June 25, 2021

மாமரம் வளர்ப்பில் அதிதீவிர உயர் அடர்த்தி நடவு Ultra High - Density Planting

திரு.பரமானந்த் கவானே (Mr. Paramanand Gavne) 62 வயதான ஆர்வமுள்ள விவசாயி. மகாராஷ்டிரா மாநிலத்தின் மிராஜ் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெலாங்கி (Belanki) எனும் கிராமத்தில் உள்ள தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் அதிதீவிர உயர் அடர் நடவு (UHDP) முறையினை கடைபிடித்து 15 டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகிறார்.


உலகெங்கிலும், குறிப்பாக இஸ்ரேல் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகளாக அதிதீவிர உயர் அடர் நடவு (UHDP) முறை நடைமுறையில் உள்ள நிலையில் சமீபத்தில் தான் மகாராஷ்டிராவில் திரு.கவானே போன்ற ஒருசில ஆர்வமுள்ள விவசாயிகள் பின்பற்றத் துவங்கியுள்ளனர்.மாந்தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த முறை மற்ற நிலையான விவசாய நுட்பங்களுடன் உள்ள பாரம்பரிய சாகுபடி முறையை விட 200% அதிக பயிர் விளைவிக்கிறது. தவிர பழத்தின் சுவையையும் புத்துணர்ச்சியும் பராமரிக்கும் போது சீரான வடிவத்தையும் நிறத்தையும் உறுதிசெய்கிறது.கடந்த ஆண்டு 250 கிராம் முதல் 400 கிராம் எடையுள்ள பழங்கள் திரு.கவானேவின் பண்ணையிலிருந்து டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ராய்ப்பூருக்கு அனுப்பப்பட்டது ஆரம்பத்தில் 3 டன்னாக இருந்த உற்பத்தி தற்போது 10 டன் மாம்பழங்கள் உற்பத்தியாகிறது.

மிராஜின் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை மற்றும் கரடுமுரடான ஆழமற்ற மண் வகையிலேயே UHDP முறையில் மாம்பழ வகைகளான கேசர், அம்ரபாலி, மல்லிகா, சிந்து, புளோரிடாவின் பெனிஷன், டாமி அட்கின்சின், மேலும் அல் போன்சோ, ஆலம்பூர், ஹிம்சாகர், லாங்க்ரி சாஸ்ஸா, மங்கராட், பெங்களூரா, நீலம், தஷேஹரி, பங்கனபள்ளி மற்றும் ரத்னா வகை மாம்பழங்கள் அனைத்தும் வளர்க்க முடிகிறது.

அதிதீவிர உயர் அடர் நடவு முறை ஒரு ஏக்கருக்கு உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது அதே நேரத்தில் நீர் பாசணத்திற்கான நீரின் பயன் பாட்டை 50% வரை குறைக்கிறது. முழுமையான கரிம எருவையோ (Organic Fertilizer) அல்லது பெரும்பகுதி கரிம உரமும் குறைந்த சதவீத ரசாயன உரமும் பயன்படுத்த முடிகிறது.

ஈரப்பதத்தின் இழப்பை தடுப்பதற்கும், ஊட்டச்சத்து நுட்பத்தின் மூலம் தேவையான அளவுகளில் ஊட்டச்சத்தை வழங்குவதற்கு சொட்டுநீர் பாசன முறையை ஏற்றுக்கொள்வது தரமான பழங்களுடன் அதிக மகசூல் பெறுவதற்கு மிகவும் அவசியம்.

முன்னாள்  திராட்சை  விவசாயியான திரு. கவானே அதிக அடர்த்தி, கொண்ட தோட்ட விவசாய முறையைப் பயன்படுத்தி மகாராஷ்டிராவில் ஒரு சிறந்த மாம்பழ உற்பத்தியாளராக மாறி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories