ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சகோதரிகள் நிகிதா (Nikitha) நிஷிதா (Nishitha) 2019 - ஆண்டில் "நெக்ஸஸ் பவர்ஸ்" (Nexus Powers) என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர். மின்சார வாகனங்களின் பயன்பாட்டில் உள்ள விலை உயர்ந்த லித்தியம் அயான் (Lithium Ion) பேட்டரிகளுக்கு மாற்றாக விவசாய கழிவுகழிவிலிருந்து குறைந்த விலை உள்ள நானோ பாட்டரிகளை (Nano Batteries from Crop Residue) கண்டுபிடித்து, வடிவமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தனித்துவமான சாதனை படைத்துள்ளனர்.
நானோ பாட்டரிகளின் செயலாக்க தத்துவம்:-
மிகச்சரியாக கூறவேண்டுமானால் ஒடிஸா சகோதரிகளின் பாஸ்ட் சார்ஜ் பேட்டரிகளில் கருத்து உயிர் ஆர்கானிக் (Bio - Organic) மற்றும் பயோ சிதைவுரும் (Bio - Degradable) தன்மையால் அமைந்தது.
நெக்ஸஸிருந்து தனியுரிம பேட்டரி தொழில்நுட்பம் தனித்துவமான வேகமான மீளுருவாக்க (Regenerative) பண்புகளைக் கொண்டு உயிர் கரிமநானோ (Bio - Organic Nano Materials) பொருட்களே பயன்படுத்துகிறது இவை பேட்டரியின் வளர்ச்சி கட்டமைப்பிற்கான பயோ மிமிக்கிரி மற்றும் தொழில்துறை சூழலியல் (Bio Mimicry and Industrial Ecology) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் மின்முனைகள் மற்றும் எலக்ட்ரோலைட் ஆகிய இரண்டிற்கும் உயிர் சிதைக்கக் கூடிய (Bio -Degradable) தன்மையை அளிப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்படைவதை முழுவதுமாக தவிர்க்கிறது.
இத்தகைய பட்டரிகளின் தயாரிப்பு ஆரம்பத்திலிருந்து முடிவு வரையில் முழு செயல்முறையும் எந்தவிதமான கழிவுகளையும் விட்டு விடுவதில்லை. பயிர் எச்சத்தில் இருந்து தயாரிக்கப்படும் விரைவான நானோ பொருட்கள் முழுமையாக மறுசுழற்சி செய்யக் கூடியவை (Recyclable).
பேட்டரியில் உள்ள கலங்கள் தொடர் சுற்று மற்றும் (Series) இணையான சுற்று (Parellel) முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் தேவையான மின்னழுத்தம் (Volt) மற்றும் விரைவான சார்ஜ் செய்ய முடிகிறது.
"நெக்ஸஸ் பவர்ஸ்" நானோ பாட்டரிகளின் சாதகங்கள்:- (Advantages)
1. லித்தியம் பேட்டரிகளின் விலையில் பாதியளவே.
2. 10 மடங்கு விரைவாக மின்னேற்றம் (Charge) செய்கிறது.
3. லித்தியம் பாட்டரிகளுக்கு மாற்றாக எளிதில் அழியக்கூடியது (Bio - Degradable).
4. லித்தியம் பேட்டரிகளை விட 30 % க்கும் மேல் வாழ்வுடையது, (Life Span)
5. விலையில்லா விவசாய கழிவிலிருந்து நானோ பொருட்கள் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படுகின்றன.
6. விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்கப்படுகிறது.
Address:
N4/F-38, IRC Village Bhubaneswar – 751015 Odisha, India
Phone:
+91 674 3550113
+91 85990 95257
Email:
office@nexuspower.in
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.