May 12, 2021

அக்ரோமலின் மைக்ரோ பண்ணை” கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு மூலம் லாபம் ஈட்டித்தரும் நிறுவனம் "Aqgromalin" Micro Farm

சென்னையைச் சேர்ந்த திரு.பிரசன்னா மற்றும் திரு.பரணி (Mr.Prasana - Mr. Bharani) ஆகிய இரண்டு தொழில்நுட்ப பட்டதாரிகளால் 2019 - ஆண்டில் நிறுவப்பட்ட தொடக்க நிறுவனமானது (Start Up) சிறு விவசாயிகளுக்கு ஒரே பயிர் வளர்ப்பு  (Mono Cultivation) கலாச்சாரத்திலிருந்து ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கவும் கூடுதல் வருமானத்தை ஈடவும் உதவுகிறது.

"அக்ரோமலின்" என்ற தொடக்க அக்ரிடெக் நிறுவனம் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பில் பன்முகப் படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்களது வருமானத்தை சமன்படுத்த முடிகிறது.



"அக்ரோமலின்" நிறுவனம் சிறு விவசாயிகளுக்கு உள்ளீட்டு பொருட்கள் (Inputs) தொழில்நுட்பக் கருவிகள் (Technical Instruments) பயிற்சி மற்றும் தேவையான ஆதரவுகளை வழங்குகிறது. இதைப் பல கூடுதல் பொருட்கள் தேவையில்லாமல் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பை மேற்கொள்ள உதவுகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அறுவடை பலன் பெற செய்த முதலீடு பணம், நேரம் மற்றும் உழைப்புடன் ஒப்பிடும் போது அதிக லாபம் ஈட்ட முடிவதில்லை என்பது சமகால நிதர்ஸனம் இதனைத் தவிர்க்க "அக்ரோமலின்" சுலபமான பண்ணை அமைவு
விவசாயிகளுக்கு "மைக்ரோ பண்ணைகள்" மாதிரியின் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. இதற்கு சிரிய இடமும் முதலீடும் இருந்தால் போதுமானது மேலும் அபரிமிதமான உழைப்பும் தேவையில்லை என்பது கூடுதல் நன்மை மேலும் "அக்ரோமலின்" உற்பத்திப் பொருட்களை வாங்கி விநியோக சங்கிலி மூலம் முழுவதும் எடுத்து செல்கிறது. மற்றும் உற்பத்தியின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கான தகவல்களை கொண்ட ஒரு பயன்பாட்டை வழங்கி விவசாயிகளின் பண்ணைகள் பராமரிப்பை கண்காணிக்க உதவுகிறது.

தற்போது "அக்ரோமலின்" தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது. தொடர்ந்து மற்ற மாநிலங்களுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக திரு.பிரஸன்னா கூறுகிறார். இதுபோன்ற அக்ரிடெக் நிறுவனங்களான நிஞ்சாகார்ட் (Ninja Cart), க்ரோபார்ம் (Crofarm), கிராப்-இன் (CropIn), பார்மிசின் (Farmizen) டி ஹேட் (De Haat) மற்றும் பிக்ஹேட் (Big Haat) ஆகியவை களத்தில் உள்ளன என்பது கூடுதல் தகவல்.



இந்தத் துறையில் கணிசமான எண்ணிக்கையிலான தொடக்கங்கள் (StartUps) வருவதால் கடன் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான அணுகல் விவசாயிகளுக்கு எளிதாகிவிட்டது. அவர்கள் கிடைக்கக்கூடிய இந்த வளங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்த செயல்பாடு வாய்ப்புகள் மகத்தானவை இணைய ஊடுருவலுடன் அதிகமான விவசாயிகள் தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றவும் தயாராக இருப்பது இதன் வளர்ச்சியை, வெற்றியை உறுதி செய்கிறது.

Registered Address
3/595-16, KPN Complex, Bypass Road,

Thiruvallur Nagar, Krishnagiri,

Tamil Nadu - 635 001

 Corporate Office
1B, No 4, Sri Durga Enclave,

Natesan Avenue, Off OMR,

Karapakkam,

Chennai - 600 097

 Other Locations
Hyderabad, Bangalore

 Phone
+91 44 4631 4390 / +91 7037007138

( Mon to Sat - 10 AM to 6 PM)

 Email Address
contact@aqgromalin.com

Website: https://www.aqgromalin.com/

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories