October 18, 2020

மின்சார கார்கள் (மாறும் புதிய தொழில்நுட்பம்)

மின்சாரத்தால் இயங்கும் கார்கள் உலகமெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பெரும்பாலும் அத்தகைய கார்களில் லித்தியம் அயான் பாட்டரிகள் (Lithium Ion Batteries) பயன்படுத்தப் படுகின்றன. இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 8000 கார்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

பாட்டரிகளின் விலை, அவ்வப்போது பாட்டரிகள் சார்ஜ் செய்யும் நிலையங்களின் குறைந்த எண்ணிக்கை, லித்தியம் பெர்ரோபாஸ்பேட் (Lithium Ferro Sulphate) ஈய அமிலம், (Lead Acid) கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப்படும் பாதிப்புகள் என்று பலவிதமான பிரச்சனைகள் மிகப்பெரிய அளவில் மின்சார கார்கள் வரவேற்ப்பை பெற இயலவில்லை. இதற்கு மாற்றாக ஒரு எளிய தொழில்நுட்பத்தை பெங்களூருவைச் சேர்ந்த "லாக் 9 மெட்டிரியல்ஸ்" (Log 9 Materials) என்ற கிராபீன் (Graphene) கையாளும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன் தொழில்நுட்பத்தின் படி அலுமினியம் எரிபொருள் கொண்ட செல்கள் (Aluminium Fuel Cells) பயன்படுத்தப் படுகின்றன.இப்போது பயன் படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள் ஒரு மின்சாரம் சேமிப்புமுறை. எனவே பேட்டரிகள் அடிக்கடி சார்ஜ் செய்யப்பட்டு அந்த மின்சாரம் கார் இயங்க பயன்படுத்தப்படுகிறது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தின் படி முழுவதுமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரம உற்பத்திக்கு அலுமினியம் கேசட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. அலுமினிய கேசட் கரைந்து மின்சாரம் கொடுத்தபின் வேறு கேசட்டை சுலபமாக மாற்றிக் கொள்ளலாம்.

புதிய தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது:

பாட்டரியில் அலுமினிய கேசட்டுகள் கிராபீன் சவ்வுகளுக்கு இடையில் பொருந்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராபின் சவ்வுகள் கரியமில வாயுவை (Carbon Di Oxide) உள்ளே விடாமல் தடுத்தும் பிராண வாயுவை (oxygen) உள்ளே அனுமதித்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது ஏற்படும் ரசாயன மாற்றமாக அலுமினியம் கரைந்து அலுமினியம் ஹைட்ராக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகிறது. இவை மீண்டும் அலுமினியம் ஆக மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு.

ஒரு அலுமினியம் கேசட்டின் மூலம் 1000 கிலோமீட்டர் வரையில் வாகனம் இயங்கும். ஒரு அலுமினிய கேசட்டு கரைந்த பின்னர் அடுத்த அலுமினிய கேட்டினை (டேப் ரெக்கார்ட் கேசட்டைப்) சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். லித்தியம் அயான் போட்டரிகள் தொடர்ந்து 250 கிலோமீட்டர் துரம் தான் இயக்க முடியும். பின்னர் பாட்டரிகள் மணிக்கணக்காக சார்ஜ் செய்யப்பட வேண்டும்."லாக் 9 மெட்டிரியல்ஸ்" (Log 9 Materials) கம்பெனி நிறுவனங்களான திரு.அக்ஷய் சிங்கால் (Akshay Singhal) திரு. பங்கஜ் சர்மா (Pankaj Sharma) மற்றும் திரு.கார்திக் ஹஜேலா (Karthik Hajela) AFC தொழில்நுட்பத்தினை ஒன்றறை வருடம் முயற்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதே தொழில்நுட்பத்தினை
பினர்ஜி (Phinergy) என்ற இஸ்ரேல் நிறுவனம் எட்டு ஆண்டுகள் முயற்சிக்கு பின் கண்டு பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அனுகூலங்கள் (Advantages):

- தற்போதுள்ள தொழில் நுட்பத்தினை விட 40 சதவிகித குறைந்த செலவு மட்டுமே

- மிக எளிதாக கிடைக்கக்கூடிய அலுமினியம், தண்ணீர் மற்றும் கிராபின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

- பெருமளவில் தற்போது சீனாவிலிருந்துலித்தியம் இறக்குமதி செய்யப்படுவது தவிர்க்கப்படுகிறது.

விருதுகள்:

 

"லாக் 9 மெட்டிரியல்ஸ் " நிறுவனத்தின் சிறப்பான கண்டு பிடிப்பிற்காக இந்திய அரசின் விஞ்ஞான தொழில் நுட்பத் துறை (Department of science and technology) 2018 - ஆம் ஆண்டின் ஆகச்சிறப்பான கண்டு பிடிப்புக்கான விருதினை (Most Innovative Technology Company of 2018) வழங்கி கவுரவப் படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2017 - ஆம் ஆண்டில் இந்திய பாதுகாப்புத்துறை "லாக் 9 மெட்டிரியல்ஸ்" -ன் டெக்னாலஜி தொழில் நுட்ப முறையினை பெற்றுள்ளது என்பது மற்றும் ஒரு மயில்கல் என்றால் மிகையல்ல !


எரிபொருள் இல்லாத, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத மின்சார கார்கள் எதிர்காலத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை !

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories