August 31, 2021

130 - HP முழு மின்சார டிராக்டர் ("130 - HP Fully Electric Tractor)

"பசுமை எதிர்காலம்" என்ற முழக்கத்துடன் ஒரு தூய்மையான உலகத்தை இலக்காகக் கொண்டுள்ள துருக்கிய நிறுவனமான "ZY எலக்ட்ரிக் டிரக்டர்" (ZY Electric Tractor) நிறுவனம் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை உருவாக்கியுள்ளது.

ஒண்டர் யோல் (Onder Yol) மற்றும் ஜிராட் பிரைவேட் ஈக்விட்டி (Zirat Private Equity) நிருவனங்களின் கூட்டாக 2003 முதல் மின்சார வாகன மென்பொருள் மற்றும் பேட்டரி மேலாண்மை அமைப்புகளில் தொடர்ந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு  அதில் பெற்ற அனுபவத்தின் மூலம் மின்சார வாகனங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.



டிராக்டர் அமைப்பு:-

ZY மின்சார டிராக்டர் ஒரு சாதாரண தரமான டிராக்டர் பேரல் ஒரு  கேபினுடன் உள்ளது. எனினும் அதன் கூரையின் கீழ் ( Below the hood) டீஸல் என்ஜின் இல்லை. ஆனால் 95 கிலோ வாட் திறன் கொண்ட பிரம் மாண்டமான பேட்டரி பேக் உள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி பேப்பர் பேக் தோராயமாக 5 லிருந்து 7 மணி நேரம் தொடர்ந்து இயங்க வல்லது.

செயல்பாடு:-

டிராக்டர் தொடர்ந்து மாற்றி இயக்கி (Continuosly Variable Drive) முறையில் வேலை செய்கிறது ZY டிராக்டர் அனைத்து நிலையான கருவிகளுடன் சிறப்பாக  செயல்படுகிறது. வெளிப்புற ஒரு ஹைட்ராலிக் பம்பை இயங்கும் தனி 20 HP மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. டிராக்டரின் பவர் டேக் ஆஃப் (Power Take Off) க்கு அதிகபட்சமாக 160 HP சக்தியை வழங்குகிறது. நான்கு சக்கரங்கள் தொடர்ச்சியாக மாறுபடும் ஒரு பெரிய மின்சார மோட்டாரால் இயக்கப்படுகிறது. இது சாதாரணமாக  130 HP ஆற்றலை அளிக்கிறது.

பேட்டரிகளின் சார்ஜ் நிலையை, மற்ற செயல்பாட்டுடன் பெரிய திரையின் (Large Display) மூலம் டிரைவர் சரிபார்கலாம். சார்ஜ் நிலை 15% க்கும் கிழே குறையும் போது அது கேட்கக்கூடிய ஒலி சிக்னல் மூலமாக டிரைவரை எச்சரிக்கிறது. ஆற்றல் நுகர்வு நிலையும் உடனடியாக தெரியும் டிராக்டரில் GPS வழி செலத்தலும் பொருத்தப்பட்டுள்ளது.

பாட்டரி பேக் வருடத்திற்கு சராசரியாக 750 மணிநேரம் வேலை செய்யும் பட்சத்தில் 24 வருடங்களுக்குப் பிறகு முழுமையாக மாற்ற வேண்டும். அதாவது மாற்றும் நேரத்தின் நிலைமைகளைப் பொறுத்து பேட்டரி ஆயுள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



ZY டிராக்டரின் அனுகூலங்கள்:-

(Advantages)

- 100 % மின்சாரம் கொண்டு இயக்கப்படுகிறது

- எரிபொருள் செலவுகள் இல்லை

- எங்கெல்லாம் மின்சாரம் இருக்கிறதோ அங்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்

- முற்றிலும் அமைதியாக(Silent Engine) வேலை செய்யலாம்

- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான புகை இல்லை

- சுமார் 45 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்

- வாகனத்தில் எப்போதும் சார்ஜிங்யூனிட் இருக்கும்

- இது வழக்கமான உள் எரிப்பு இயந்திர வாதங்களை விட 90% சிக்கனமானது.

- எரிபொருள் செலவில் 90 சதவீதம் சேமிப்பு

- 100% சுற்றுச் சூழல் நட்பு தொழில்நுட்பம்

- மின்சார மோட்டார்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் செலவுகள் மிகக் குறைவு.

- மின்சார டிராக்டரின் பணிச்சூழலியல் வடிவமைப்பு கேபினில் வசதியையும் பயன்பாட்டையும் எளிதாகிறது.

- உயர் பாதுகாப்பு தொழில்நுட்பம் கொண்டது அனைத்து சூழ்நிலையிலும் பயன்பாடு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.



ZY மின்சார டிராக்டரின் கொள்முதல் விலை இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை. zy டிராக்டரின் வெகுஜன (Mass Production) உற்பத்தி இந்த ஆண்டு தொடங்கி சந்தைப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

மின்சார டிராக்டர் பற்றி நமது யூடியூப் சேனலில் பதிவு செய்து உள்ளோம் கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்:

https://youtu.be/XuhAUFh_PO4

Website: https://www.zyelektrikli.com/

Resitpasa Mahallesi Katar Cad. Motor Vehicles Building Apt No: 2/10/2 Sariyer Istanbul

E-Mail: zy Elektrikli@zy Perakendeli.com

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories