November 26, 2020

“நா பண்டா" விவசாயிகளுக்கான புதிய தகவல் தொழில்நுட்பம்

ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்த திரு.நவின்குமார் (Mr.Naveen Kumar) டிசம்பர் 2016 ஆண்டில் ஒரு நாள், வாரங்கல்  (Warangal) ல் உள்ள தனது சொந்த ஊர் ஹனம்கொண்டா (Hanam Konda) விற்கு பயணம் மேற்கொண்டார். அந்த பயணம் அவரது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்று அவர் அப்போது அறியவில்லை.

அவர் ஊருக்கு சென்றபோது ஒரு விவசாயி பூச்சுக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து இறந்து கிடந்தது அவரை பெரிதும் பாதித்தது. அந்த விவசாயி ஒரு விதை வியாபாரியால் ஏமாற்றப்பட்டு கலப்படமான பருத்தி விதையை விதைத்து விளைச்சல் முழுவதுமாக பாதிக்கப்பட்டதால் பெருத்த நஷ்டம் அடைந்து கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.



இத்தகைய விவசாயிகள் மரணம் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்றாலும் திரு. நவீன் குமாரினை அவரது ஊரின் விவசாயி மரணம் பெரிதும் பாதித்தது. அந்த நிகழ்வு "நாபண்டா" (Na Panda) என்ற விவசாயத்திற்கான தகவல் தொழில்நுட்பம் தோன்றவும் காரணமானது.

கலப்படமான விதைகள், பொய்யான உரங்கள், மற்றும் மற்ற ஏமாற்றுகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் "நாபண்டா" தகவல் தொழில்நுட்பம் மூலம் அனைத்து தகவல்களும் பெற்று முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற முடிகிறது. "நா பண்டா" தகவல்களைப் பெற இலவசமாக அலைபேசியி கம்ப்யூட்டரிலும்  பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். இதனை AIP - ICRISAT மற்றும் IIT, ஹைதராபாத், உதவி செய்து உறுதிப்படுத்துகிறது.

"நா பண்டா" அளிக்கும் தகவல்களில் சில:

- விதை, உரம், பூச்சி மருந்துகள் பற்றிய தகவல்கள்

- 3500 க்கும் மேற்பட்ட சந்தைத் தகவல்கள்

- சந்தைப்படுத்தப்படும் 300 ககும் மேற்பட்ட விவசாய பொருட்கள் பற்றிய   தகவல்கள்.

- அனைத்து விவசாயப் பொருட்களின் இருப்புகள், தேவைகள் மற்றும் தரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் அளிக்கிறது.

- வானிலை அறிக்கைகள், தட்பவெட்பநிலை, மழை அளவுகள், பற்றிய தகவல்கள்.

- பயிர் காப்பீடு (Crop Insurance) தகவல்கள், குளிர்பதன கிடங்குகள், விவசாய பொருட்களின் டீலர்கள் பற்றிய தகவல்கள் உள் மாநிலம் மற்றும் வெளி மாநிலங்கள் அளவில் தகவல்கள் அளிக்கிறது.



"நா பண்டா" அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில் 50,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்பு வளையத்திற்குள் இணைந்துள்ளனர். தற்சமயம் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தகவல் அளிக்கிறது விவசாயிகளுக்கு உதவும் வகையில் அனைத்து இந்திய மொழிகளிலும் தகவல் அறிய தொழில்நுட்பம் விரைவில் விரிவுவுபடுத்த உள்ளதாக திரு. நவீன்குமார் கூறுகிறார்.

தற்சமயம் 1,17,0000 இந்திய விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் "நாபண்டா" வின் விவசாயிகளின் பயனுள்ள விரிவாக்கமாக உள்ளதை உறுதி செய்கிறது.

சுருக்கமாக கூறுவதானால் "நா பண்டா" ஒரு விவசாய அகராதி (Agricultural Encyclopaedia) என்றால் அது மிகையாகாது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories