May 13, 2022

நவீன விவசாயிகளுக்கு புதிய வரப்பிரசாதம் "மின்சார காளை"

" உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்பது தமிழ் செலவடை. அது பெரும்பாலும் உண்மையும் கூட. இயற்கை சீற்ற இடர்பாடுகள், விளைவித்த பொருட்களுக்கு சரியான விலை இன்மை, உன்ளீடுகளின் தொடர்ந்த விலை ஏற்றம், விவசாய மனித சக்தியின் குறைபாடுகள் ஏனைய விவசாயம் சார்ந்த இடர்பாடுகள் இருந்தாலும் விவசாயிகள் தொடர்ந்து உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அறிவோம்.



விவசாயிகளின் துயர் துடைக்க பல்வேறு துறைகளில் பலர் பல முயற்சிகளை முன்னெடுத்து தொழில் முறையாகவும் சேவையாகவும் செய்து வருகின்றனர்.

இந்த வகையில் அன்டார்சுல்கிராமத்தை சேர்ந்த தொழில் துறை பொறியாளர் திரு.துக்காராம் சோனாவானே மற்றும் திருமதி. சோனாலி வெல்ஜாலி இருவரும் இணைந்து விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் "மின்சார காளை" (Electric Bull) என்ற விவசாய உபகரணத்தை வடிவமைத்து சந்தைப்படுத்தி யுள்ளனர். பெரும்பாலான விவசாய கிராமங்கள் விவசாய வேலைக்கு கால்நடைகள் மற்றும் தொழிலாளர்களையே சார்ந்து இருக்கிறது. கால்நடைகள் மற்றும் உழைப்பு (Labour) விலை அதிகம். மேலும் 1/2 ஏக்கர் அல்லது 1 ஏக்கர் நிலம் உள்ள சிறு குறு விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.



உழுதல், விதைத்தல், களையெடுத்தல், பூச்சிக்கொல்லிகளை தெளித்தல், அருவடை செயல்முறைகள் பொதுவாக தொழிலாளர்களின் உதவியுடன் கைமுறையாக தான் செயல்படுகின்றன. மேலும் காளைகளை பராமரிப்பதற்கு விலை அதிகம் என்பதால் அவற்றுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் எந்த ஒரு செயல் முறை சங்கிலியிலும் ஒரு வாரம் தாமதம் ஏற்பட்டாலும் அறுவடை நேரத்தை நேரடியாக பாதிக்கிறது. இதன் விளைவாக மோசமான விற்பனை ஏற்படுகிறது அதாவது நல்ல விலை கிடைப்பதில்லை.

இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக பொறியாளர் தம்பதியினர் ஒரு புதுமையான
"எலக்ட்ரிக்காளை" ஒன்றை உருவாக்கி உள்ளனர் இந்த இயந்திரம் பண்ணை நில உழவுக்குப் பின்னர் விதைப்பது முதல் அறுவடை வரை அனைத்து பராமரிப்பு பணிகளையும் கவனித்துக் கொள்கிறது. அதாவது உழுவதைத் தவிர அனைத்து வேலைகளையும் செய்து விவசாயிகளுக்கு உதவுகிறது.

"மின்சார காளை" செயல்பாடுகள், மற்றும் சிறப்புகள்:

1. அனைத்து வகையான உணவு தானிய பயிர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றில் செயல்பாடுகளை வழங்கும் முதல் "அச்சு" (Axis) இல்லாத வாகனம்.

2. சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியால் இயங்கக்கூடியது.

3.வாகனத்தை எந்த சிங்கிள் பேஸ் யூனிட்டிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

4. முழு சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

5. முழு சார்ஜ் செய்யப்பட்ட "மின்சார காளை" தொடர்ந்து 4 மணிநேரம் செயலாற்றும்..

6. ஒரு நபரால் மட்டுமே இயக்க வல்லது.

7. வழக்கமான விவசாய முறையில் 2 ஏக்கர் நிலத்தில் அனைத்து பராமரிப்பு பணிகளையும் செய்ய சுமார் 50,000 ரூபாய் வரையில் தேவைப்படுகிறது ஆனால் "மின்சார காளை" கொண்டு செய்யும்போது  ரூ. 5000 /- மட்டுமே தேவைப்படுகிறது இதன்படி வேலை 1/10 ஆக குறைகிறது.

8. "மின்சார காளை" இயந்திரம் புனேவில் உள்ள "செண்டர் ஆஃப எக்ஸலன்ஸ் மோஷன்" - ன் பாராட்டைப் பெற்றது.

"மின்சார காளை" இயந்திரம் "க்ரிஷிகட்டி பிரைவேட் லிமிட்டெட்" என்ற துவக்க அமைப்பின் (StartUp) மூலம் விற்கப்படுகிறது.

இவர்களின் புதுமையான இயந்திரம் ஏற்கனவே பல கோரிக்கைகளை இந்தியா முழுவதும் பெற்றுள்ளது மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் சுமார் 300 விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள விளிம்புநிலை விவசாயிகளுக்கு சேவை செய்வதை இலக்காகக் கொண்டுள்ள பொறியாளர் தம்பதிகள் பணிவுடன் கூறுகையில் " எங்கள் பொறியியல் திறன்களை பயன்படுத்தி விவசாயிகளுக்கு உதவ மட்டுமே நாங்கள் முயற்சித்தோம். சமூகம் மதிப்பு மிக்க உள்ளீடுகளை புரிந்துகொண்டது மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிப்படுத்தியது ஆகிய புள்ளிகளை இணைத்தோம் ". அவ்வளவுதான் என்கின்றனர்.

"இன்ஜினியரிங் என்பது பிரச்சனைகளை தீர்த்து தீர்வை கொண்டு வருவதில் தானே துவங்குகிறது"

உலக விவசாயிகளின் தலைவிதியை சிறப்பாக மாற்ற உதவும் திரு. துக்காராம் சோனாவானே மற்றும் திருமதி. சோனாலி வெல் ஜாலி பொறியாளர்களின் பணிகள் தொடரட்டும் !! 

Website:

http://www.krishigati.com/

  • Software Technology Parks of India, Electronic Sadan-III, MIDC, Bhosari - Pune 411026
  • krishigati@gmail.com
  • +91 8087323146

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories