August 24, 2021

விவசாயக் கழிவிலிருந்து வருமானம்

இந்தியாவின் தலைநகர் தில்லியில் 50 சதவீத மெய் நிகர் எரிவாய்வு மாசு (Virtual Gas Pollution) விவசாய நில குப்பைகள் (Stubble) எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது என 2019 - ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி வெளியீடு கூறுகிறது. இந்த குப்பை எரிப்பு நடைமுறை (Stubble Burning) உச்சநீதிமன்றத்தால் சட்டவிரோதம் என்று தடை செய்யப்பட்டு.

புதிய பயிர்களுக்கு வழி வகுப்பதற்காக விவசாய நிலங்களை எரிப்பதன் மூலம் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து குப்பை எரிக்கும் முறை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது உருவாக்கும் புகை துர்நாற்றம் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் அபாயகரமான காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தங்களது குப்பை எரிப்பு முறையிலிருந்து விடுபட மலிவான மாற்றுவழிகள் இல்லாமல் விவசாயிகள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனால் வருடா வருடம் சடங்காக இப்பகுதியில் புகைமூட்டம் தொடர்கிறது.

இதற்கு விடிவாக திரு. ஆயுஷ அகர்வால் (Mr.Ayush Agarwal) மற்றும் திரு.அரு மங்கலா (Mr.Aru Mangela) நண்பர்கள் இணைந்து விவசாய நில குப்பைகளை உயரியாக (Stubble to Bio Mass) மாற்றும் தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த முறை ஸ்டார்ட் அப் இந்தியா அகடமிக் அலையன்ஸ் (Startup India Academic Alliance) மற்றும் பெண் தொழில் முனைவோர் மற்றும் அதிகாரம் அளித்தல் (Women Entrepreneurship Empowerment) திட்டத்தின் கீழ் தீ எனர்ஜி அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (TERI) மற்றும் (IIT Delhi) ன் சான்றளிக்கப்பட்டது.

(Rene You Green Tech Pvt.Ltd) 2017- ஆம் ஆண்டு "ரென்னி யூ கிரீன்டெக் பி.லிட்" என முறையாக பதிவு செய்யப்பட்டு, 2019- ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியாக தனித்துவமான தொழில்நுட்பத்துடன் இயந்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நெல் வைக்கோல், கரும்பு எச்சம் (அதாவது ஸ்டபில்) போன்ற பண்ணை கழிவுகளை உயர்தர உயிரியல் வளங்களாக மாற்றுகிறது. அவை மின்நிலையங்களில் எரிபொருளாக, அல்லது மூலப்பொருளாகவும் காளான் வளர்ப்புக்கான உயிரியாகவும் உயிரை வைக்கவும் எருவாகவும் (Bio Gas) கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த இயந்திர தொகுப்பில் கட்டர், ரேக்கர் மற்றும் பேலர் (Cutter, Raker and Baler) ஆகியவை அடங்கும். வைக்கோலை வெட்டிய பிறகு வைக்கோலை வரிசையாக சீரமைக்க ஒரு ரேக்கர் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் ஒரு பேலர் இயந்திரம் கழிவுகளை கச்சிதமான சதுர பேல்களாக அமுக்க பயன்படுகிறது. அத்தகைய பேல்கள் கையாளவும் போக்குவரத்து மற்றும் சேமிப்பதற்கு சாத்தியமாக்குகிறது. இயந்திரம் ஒரே நாளில் சுமார் 30 டன் விவசாய கழிவுகளை பதப்படுத்த முடியும். அதாவது 10 ஏக்கர் நிலத்தில் உருவாக்கும் விவசாய குச்சிகள் மற்றும் கழிவுகள் (Stubbles) பயன்பாடு உயரியாக (Bio Mass)  மாற்றக்கூடிய இயந்திரத்தின் விலை தற்போது சுமார் ரூ.15 லட்சமாக இருப்பதினால் பல விவசாயிகள் ஒன்றிணைந்தோ அல்லது கூட்டுறவு அமைப்பு முறையிலோ எளிதாக பயன்படுத்த முடிகிறது. அதாவது விவசாயிகள் ஊடுருவல் முறை மனமாற்றம் (Process of making Inroads) மெது வானதாக ஆனால் நிலையானதாக உள்ளது.

குப்பைஎரிக்கும் முக்கிய பிரச்சினை ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் மட்டுமல்ல மண்ணின் வளத்தையும் பாதிக்கிறது. ஒரு அறிக்கையின்படி 1 டன் எச்சத்தை எரிப்பதால் ஹைட்ரஜன் 5.5 கிலோ பாஸ்பரஸ் 2.3 கிலோ மற்றும் பொட்டாசியம் 25 கிலோ வரையில் குறைக்கிறது மேலும் எரியும் வெப்பம் மண்ணை பாதிக்கிறது.

இந்த நிறுவனத்தின் இறுதி நோக்கம் அதன் வரம்பை விரிவுபடுத்துவது மற்றும் எரியும் வழக்கமான நடைமுறையை முடிந்த வரையில் குறைப்பதாக உள்ளது என்பது பாராட்டத்தக்கது

RY ஆற்றல்களுடன் தொடர்பு கொள்ள

Address: SIIF Office, SSCBS Building, Dr KN Katju Marg, Sector 16, Rohini, Delhi, 110089

connect@reneyou.in

 
Stories