ராஜஸ்தான் மாநிலத்தின் கனோய் (Kanoi) கிராமத்தில் தார் பாலைவனத்தின் நடுவில் ராஜ்குமாரி ரத்னாவதி பெண்கள் பள்ளி கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கட்டிடக் கலைஞர் திருமதி டயானா கெல்லாக் (Diana Kellogg) அவர்கள் வடிவமைத்து திரு. கரீம் கான் என்ற கட்டிட கட்டுமான ஒப்பந்ததாரரால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சால்மரின் (Jaisalmers) புகழ்பெற்ற சாம் டூன்ஸிலிருந்து (Sam Dunes) ஆறு நிமிட பயண தூரத்தில் உள்ள ராஜ்குமாரி ரத்னாவதி பெண்கள் பள்ளி ஒரு கட்டிடக்கலை அற்புதமாக கருதப்படுகிறது.
CITTA என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர் மைக்கேல்டவ்பே (Michael Daube) இந்த கட்டிடத்தை கருத்தியல் (Conceptualise) செய்வதற்கும் அதை செயல்படுத்தி உதவுவதற்கும் பத்து ஆண்டுகள் ஆனது.
பள்ளி ஓவல் வடிவ அமைப்பைக்கொண்டது. கட்டுமானத்திற்காக உள்ளூரிலேயே அபரிமிதமாக கிடைக்கும் மணற்கல் (Sand Stone) பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் சுவர்கள் சுண்ணாம்பு கலவையால் பூசப்பட்டுள்ளது. இது பகலில் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாப்பையும் குளிர்ந்த மாலை நேரங்களில் வெப்பத்தையும் வழங்குகிறது. சிறந்த காற்றோட்டத்திற்கு போதுமான இடத்தை அனுமதிக்க வகுப்பறைகள் மற்றும் பிற அலுவலகங்கள் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் நீள்வட்டம் (Oval Shape) நிலைத்தன்மையின் அம்சங்கள் கொண்டு வர உதவுகிறது. விதானமும் (Canopy) ஜாலிகளும் மணலை உள்ளே வராமல் தடுக்கின்றன. அவை சூரியனின் வெப்பத்தை வெளியேற்றுகின்றன. கட்டிடத்தின் உள்ளே காற் நோட்டம் வடிவம் இயற்கையாகவே குளிர்விக்கிறது.
கட்டிடத்தின் மேலே உள்ள சோலார் பேனல்கள் ஒரு விதானமாக வேலை செய்கின்றன. மேலும் நிழல் வழங்குவது மட்டுமல்லாமல் தேவையான மின்சக்தியையும் பெற்றுத் தருகிறது.
"கியான் மையம்" (Gyaan Center) என்று அழைக்கப்படும் பள்ளிப் பகுதி மழலையர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை 400 சிறுமிகளுக்கு இடமளிக்கும். இந்த வளாகத்தில் ஒரு ஜவுளி அருங்காட்சியகம் மற்றும் செயல்திறன் மண்டபம் உள்ளது. அத்துடன் கை வினை ஞர்களுக்கு அவர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கான கண்காட்சி இடமும் உள்ளது. மற்றொரு கட்டிடத்தில் கைவினைப் பொருட்கள் பாதுகாப்பையும் பெண்களுக்கு நெசவு மற்றும் ஜவுளி போன்ற பாரம்பரிய கலைகளில் பயிற்சியும் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் குறைவான கல்வியறிவு விகிதத்தையும் பள்ளி மாணவ மாணவிகளின் அதிக வீழ்ச்சி விக்தித்தையும் கருத்தில்கொண்டு ஜெய்சால்மரில் பள்ளி கட்டப்பட்டுள்ளது. பெண்கள் ஆதரவு மிகவும் தேவை. அதிகமான பெண்கள் அதிகாரம் பெறவேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பதே ஒரே தீர்வு என்ற அடிப்படையில் பள்ளிக்காக உருவாக்கப்பட்டுள்ள அடையாள சின்னம் (Logo) உடல் நலம், பெண்கள் அதிகாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை குறிக்கிறது. இது உலகில் பெண்கள் வளர்வதற்கும் அதனை அனுமதிப்பதற்கும் முக்கியமான அம்சங்கள்.
ஸ்தாபகர் திரு. மைக்கேல் தவ் பே கூறுகையில் "கட்டிடம் ஒரு பள்ளியாக மட்டுமே செயல்படாமல் பெண்மையைக் குறிக்கும் ஒரு அழகான அமைப்பாகவே உள்ளது. ஒரு கல்வி மையமாக மட்டுமல்லாமல் பள்ளி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகளாவிய நிகழ்வுகளை நடத்துவதற்கான தளமாக செயல்படும் என்று விளக்குகிறார். இவை அனைத்தும் பாலைவனத்தில் மக்களிடையே மாற்ற அலைகளை உருவாக்கும் என்று கூறுகிறார்.
கோவிட் - 19 என்ற பெருந் தொற்றால் 2020 - ஆம் ஆண்டில் பள்ளியை திறக்க முடியாமல் போனது மார்ச் - 2021 முதல் செயல்படும் என்று ஸ்தாபகர் மைக்கேல் தவ்பே உறுதிபட கூறுகிறார்.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.