உலகின் மஞ்சள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கிறது. | இந்தியாவில் வழக்கமான பண்ணைகளில் மஞ்சள் வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகள் மண்ணில் வேர்த்தண்டு அழுகுவதால் அறுவடையில் 40% முதல் 50% வரை சேதம் அடைவதை பார்க்கிறார்கள்.
இதற்கான ஒரு மாற்றாக பெங்களூருவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான திரு.சி.வி.பிரகாஷ் (Mr. CV Prakash) விவசாயிகளுக்கு லாபகரமான மஞ்சள் வளர்க்கும் வழியினை கண்டு பிடித்து செயல்படுத்தி வருகிறார். வளர்ப்பு பைகளை (Grow Bags) பயன்படுத்தி ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் எட்டு 8 மடங்கு அதிகமான மற்றும் தரமான மஞ்சளை உற்பத்தி செய்து "மஞ்சள் புரட்சியை" தொடங்கியுள்ளார்.
திரு.பிரகாஷின் முதன்மையான தோட்டக்கலை மேம்பாட்டு (Horticulture Upskilling Institution) நிறுவனமான "அக்ரகன்னியா திறன்கள்" (Aggragannya skills) கிழ் உள்ள "சி.வி ஹைட்ரோ பயிற்சி மையத்தில் (C.V Hydro training Center) 2020 முதல் பல்வேறு வகையான மஞ்சள் வளர்ப்பு பற்றி தனது சிறப்பு மற்றும் தனித்துவமான ஹைட்ரோபோனிக் விவசாய முறைகளை 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் மற்றும் சுற்றுப்பகுதியில் சேலம் ரகம் மஞ்சள் பிரபலமாக வளர்க்கப்படுகிறது. இப்பகுதிகளில் வழக்கமான விவசாய மண் பண்ணைகளில் ஒரு செடிக்கு சுமார் 500 - 600 கிராம் மஞ்சள் மட்டுமே விவசாயிகள் சேகரிக்கின்றனர். சிறப்பான பராமரிப்பாக இருந்தால் சில விவசாயிகள் 1 கிலோ பெறுகின்றனர்.
வழக்கமான பண்ணைகளில் மஞ்சள் வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகள் மண்ணில் வேர்தண்டு அழுகுவதால் அறுவடையில் 40% முதல் 50 % வரையில் சேதமடைவதை பார்க்கின்றார்கள். மேலும் பூச்சிகளின் பூஞ்சை தாக்குதலாலும் சேதமடைகிறது.
Drip Systems - சொட்டு அமைப்புகள்
N.F.T. Nutrient Film Technique - என்.எஃப்.டி. ஊட்டச்சத்து திரைப்பட நுட்பம்
Water Culture - நீர் கலாச்சாரம்
திரு.சி.வி. பிரகாஷ் அவர்களின் சிறப்பு மற்றும் தனித்துவமான வளர்ப்பு பைகள் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறையின் படி.
1. தற்சமயம் ஒரு வளர்ப்பு பைக்கு (Grow Bag) 3 முதல் 5 கிலோ மஞ்சள் மகசூல் கிடைக்கிறது.
பருவத்தில் ஒரு பைக்கு 10 கிலோ மகசூல் அடையவேண்டும் என்ற முயற்சியில் திரு பிரகாஷ் ஈடுபட்டு வருகிறார்.
2. மஞ்சளின் தறத்தையும், விலையையும் நிர்ணயிக்கும் "குர்குமின்" (Curcumin) என்ற மருத்துவ குணமுள்ள நிறமிகளின் அளவு 3% லிருந்து 5.9% சதவீதம் வரையில் அதிகமாக உள்ளது.
3. "குர்குமின்" உள்ளடக்கம் மற்றும் மகசூலுக்கு அப்பால் பெங்களூருவில் உள்ள "யூரோஃபின்ஸ்" ஆய்வகங்கள் (Eurofins Labs) நடத்திய சோதனையில் திரு.பிரகாஷ் ரசாயன பூச்சிக் கொல்களை பயன்படுத்தாததால் நச்சுத்தன்மை வாய்ந்த கரைக உலோக தடயங்கள் ஏதுமில்லை. மேலும் நுண்ணுயிரியல் மாசுபாடு எதுவும் கண்டறியப்படவில்லை. அறுவடை செய்யப்பட்ட பயிரை 100% விற்பனைக்குறிய தயாரிப்பாக ஆக்குகிறது.
4. விவசாயிகள் தங்களின் தேவைக்கேற்ப இரண்டு வகையான 6 மாத பயிரான ஏசி.சி பிரகதி மற்றும் 9 மாத பயிரான சின்னசேலம் வகைகளை வளர்க்கலாம்.
5. இந்த வளர்ப்பு அமைப்புக்கு வளர்ப்பு பைகள் (Grow Bags) கோகோ பீட் மற்றும் இதர பொருட்கள் செலவாக சுமார் ரூபாய் 1 லட்சம் புதிதாக நிழல் அமைப்பை உருவாக்க மேலும் ரூ 1 லட்சம்முதலீடாக தேவைப்படும்.
6. திரு. பிரகாஷின் "ஆரஞ்சு புரட்சியின்" ஒரு பகுதியாக வளரும் விவசாயிகளில் ஒருவர் ஐ.டி மென்பொருளை கையாளும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் திரு. சீனிவாசன் ராமச்சந்திரன் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு ஒரு ஃ ப்ரி லான்ஸ் ஆலோசகராக மாறி மண்ணில்ல சாகுபடியில் தனது ஆர்வத்தை ஈடுபடுத்தி செயலாற்றி வருகிறார் என்பது இந்த விவசாய முறைக்கு ஒரு தரச்சான்று என்றால் அது மிகையல்ல.
Come Visit Us
Head Branch Get Direction
CV Hydro, Behind Ambur Biriyani Hotel, Hanumanthe Gowdar Road, Chikkasandra, Bangalore, 560057, Karnataka, India.
Email Us
Website: www.cvhydro.in
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.