மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்தனகிரி தாலுகாவிலுள்ள ஜபாடே (Zapade) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயதான விவசாயி திரு. ஹரிச்சந்திர தேசாய். (Hari Chandra Desai) தன்னுடைய 23 ஏக்கர் விவசாய நிலத்தில் 13 ஏக்கரில் பலாப்பழத்தை மட்டும் வளர்த்து வருகிறார்.
இவருடைய பலாப்பழ தோட்டத்தில் 75 க்கும் மேற்பட்ட வகையில் பலாப் பழ மரங்கள் உள்ளன, இவற்றில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பிரபலமான வகைகள் மட்டு மில்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட வகைகளும் உள்ளன குறிப்பாக ஜல் போக் ராஜா (Jalbhog Raja), சம்பாடக் (Champadak), சிங்கப்பூரி (Singapoori), துப்போஜரா (Tubbogera), கவுடி சிங்கனா கச்சஹல்லி (Kaudisingana Kachahalli), ராமச்சந்திரா (Ramachandra), மடகாஸ்கர் கோம்லியோஸ் (Madagascar Gomleos) மில்கி ஒயிட் (Milky White) வியட்நாம் சீட்லெஸ் (Vietnam seedless).
ஆகிய வகைகளும் அடக்கம். மேலும் திரு. தேசாய் அவர்களே உருவாக்கியுள்ள "தேசாய் கப்பா" (Desai Kappa) என்ற மிகவும் இனிப்பான வகை கேரள மாநிலம் முழுவதும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
பலாமரம் வளர்ப்பில் எந்தவித தொழில்நுட்பமும் கிடையாது. சிறப்பான பராமரிப்புகள் எதுவும் கிடையாது உரங்கள் தேவையில்லை, பூச்சி மருந்துகள் அவசியமில்லை. வறட்சியை தாங்கக்கூடியது. அனைத்து விதமான மண்ணமைப்பிலும் சிறப்பாக வளரக்கூடியது. வேலை என்பது வளர்ந்த பழங்களை அறுவடை செய்வது மட்டுமே!
பலாப்பழங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
1. மென்மையான ரஸ்ஸல் (Softer Ressal)
2. கடினமான காப்போ (Firmer Kaapo)
13 ஏக்கர் பரப்பில் சற்றேறத்தாழ 1250 பலா மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. ஒரு மரம் மாதம் வருடத்திற்கு 500 பழங்கள் தருகின்றது.
கேரளாவின், வேநாட்டில் 2017 - ஆம் ஆண்டில் நடைபெற்ற " அகில உலக பலாப்பழ திருவிழா" வில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திரு.தேசாய் மட்டுமே பங்கேற்றுள்ளார் என்பது சிறப்பு, பலாப்பழத்தின் மீது திரு. தேசாய் கொண்டுள்ள பற்றின் காரணமாக "பலாப்பழ ராஜா" (King of Jack Fruit) என்று அழைக்கப்படுகிறார். பலாப்பழ விவசாயிகள் 500 பேருக்கு மேலாக இணைத்து விவசாய உற்பத்தி நிறுவனம் (Farmers Producer Company) ஒன்றை துவக்கி உள்ளார் திரு.தேசாய்.
உலகத்தில் மிகப்பெரிய பழம் என்று அழைக்கப்படும் பலா முக்கனிகளான மா, பலா, வாழை யில் ஒன்றாக உள்ளது. பன்முகத்தன்மை (Versatile Fruit) கொண்ட பலாப்பழம் அப்படியே பழமாகவும், வறுத்த வடக்கமாகவும், பலா குழம்பாகவும் (Wet gravies), கட்லெட்டாகவும் (Cutlet) உண்ணப்படுகிறது. தற்போது பலாப்பழ ஜாம் மற்றும் பலாப்பழம் மாவு (Freeze Dried Jack Flour) உலக அளவில் சந்தை படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.