September 18, 2020

ரெஜினோ (Regeno) மக்கும் பைகள்

திரு.சிபி. செல்வன் (Mr.Cibi Selvan) கோவை மாவட்டம் திருப்பூரைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை ஊட்டியிலும் பட்டப்படிப்பினை சென்னை லயோலா கல்லூரியிலும் பட்ட மேற்படிப்பு அமெரிக்காவிலும் பயின்றவர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் தானியங்கி வாகன உதிரி பாகங்கள் (Automoblie Spare Parts)தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய பின் பிறந்த இந்தியாவில் அழிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பிகைக் குறைக்கும் வகையில் எளிதில் அழியக் கூடிய "ரெஜினோ" (Regeno Bags) பைகளை உருவாக்கியுள்ளார்.

இளம் தொழில் முனைவர் (Entrepreneur) திரு.சிபி.செல்வன் அமெரிக்காவில் பணியில் இருந்தபோதே இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை மேற்கொண்டவர் இந்தியா திரும்பியவுடன் டிசம்பர் 2016 - ல் "ரெஜினோ" என்ற நிறுவனத்தை துவங்கி அதே பெயரில் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக அழியக்கூடிய "ரெஜினோ" பைகளை சந்தைப் படுத்தியுள்ளார்.

 

" ரெஜினோ" (Regeno) பைகள்:

- "ரெஜினோ" பைகள் தாவர ஸ்டார்ச் வகைகளான மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம் மற்றும் மக்காச்சோளக் கழிவுகள் (Corn Cobs), காகிதக் கழிவுகள் (Paper wastes) மற்றும் உலர்ந்த தாவரக் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

- எளிதாக எரியக் கூடியது மற்றும் சுடு நீரில் கரையக்கூடியது

- மண்ணில் வீசப்பட்ட "ரெஜினோ" பைகள் மூன்று மாதத்திற்குள் அழிந்து மண்ணோடு மண்ணாகி எருவாகிறது (Compost).

- தவறுதலாக விலங்குகள் உண்ணுவதால் எந்தவிதமான தீங்கையும் விளைவிக்காது. மாறாக தாவரங்களைக் கொண்டு "ரெஜினோ" பைகள் தயாரிக்கப்படுவதால் எளிதாக ஜீரணிக்கப் படுகிறது.

பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீயவிளைவுகள்:

- இந்தியாவின் நகரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் 15 ஆயிரம் டன்கள் வரையில் சேகரம் ஆகின்றது.

- பிளாஸ்டிக் என்பது பல வகையானது அவற்றில் சில பாலி புரோபைலீன் (Poly Propylene PP) பாலி எத்திலீன் (polyethylene PE)

- பாலி வினைல் குளோரைடு (Poly Venyl Chloride Pvc)

- அடர் பாலி எதிலின் (HDPE) Heavy Density Poly ethelene

- நைலான் பாலிமைட்ஸ் (Nylon Polymides)

- பாலி டெராப்தலேட்ஸ் (Poly tereph thalates PET)

- பாலி மீத்தைல்க்ரைலேட் (polymethyl crylate)

இவைகள் அனைத்தும் பைகளாகவும், தட்டுகள் ஆகவும், கப்புகளாகவும், குழாய்களாகவும் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்படுகின்றன. இவைகள் அழிவதற்கு 500 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகின்றது. ஆண்டொன்றுக்கு சுமார் 500 பில்லியன் டன்கள் உலகம் எங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து மிகப்பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்துகிறது.

- பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர்க்குழாய்கள் அடைப்பட்டு கழிவுநீர் தேக்கம் அடைந்து கொசுக்கள் உற்பத்தி பெருகியும் பலவிதமான நோய்கள் உருவாக்கி வருகின்றது.

- பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பல கால்நடைகள் தினமும் மரணிக்கின்றன.

- பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வீசப்படுவதால் பல லட்சம் கடல் பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மரணிக்கின்றன.

- பிளாஸ்டிக் கழிவுகள் பூமிப் பந்தினையே மொத்தமாக மாசுபடுத்தும் நிலையில் அதை தவிர்க்க ஒரு துவக்க அளவிலான மாறுதலை "ரெஜினோ" ஏற்படுத்துகின்றது.

உற்பத்தியில் தடைக்கற்கள்:

1. பொது மக்களை எளிதாக மாற்றுவது என்பது எளிதாக இல்லை.

2. ஒரு பிளாஸ்டிக் பை தயாரிக்க சுமார் 1 ரூபாய் செலவாகிறது என்றால் நன்மை பயக்கும் "ரெஜினோ" பை தயாரிக்க சுமார் 1.50 செலவாகிறது. தற்சமயம் "ரெஜினோ" பைகள் சிறிது விலை அதிகமானாலும், பயன்பாடு அதிகரிக்கும் போது உற்பத்தி செலவு மிகவும் குறையும் என்பது திண்ணம்.

உலக உயிர்களின் பொதுவான நன்மையைக் கருதி பெருமளவில் "ரெஜினோ" பைகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகள் தீங்கினை தவிர்ப்பது நல்லறிவுப் பூர்வமான செயலல்லவா?.

சமூகநலனை அடிப்படையான
செயலாக் கொண்ட "ரெஜினோ" நிறுவனம் வளர்க !

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories