February 26, 2021

"குப்பையில் புதையல் கண்டுபிடிப்பு" "Finding treasure in trash"

திரு. P.M. முருகேசன் மதுரை மாவட்டத்தின் மேலக்கல் (Melakkal) கிராமத்தை சேர்ந்தவர். சொந்த காரணங்களால் பள்ளிப் படிப்பைக் கூட தொடர முடியாத ஒரு விவசாயி தனது தனித்துவமான திறமையை (Unique Indigenous) பயன்படுத்தி காப்புரிமை (Patented) பெற்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.பாரம்பரியமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்த திரு. முருகேசன் தம்மை சுற்றியுள்ள வாழை விவசாயிகள் பெரும்பாலோர் வாழை மரத்திலிருந்து வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை தவிர டன் கணக்கில் இதர கழிவுகளை எரிப்பது, புதைப்பது என்பைதைக் கண்டவர் அவற்றை சூழல் நட்பு (Eco Friendly) முறையில் பயன்படுத்தும் வகையில் ஒரு இயந்திரத்தை வடிவைமைத்துள்ளார். வாழையின் கழிவு இலைகள், வாழைப் பட்டைகள் (Banana Sheeth) வாழைத்தண்டுகள் (Banana Stem)  ஆகியவற்றைப் பயன்படுத்தி வாழை நார் கயிறுகள், பைகள், கூடைகள்  மற்றும் பலவகை பயன்படும் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி உள்ளார்.திரு.முருகேசன் “எம்.எஸ். கயிறு உற்பத்தி நடுவம்” (M.S. Ropes Production Center) என்ற நிறுவனம் துவங்கி அதன் மூலமாக வாழையின் அனைத்துப் பயன்படு பொருட்களையும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வணிகம் செய்து வருகிறார். வாழையின் பல்வகை பரிணாம (Versatility) பயன்பாட்டுக்கு ஏற்ப அனைத்து பொருட்களையும் தயாரிக்க ஒரு இயந்திரத்தை வடிவமைத்து அதற்கு காப்புரிமை பெற்றுள்ளார். அதற்காக உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (Bio Technology Research Council) (BIRAC) உதவியை பெற்று காப்புரிமை பெற்றுள்ளார். இவருடைய இத்தகைய நூற்பு இயந்திரம் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. மேலும் இந்தகண்டுபிடிப்புக்காக பல விருதுகளும் பாராட்டுகளும் (Awards and Accolades) பெற்றுள்ளார், 7 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில விருதுகளை பெற்றுள்ள திரு. முருகேசன் பிரதான் மந்திரி வேலை வாய்ப்பு உற்பத்தித் திட்டம் (Prime Ministers Employment Generation programe - (PMEGP), காதி சிறு தொழில் நிறுவனம் (Khadi and Village Industries Commission), தேசிய விவசாய விஞ்ஞான (National Farmer Scientists Award) விருது மற்றும் கிரிஷி விக்யான் கேந்திரா (Krishi Vigyan Kendra) அளித்துள்ள சிறந்த தொழில் முனைவோர் விருது (Best Entrepreneur Award) அதில் குறிப்பிடத்தக்கது.

திரு. முருகேசன் தயாரித்துள்ள தானியங்கி இயந்திரத்தின் நெகிழ்வுத்தன்மை (Flexibility) காரணமாக பெருமளவில் அவருடைய நிறுவனத்தில் பெண்களே பணி செய்து வருகின்றனர். பறந்து அளவிலான தயாரிப்புகளை உருவாக்கி உலகளவில் சந்தைப் படுத்தப் படுவதால், குறிப்பாக பெண்கள் வருமானம் ஈட்டி குடும்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. முருகேசன் அவர்களின் காப்புரிமை பெற்ற இயந்திரம் 50க்கு மேல் மணிப்பூர், இம்பால், பீகார், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் 50க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் (NABARD) மூலமாக ஆப்பிரிக்காவுக்கும் மற்றும் பல வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

திரு. முருகேசன் அவர்கள் அவரது கிராமத்தில் விரிவான மாற்றங்களைக் கொண்டு வந்ததின் மூலம் கிராம மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி பல குடும்பங்கள் பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளார் என்பது மிகவும் பாராட்டுக்குரியது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Innovator’s Address:
P.M. Murugesan
ROPE Production Centre,
3/43, Main Road, Mellakkal Village,
Madurai District – 625 234.
Tamil Nadu, India.
Cell:9360597884

Stories