உலகில் வாழும் உயிர்களின் நன்மைக்காக கார்பன் உமிழ்வை (Carbon Emmision) குறைக்க பசுமை தோட்டக்களை அமைப்பது, மரங்கள் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் தயாரிப்புகள் தேர்ந்தெடுப்பதில் நம்மில் பலர் கவனம் செலுத்துகிறோம். ஆனால் இந்த செயல்பாட்டில் நம் வீடுகளில் நம்மைச் சுற்றி யுள்ள சுவர்கள், கட்டிடங்கள் காலநிலை மாற்றத்திற்கு பெரிய அளவு பங்களிப்பாளர்கள் என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம் அல்லது முற்றிலும் தெரியாதவர்களாக உள்ளோம், சரளைக் கற்கள், ஜல்லிகள் மணல் மற்றும் சிமென்ட் ஆகியவை தண்ணீருடன் கலந்து கட்டுமானத்தில் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வை பெருமளவில் நிகழ காரணமாகிறோம்.
சிமெண்ட் தயாரிக்கும் செயல்முறையை அறிந்தாலே இத்தகைய செயல்பாடு தெளிவாக விளங்கும்.
சுண்ணாம்பு மற்றும் களிமண் போன்ற மூலப்பொருட்கள் குவாரிகளலிருந்து வருகிறது. பொருட்கள் அரைக்கப்பட்டு இரும்புத்தாது, ஜிப்சம் மற்றும் சாம்பலுடன் கலந்து 1450- டிகிரி செல்சியஸ் வெப்ப உருளை சூளைகளுக்கு (Kien) உள் செலுத்தப்பட்டு கால்சினேஷன் (Calcination) செய்யப்படுகிறது. இது கலவையை கால்சியம் ஆக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடை பிரித்து "கிளிங்கர்" (Clinger) என்ற புதிய தயாரிப்பை அரைத்து சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது. இவை நீருடன் கலந்து கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது சிமெண்டில் இருந்து வெளியேறும் CO2 உமிழ்வுகளல் உலகின் மூன்றாவது பெரிய CO2 உமிழ்வாக மாறுகிறது.
இதற்கு ரூர்க்கி மற்றும் விசாகப்பட்டினம் சார்ந்த சமூக நிறுவனமான "கிரீன் ஜாம்ஸ்" (GreenJams) ஒரு மாற்றீட்டை (Alternative) வேளான் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் புதுமையான கார்பன் எதிர்மறைச் செங்கல் (Carbon Negative Brick) "அக்ரோ கிரிட்" (Agrocrete) என்ற பெயரில் வழங்கப்படுகிறது
விவசாய உயிரி (Agriculture Bio Mass) மற்றும் சணல் தொகுதிகளில் இருந்து (Hemp Blocks) கார்பன் எதிர்மறை கட்டுமான பொருட்களை உருவாக்கிறது இந்த நிறுவனத்தை சிவில் என்ஜினியரான திரு.தருண்ஜாமி (Mr.Tarun Jami) துவக்கி
நிர்வகித்து வருகிறார்.
"அக்ரோகிரீட்" தயாரிப்பு:
- விவசாயிகளிடமிருந்து விவசாய எச்சங்களை சேகரித்து அதை நறுக்கி பதப்படுத்துகிறது.
- எஞ்சியவை புதுமையான தயாரிப்பு BINDER உடன் கலக்கப்படுகிறது.
- இது எஃகு, காகிதம் மற்றும் மின் தொழில்களின் கார்பன் உமிழ்வு குறைந்த போர்ட் லேண்ட சிடெண்டுடன் கலந்து ஒரு தூள் வடிவில் உருவதால் ஒட்டுக் கலவையாகவும் (Masonary Morter) பூச்சு (Plastering) பொருளாகவும் பயன்படுகிறது.
"அக்ரோ கிரீட்" - டின் சாதகங்கள் (Advantages):-
1. கார்பன் எதிர்மறைப் பொருள்
2. கட்டுமான செலவை 50% குறைக்கும்
3 வெப்பகாப்பினை (Heat Tolerence) 50% அதிகரிக்கிறது.
4. கட்டிடங்களை நிர்மாணிக்க தேவையான நேரத்தை குறைக்கிறது.
5. சுற்றுச்சூழலை மீட்டெடுத்து பாதுகாக்கிறது.
6. "AgroCrete" தூளை பயன்படுத்துவதால் சருமத்தில் எந்தவிதமான எரிச்சலையும் ஏற்படுத்துவதில்லை.
7. மிகவும் தூய்மையான பூச்சு அளிக்கிறது
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை சரிசெய்து பூமியின் நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பின்னர் மனிதர்களையும் மீட்டெடுப்பதற்கான நேரம் இது வாழ்க்கைச் சுழற்சி தாக்கங்களின் அடிப்படையில் நாம் சிந்திக்க தொடங்க வேண்டும் மற்றும் வட்ட (Circular) மற்றும் நேரியல் பொருளாதாரத்தின் (Linear Economy) வழிகளை கண்டறிய வேண்டும்.
கிரின் ஜாம்ஸ் (Green Jams) என்ற இந்த சமூக நிறுவனம் பல வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மற்றும் "மாஸ் சேலஞ்ச் சுவிட்சர்லாந்து 2021 " முடுக்கி திட்டத்திற்கு (Accelerator Programme) தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
10-5-14/C, 401, Mantis,
Facor Layout, Ramnagar,
Visakhapatnam, Andhra Pradesh
Contact Information
+91 9591170791 | +91 8816934857
Our Website: https://www.greenjams.org/
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.