July 11, 2022

சோலார் பேனல்கள் மறுசுழற்சி (Solar Panels - Recycle)

உலகின் மலிவான மின்சார வடிவங்களில் சூரிய ஆற்றல் முதன்மையாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு சூரிய ஆற்றல் மின் உற்பத்தி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இந்தியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் சூரிய ஆற்றல் அதன் புதுப்பிக்க தக்க ஆற்றல் இலக்கான 450 ஜிகா வாட்டிற்கு கிட்டத்தட்ட 300 ஜிகா வாட் பங்களிக்கும் என்று இந்திய அரசு நம்புகிறது.

இந்த நிலையில் பயன்பாட்டுக்குப் பின் பெருமளவில் சூரிய மின் உற்பத்தி சோலார் கழிவுகள் உருவாக்கின்றன 2030-ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் டன்களுக்கும் அதிகமான சூரிய மின் பேனல் கழிவுகள் இருக்கும் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் அறிக்கையின்படி 2030 - களில் பெரிய அளவிலான வருடாந்திர சோலார் பேனல் கழிவுகள் 78 மில்லியன் டன்களைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.



பெரும்பாலான செயலிழந்த சோலார் பேனல்கள் இறுதியில் நிலப்பரப்புக்குள் கொட்டப்படுகின்றன இது மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த சூரிய மின் பேனல்களின் ஈயம், காட்மியம், சிலிக்கான், பாஸ்பரஸ், போரான் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் (Carcinogenic) பொருட்கள் உள்ளன. இது தவிர இவற்றை பதப்படுத்தாமல் குப்பை கிடங்குகளில் கொட்டினால் அவை மண்ணில் கசிந்து மண் சிதைவை ஏற்படுத்தி, நிலத்தடி நீருக்குள் சென்று சுற்றி உள்ள விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதோடு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பெங்களூருவில் உள்ள அறிவியல் கழகத்தில்
(Center for sustainable Technologies) cst டாக்டர். மாண்டோமணி (Dr. Monto Mani) தலைமையிலான இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of science IISC) ஒரு விஞ்ஞானிகள் குழு பழைய சோலார் கழிவுகளை கட்டிடப் பொருளாக மறுசுழற்சி செய்து பேனல்களின் பயனுள்ள ஆயுளை சில தசாப்தங்களுக்கு நீட்டிக்க வழி வகுத்துள்ளனர்.



சோலார் பேனல்கள் பற்றிய சுருக்கமான விளக்கம்:-

உலகெங்கிலும் உள்ள சோலார் பேனல்கள் முதன்மையாக மூன்று வடிவங்களில் வருகின்றன மோனோ கிரிஸ்டலின், பாலி கிரிஸ்டலின் மற்றும் மெல்லிய படம். ஆகியவை முக்கிய அங்கம். அவற்றின் சூரிய மின்கலங்கள் ஒளி மின்னமுத்த (PV) செல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, பல சோலார் செல்களை ஒன்றிணைத்து ஒரு சோலார் பேனல் கட்டப்பட்டுள்ளது.



சூரிய ஒளி இந்த (PV) செல்களை தாக்கும்போது ஒளி மின்சாரமாக மாற்றப்படுகிறது. பெரும்பாலான சோலார் போனல்களில் படிக சிலிக்கான் சோலார் செல்களைப் பயன்படுத்தப்படுகின்றன.
"சிலிக்கான் அனுக்களால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு படிகலேட்டீசை உருவாக்குகிறது"
என்று அமெரிக்காவின் எரிசக்தி திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அலுவலகத்தின் விளக்கம் கூறுகிறது." இந்த லேட்டிஸ் ஒரு ஒழுங்கு அமைக்கப்பட்ட கட்டமைப்பை வழங்குவதன் மூலம் ஒளியை மின்சாரமாக மாற்றுவதை மிகவும் திறமையாக நிகழ்த்துகிறது.

இந்த படிக சிலிக்கான் செல்கள் பொதுவாக பாஸ்பரஸ் மற்றும் போரான் அடுக்குகளால் ஆனவை. இந்த செல்கள் அமைந்த பேனல்கள் சீல் வைக்கப்பட்டு கடினமான பிரதிபலிப்பு கண்ணாடியால் பூசப்படுகிறது. பின்னர் இவை உறுதியான அலுமினிய சட்டத்தில் பொருத்தப்படுகிறது.

சோலார் பேனல்கள் கழிவு மறு சுழற்சி முறைகள்:-

செயலிழந்த சோலார் பேனல் கழிவுகளை ஜெர்மனி போன்ற நாடுகளில் சிலிக்கானை மட்டும் மீட்டெடுக்க (பிரித்தெடுக்க) தெர்மோஸ் - கெமிக்கல் (Thermos Chemical Process) செயல்களை பின்பற்றுகின்றன.   இந்தியாவில் பொருளாதார ரீதியாக சாத்தியமான வசதிகள் தற்போது இல்லை. மிக முக்கியமாக செயலாகத்திற்காக கழிவு சோலார் பேனல்களை மீட்டெடுப்பதற்கான கட்டமைக்கப்பட்ட வழிமுறை தற்போது இல்லை. எனவே இந்தியாவில் ஒரு கட்டுமான பொருளாக

1. வீட்டின் முகப்பு சுவர்களாக (Front Elevation wall)

2. வீட்டின் கூறைகளாக பேனல்களின் அளவிலேயே பொருத்தலாம்.

3. மக்கள் தங்கள் வைஃபை பாயிண்ட்களைபயன பயன்படுத்த பேனல்களை பயன்படுத்தலாம்.

எவ்வாறாயினும்பேனலின் பின்புறத்தை சேதப்படுத்துவதையோ, உடைப்பதையோ அல்லது அதை உரிக்க முயற்சிப்பதையோ முடிந்தவரை மக்கள் தவிர்க்க வேண்டும்

கூடுதல் ஆதாரங்கள் பெற :-

1. யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆபிஸ் ஆஃப் எனர்ஜி எஃபிஸியன்ஸி மற்றும் ரின்யூயபில் எனர்ஜி

(United States office energy efficiency and renewable energy)

2. ஜேக்கப் கோஷியின் "சூரியக் கழிவுகளை கையாளும் இந்திய கொள்கை"

(India Lacks Solar waste Handling Policy by Jacob Koshy) published on 17.2.2022 courtesy The Hindu

3. மகாஸ்ரீ ரஞ்சித் குமாரின் "தி ஆஃப்டர் லைஃப் ஆஃப் சோலார் பேனல்கள்" 23.5.22 அன்று தி வயர் மூலம் வெளியிடப்பட்டது.

(The After-life of solar Panels by mahashri Ranjith Kumar. Published 23.5.2022 Courtesy: The wire.

Stories