June 26, 2021

"மடகாஸ்கர் விவசாயமுனற" (Madagascar Farming Method)

இந்திய விஞ்ஞானி திரு.டெபாஷிஷ் சென் (Mr.Debashish Sen) 2006 ஆம் ஆண்டு முதல் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு "சிஸ்டம் ஆஃப் ரைஸ் தீவிரப்படுத்தல்" (System of Rice Intensification) (SRI) தொழில்நுட்ப முறையினை அறிமுகப்படுத்தினார்.

இது முதலில் 1980- களில் மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறையை பிரெஞ்சு ஜேசுட் என்ற பாதிரியாரும் (French Jesut Priest) விவசாயியுமான திரு.ஹென்றி டி லாலாணி (Mr. Henri De Laulane) கண்டுபிடித்தார். இந்த முறையை கார்னெல் பல்கலைக் கழகத்தின் (Cornell University) உணவு மற்றும் வேளாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் இயக்குனர், பேராசிரியர் திரு. நார்மன் உஃபாஃப் (Mr.Norman Uphoff) உலகம் முழுவதும் எடுத்துச் சென்றார்.இந்த விவசாய தொழில்நுட்பத்தை “மக்கள் அறிவியல்” நிறுவனத்தின்
(People Science Institute (PSI)) இயக்குனர் திரு. டெபாஷிஷ் சென் அவரது வேளாண் நிபுணர்களின் குழுவுடன் இணைந்து உத்தர்காண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தை மையமாகக் கொண்ட விவசாயிகளுக்கு 2006 - ஆண்டிலிருந்து பயிற்சி அளித்து கொண்டிருக்கின்றனர்.மடகாஸ்கர் விவசாய முறையில் சிஸ்டம் ஆஃப் ரைஸ் தீவரப்டுத்துதல் குறைந்த நீர் மற்றும் விதைகள் தேவைப்படுகின்றன. ஆனால் உற்பத்தியை இரட்டிப்பாக அதிகப்படுத்துகின்றன. ரசாயன உரங்களை குறைப்பதன் மூலமாகவும் மண், நிலத்தடி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்துவதையும் மையமாக கொண்டுள்ளது. முதலில் நெல் சாகுபடியில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இம்முறை படிப்படியாக கோதுமை, மக்காச்சோளம் ராஜ்மா மற்றும் பருப்பு உள்ளிட்ட பிற பயிர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மடகாஸ்கர் விவசாயமுறை படிப்படியான செயல்பாடு:


- நாற்றுக்களை வளர்க்க நர்சரி படுக்கைகள் உருவாக்கம்

- நாற்றை சுற்றி உரம் தடவி நெல் வைக்கோல் அல்லது வேளாண் கழிவுகளால் தழைக்கூளம் அமைப்பு

- இரண்டு இலைகள் தோன்றும் வரை தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

முளைப்பதற்கு சாக்குப் பைகளை பயன்படுத்தலாம்

- நிலம் தயாரிக்கும் செயல்முறை வழக்கமான முறையை போன்றதே

- விதை வகை மற்றும் மண்ணின் நிலைமைகளை பொருத்து நாற்றுக்களை 25 செ.மி அல்லது 10 அங்குல தூரத்தில் பிரதான வயலில் நடவும். மண் சத்தானதாக இருந்தால் இடைவெளியை அதிகரிக்கவும்.

- ஜீவாம்ருதா, பஞ்சகவ்யா போன்ற கரிம உரங்களை (Organic Fertilizer) பயன்படுத்துங்கள்

- இந்த முறையின் முக்கியமான அம்சம் தாவரங்கள்

- 7-8 நாட்கள் (ஒரு நாற்றுக்கு 2 இலைகள்) இருக்கும்போது நடவு செய்வது தான்.

வழக்கமான முறையில் 30-60 நாட்களுக்கு பிறகு என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முக்கியமான படி வளர்ச்சி சுழற்சியின் முக்கியமான கட்டங்களில் மட்டும் தண்ணீர் கொடுப்பது.

நிலத்தை மாற்று உலர்த்துதல் மற்றும் ஈரமாக்குதல் காரணமாக, நீர் பயன்பாடு 40-50% குறைக்கப்ட்டு நுண்ணுயிர் செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது அதாவது நாற்றுக்கள் உயரம் குறைவாக இருப்பதால் மண்ணில் விரிசல்களை பார்க்கும் போது தான் தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

திரு. டெபாஷீஷ் சென் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த முறை பல தானிய உற்பத்தி திறன் மேம்பாடு, குறைந்த உள்ளீட்டு செலவுகள் (Input Costs) அதிகரித்த வருமானம் முதல் வறட்சி பின்னடைவு சமாளிப்பு வரை முறைப் படுத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள சிறிய அளவிலான விவசாயிகள் இதை செயல்படுத்தினால், அவர்களின் விலைச்சல் 20-30% வரை அதிகரித்து விவசாயிகளின் துயரத்தை தணிப்பதில் எஸ். ஆர்.ஐ (System of Rice Intensification) நீண்டதூரம் நிச்சயமாக செல்லும் என்பதில் ஐயமில்லை.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories