ஹைதராபாத்தை சேர்ந்த சையத் முபாஷிர் மற்றும் சித்தார்த் துரைராஜன் நண்பர்கள் மே - 2019-ல் செலஸ்டியல் ஈ மொபிலிட்டி (Cellestial E - Mobility) என்ற நிறுவனத்தை துவக்கினர். புதிய தீர்வுகள்,சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உபகரணங்கள் கண்டுபிடிப்பதை முக்கிய பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இருவரும் தங்களது 40 வருட அனுபவத்தை கொண்டு செயலாற்றி வருகின்றனர். முக்கியமாக விவசாய துறையில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்தவகையில் மே 2020-ல் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.விவசாய பண்ணைகள், தோட்டக்கலைபண்ணைகள்,பசுமை குடில்கள்,மற்றும் தொழிற்சாலைகளின் உள்ளே சரக்குகள் கொண்டு செல்ல என்று பல வகையில் இந்த வகை டிராக்டர்கள் பயன்படுத்த முடியும்.இதன் செயல்பாட்டு செலவுகள் இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வரும் டீசல் டிராக்டரின் செலவுகளை விட மிகவும் குறைவு, மேலும் மின்சார டிராக்டர்களின் பராமரிப்புச் செலவும் மிக மிக குறைவு.
ஒரு விவசாயி ஒரு மின்சார டிராக்டரை 5-ஆண்டு பயன்படுத்தினால் டீசல் டிராக்டரின் டீசல் மற்றும் பராமரிப்பு செலவு மிச்சத்தில் இரண்டு புதிய டாக்டர்களை வாங்கிவிட முடியும் என்று சித்தார்த்தன் உறுதியாக கூறுகிறார்.
சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் பங்களிப்பில் நடைபெறும் இந்த நிறுவனத்தின் மின்சார டிராக்டர்கள் 600 கிலோ முதல் 800 கிலோ எடை கொண்டது.சுமார் 1200 கிலோ எடை வரையில் பொருட்களை ஏற்றிச் செல்ல வல்லது.8 மணி நேர வீட்டு மின்சாரத்தின் மூலம் மின்கலங்களை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். மேலும் அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் வேகத்தில் 75 கிலோமீட்டர் வரையில் பயன்படுத்தலாம்.
இந்த வகை மின்சார டிராக்டர் மூன்று வகையான பகுதிகளை மட்டும் கொண்டது.
1.மோட்டார்கள் (motors)
2. கட்டுப்பாட்டு இயந்திரம் (Controller)
3. மின்கலங்கள் (Batteries)
இவை மூன்றும் சரியான சாதாரண தொழில்நுட்ப முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
மின்சார டிராக்டர்கள்
1.எடை குறைவு (Low Weight )
2.புகை கிடையாது (No Emission)
3.சத்தம் கிடையாது (Noise free)
4.அடக்கமான வடிவமைப்பு ( Compact Design )
சாதாரணமாக டீசல் டிராக்டர்களில் ஒரு மணி நேரத்துக்கு இயக்கு செலவு ரூபாய் 100 முதல் ரூபாய் 150 வரையிலாகும். ஆனால் மின்சார டிராக்டர்களில் ஒரு மணி நேரத்தில் இயக்கு செலவு ரூபாய் 20 முதல் ரூபாய் 25 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சார டிராக்டர்கள் பேட்டரிகளை சார்ஜ் செய்ய இயந்திர தொழிற்சாலை உயர் அழுத்த மின்சாரம் தேவையில்லை.விவசாயிகளின் வசதிக்காக வீட்டு உபயோக மின்சாரத்தையே சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
மின்சார டிராக்டரின் விலை தற்சமயம் ரூபாய் 5 லட்சம் மட்டுமே.
இதை சேற்றில் உழவு செய்யமுடியுமா என்பது பரிசோதனை கட்டத்தில் உள்ளது.
இதன் RPM (Revolution Per Minute) 540-900 என வடிவமைக்கப் பட்டுள்ளது.
பயனாளிகள் ஏதேனும் சந்தர்பத்தில் இந்த வாகனத்தை விற்க நேரிடும் போது இதன் Resale Value எவ்வாறாக இருக்கும் ?
ஆட்டோமொபைல்களில் உள்ள உடல் கூறுகள் (Physical Elements in Automobiles)
இந்த டிராக்டர் டீசல் டிராக்டர் தரும் அனைத்து பயன்களையும் குறைந்த விலையில் தரக்கூடியதாக அமைந்துள்ளது.. உதாரணமாக இதை லோட் வண்டியாகவும் பயண்படுத்தலாம்.
Contact:
Call: 9109105123
info@cellestial.com
Contactus@cellestial.com