April 16, 2021

"நல் வருமானம் ஈட்டும் கற்றாழை வளர்ப்பு" "Aloe Vera Cultivation" - Good Earner

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 49 வயது திரு.லேலாண்ட் மராக் (Layland Marak). மலைப் பிரதேசமான மேற்கு காரோ மலைப் (West Garottillo) பகுதியில் கானோல்கிரே (Ganolgre) கிராமத்தில் கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி தன்னுடைய கிராமத்தையும் முன்னேற்றி உள்ளார் திரு.மராக். பட்டப்படிப்பு கூட முடித்திராத திரு. மராக் தொடர் முயற்சியால் (Perseverance) மலைப் பிரதேசம் முழுவதும் கற்றாழை (Aloe Vera) பயிரிட்டு அதனை வெற்றிகரமாக லாபகரமாக சந்தைப் படுத்தி உள்ளார்.



திரு.மராக் ஒரு விவசாய ஆர்வலர் என்ற அடிப்படை எண்ணமுடையவர் மட்டுமல்லாமல் ஒரு தொழில் முனைவர் (Entrepreneur), சமூகத் தலைவர்
(Community Leader), ஆசிரியர், நல்ல தகப்பன் என்ற பல்வேறு முகங்களை உடையவர் என்று கூறலாம்.

மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த திரு. மராக் தன்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேரையும் வளர்த்ததோடல்லாமல் தனது மலைவாழ் சமூகத்துக்கு பயன்படும் வகையில் நல்லதொரு சாலை வசதி, கழிப்பிட வசதி மற்றும் பல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறார். இவை அனைத்துக்கும் பொருளாதார ஆதாரமாக கற்றாழை விற்பனை உள்ளது.



அந்தவகையில் மலை கிராமத்தின் முதல் தொழில் முனைவராக "ரோன்கிராம் சமூகம் மற்றும் கிராம முன்னேற்றம்" (Rongram Community and Rural Development) என்ற அமைப்பின் மூலமாக மலைக்கிராம மக்களுக்கு நவீன விவசாய முறைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொடர்ந்து உதவி வருகிறார்.

2008- ஆம் ஆண்டு “சிகிங்ஜாங்” (Chizinjang) என்ற தன்னார்வ தொண்டு குழுமத்தின் (Self Help Group) மூலமாக லாபகரமான கற்றாழை (Aloe Vera) வளர்ப்பையும் அதன் மூலமாக மதிப்புக்கூட்டு பொருட்களையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி லாபகரமான    தொழிலையும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியும் மலைகிராம பொருளாதாரத்தினை மேம்பட உதவி வருகிறார் திரு.மராக்.



2009 ஆண்டு “மேற்கு கேரளா மலை"(West Ghats Hill) கிராமத்தில் கற்றாழை பதப்படுத்தும் (Aloe Vera Processing Factory) தொழிற்சாலை ஒன்றை மாவட்ட கிராம முன்னேற்ற நிறுவனம்.”(District Rural Development Agency -DRDA) மூலம் நிர்மாணம் செய்து கற்றாழைச்சாறு (Aloe Vera Juice) கற்றாழைக் (Gel) தயாரிப்பு மற்றும் கற்றாழை சோப்பு தயாரிக்கும் இயந்திரம் ஆகியவற்றைப் பொருத்தி செயலாற்றி வருகின்றனர். அதன் மூலமாக ஆரம்பத்தில் வருட வருமானம் ரூ 7 லட்சத்திலிருந்து தற்போது
(2019) 20 லட்சமாக உயர்ந்து லாபத்தில் பெரும்பகுதியை மலைகிராம அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறார் திரு. மராக்.

2016-ல் வடக்கு பிராந்திய விவசாய நிறுவனம் (North Eastern Regional Agricultural Marketing Corporation Limited (NERMAC) வளர்ந்து வரும் மாற்றவியலாளர் மற்றும் இயற்கை விவசாய ஸ்தாபகர் (Emerging Change Maker and Promising Organic Founder of the Stale) என்ற விருதினை திரு.மராக் அவர்களுக்கு அளித்து கௌரவப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories