August 15, 2021

நிரந்தர விதைப் பெட்டகம் Permanent Seed Vault

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஒ) (Defence Research and Development Organization (DRDO) உதவியுடன் 2010 - ஆம் ஆண்டில் "பாதுகாப்பு உயர்தர ஆராய்ச்சி நிறுவனம் (Defense Institute of High altitude Research (DIHAR) மற்றும் தேசிய தாவர மரபணு வள பணியகம் (என்.பி.பி.ஜி.ஆர்) (National Bureau of plant Genetic Resources (NB PGR) இணைந்து 2010 ஆண்டில் ஹிமாலயாவின், லடாக்கில் "சாங்கலா" (Chang La) வில் விதைப்பெட்டக வங்கியை நிறுவியுள்ளது.இந்த விலைமதிப்பற்ற விதை ப்பெட்டகத்தின் பின்னால் உள்ள கருத்து என்னவெனில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகளாவிய பேரழிவிலிருந்து உலகின் தாவரங்களை பாதுகாப்பதாகும், உதாரணமாக அணுசக்தி யுத்த அழிவு, கடலோர நீர் மூலம் நில அழிவு, நீடித்த வறட்சி அல்லது பூச்சிகளின் பாதிப்புகள் எதிர்காலத்தில் பயிர் இனங்கள் அழிந்துபோக வழி வகுத்தால் அரசாங்கங்கள் விவசாயத்தினை புதுப்பிக்க விதைப் பெட்டகங்களிலிருந்து விதைகளை பெற்று விளைவிக்க முடியும்.

கடல் மட்டத்திலிருந்து 17,300 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் “டூம்ஸ் டே சாங்லா விதைப் பெட்டகம்” லடாக்கின் ஒரு உயரமான பகுதியில் அமைந்துள்ளது. மற்றும் இது நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான இறுதி காப்பீடாக உள்ளது. இது எதிர்கால சந்ததியினருக்கு சவால்களை சமாளிக்க ஒரு வாய்ப்பினை வழங்குகிறது, மேலும் இந்த நிரந்தர விதை வங்கி உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய அமைப்பாகும்.இது 5000க்கும் மேற்பட்ட விதை வகைகளை சேமிக்கிறது. விதைகள் பல இன விதைகளின் தொகுப்பை வெவ்வேறு புவியியல் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வாழும் இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது. விதைகளின் தொகுப்பில் அரிசி, கோதுமை, பட்டாணி வகைகள், மக்காச்சோளம், சோள வகைகள், முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, தக்காளி, பார்லி, மற்றும் பல்வேறு அரிய தாவர வகைகள் உள்ளடங்கியது.

விதை தொகுப்புகள் அனைத்தும் "சங்லா" விதை வங்கியில் மூன்று அடுக்கு பைகளில் மூடப்பட்டு கருப்புப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு கல் மற்றும் மரத்தாலான பேனல் கட்டிடத்தின் உள்ளே அலமாரிகளில் வைக்கப்படுகின்றன. கிரையோ பிரசர்வேஷன் (Cryo Praservation) முறையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி - 196° செல்ஷியஸ் வெப்பநிலையில் மூடப்படுகிறது. - 196° C - வெப்பநிலையில் விதைகளின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகள் (Metabolic Activity) அனைத்தும் முழுவதுமாக நிறுத்தப்படுகிறது.

இந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் தடையின்றி வைக்கும்போது வெங்காய விதை ஆயுட்காலம் சுமார் 413 ஆண்டுகள், அரிசி 1800 ஆண்டுகள், கோதுமை 1,600 ஆண்டுகள், பார்லி 2000 ஆண்டுகள் மற்றும் பட்டாணி 9,000 ஆண்டுகள் என்பது ஆச்சர்யமான உண்மை.


அதாவது விளங்கச் சொன்னால் 2020ஆம் ஆண்டில் பூட்டப்பட்ட ஒரு பட்டாணி விதை 11020 "ஆண்டில் - வெளியே எடுத்து வெற்றிகரமாக விதைக்கலாம்!

இதுவரையில் விதைகளை நீண்டகாலமாக சேமித்து வைப்பதற்கான ஒரு வசதி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) (Indian Council of Agriculture Research (ICAR) புதுடெல்லியில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இது மிக அதிகமான பொருட்செலவில் கிரையோ பிரஸ்வேஷனில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் கவனமாக பாதுகாக்கப்பட்ட விதைகளின் தொகுப்பு அதை மீட்டு டெடுக்கவும், பயிரிடவும், குடிமக்களுக்கு உணவளிப்பதை உறுதி செய்யவும் முடியும்.

டி.ஆர்.டி.ஒ (DRDO) வின் மூத்த விஞ்ஞானி திரு. வில்லியம் செல்வமூர்த்தி கூறியது போல இந்த அமைப்பு "ஒரு நோவாவின் பேழை வகை" ("This is a Noahs Ark Type of activity) என்றால் மிகையல்ல.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories