August 04, 2019

"பசுசாலா" (Pashushala) ஆன்லைன் (Online) - கால் நடை வணிக நிறுவனம்

தகவல் தொழில்நுட்பமும் கணினி மயமாக்கலும் உலக அளவில் பெருமளவில் வளர்ந்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் குண்டூசி முதல்
கனரகவாகன  இயந்திரங்கள் வரையில் ஆன்லைன் (on - line) வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் அந்தந்த நாட்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ (San Francisco) வை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னோடி நிறுவனமாக அமேசான் (Amazon) மற்றும் ஃப்லிப்கார்டு (Flipkart) நிறுவனங்கள் உள்ளன. இதில் ஜொமேட்டோ (Zomato) போன்றசில நிறுவனங்கள் உணவு வணிகத்தில் தனிக் கவணம் செலுத்துகின்றன.

விவசாயத்தின், விவசாயிகளின் உப தொழிலாக கருதப்படும் கால்நடைகள் வணிகம் இதுநாள்வரையில் கால்நடை சந்தைகள், இடைத்தரகர்கள் மூலமாகவே நடைபெறுகின்றது. உலக கால்நடைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ள இந்தியாவில் கால்நடை வணிகம் பெரும்பாலும் நியாயமற்ற முறையிலேயே நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்ததே.

இந்த குறையை போக்கி கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் உழைப்பிற்கு உறிய பலனை பெறும் வகையில் "பசுசாலா" (Pashushala.com) எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை திரு. கவரவ் சவுத்ரி (Mr. Gaurav Choudhary) 12 - செப்டம்பர் - 2018 - ல் துவக்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் முழுநேர தலைமை செயல் இயக்குனராக திரு. கவுரவ் சுவுத்திரியும் குழுவின் இயக்குனராக திரு. பங்கஜ் ஜேஸ்வால் (Mr.Pankaj Jaiswal) டாக்டர். நேஹா சுவுத்திரி (Dr. Neha Choudhary), திரு.ராஜ்னீஷ் ஜேஸ்வால் (Mr.Rajnish Jaiswal),மற்றும் திரு. அடுல் K. தாகூர் (Mr.Atul k Thakur) தொழில்துறை விற்பன்னர்கள் உள்ளனர்.



பீகார் மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள கால் கான் என்ற சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த திரு. கவுரவ் சவுத்ரி ஒரு கணினி பொறியியல் பட்டதாரி. மேலும் இந்தியாவின் தலைசிறந்த வணிகவியல் கல்லூரி (IIM) ல் பயின்று எட்டு ஆண்டுகளாக பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த பின்னர் கால்நடை வளர்ப்போர், விவசாயிகளின் நன்மைக்காக "பசுசாலா" ஆன்லைன் வணிக நிறுவனத்தை துவக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



சிறப்புகள்:

- கால் நடைகள் வளர்ப்போர், விவசாயிகள் நியாயமான விலையில் விற்பதற்காக உதவி செய்வது.

- இடைத்தரகர்கள் தவிர்ப்பதன் மூலம் கால்நடைகள் வாங்குபவர்கள் பலன் பெற வைப்பது.

- கால்நடை நலன் ஸ்திரப்படுத்துவது

- நம்பத் தகுந்த அளவில் நியாயமான விவசாயிகள் வருமானம் பெற வைப்பது

- கால்நடைகள் வாங்க பொருளாதார உதவிகள் செய்யும் நிறுவனங்கள், டிரான்ஸ்போர்டர்கள், இன்சூண்சு நிறுவனங்கள், கால்நடை மருத்துவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது போன்ற பணிகள் அனைத்தும் செயலாற்றப்படுகிறது.

எதிர்கால திட்டங்கள்:

- கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளை கூட்டாளிகளாக (Working Partner) இணைத்து நிறுவனத்தை நடத்துவது.

- கால்நடைகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கலுக்கான கூட்டுறவு சங்கங்களை அமைப்பது

- அரசு சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு கால்நடைகள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஏற்படுத்தித் தருவது.

போன்றவை குறுகிய காலத்திலேயே செயலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்சமயம் தினமும் பசு சாலாவில் சுமார் பத்து கால்நடைகள் ஆன்லைன் மூலம் வணிகம் நடைபெற்று வரும் நிலையில் மிக வேகமாக வளர்ந்து வருவதாக திரு.கவுரவ் கவுத்தி கூறுகிறார். விவசாயிகள் அனைவரும் நலம் தரும் "பசு சாலா" ஆன்லைன்நிறுவனம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை!

Contact Us
Stage 1 BTM, Bangalore
Karnataka, 560078, India
Email: info@pashushala.com
Mobile:
+91 99104 91500

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories