசைபோடுதல்" (Rumination) என்பது வயிற்றின் "ரூமன்" என்ற அறையிலிருந்து உணவு வாய்க்கும் வந்து நன்றாக அறைக்கப்பட்டு மீண்டும் விழுங்கும் ஒரு செயல்முறையாகும். இந்த உயிரியல் செயல்முறை கால்நடைகளுக்கு இயற்கையாகவே உள்ளது. இந்த செயல்முறையில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே "பசுவின் கழுத்துப்பட்டை" உணர்ந்து எச்சரிக்கிறது. இதன் மூலம் கால்நடைகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து பலவிதமான ஜீரண குறைபாடுகளைத் தவிர்க்க இயல்கிறது.

4. "நொண்டித்தனம்" (Lameness) என்ற நரம்பு மற்றும் தசை தொடர்பான நோய் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே உணர்ந்து "கழுத்துப்பட்டை" (Necklace) எச்சரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தீர்வுகாண உதவுகின்றன.

உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள தளமாக "ஹனுமயம்மா இந்நோவேஷன்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் செயல்படுகிறது. விவசாயிகளை நேசிக்கும் இந்த நிறுவனம் விவசாயிகளுக்கும் உலகிற்கும் பெருமளவில் சேவை செய்யும் நோக்கத்துடன் உயிர் தொழில்நுட்ப புதுமையான தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

HANUMAYAMMA INNOVATIONS AND TECHNOLOGIES PRIVATE LIMITED

HIG-2,BLOCK-2,FLAT-7, BAGHLINGAMPALLY, HYDERABAD, TS

Phone: 8179979892

Website: www.hanuinnotech.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

Stories